சிவகார்த்திகேயன் -அதிதி ஷங்கர் சீக்ரெட் டீலிங்!
சிவகார்த்திகேயன் -அதிதி ஷங்கர் சீக்ரெட் டீலிங்!
ஜூலை 14-ஆம் தேதி ரிலீசான சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ பத்து நாட்களில், அதாவது ஜூலை 25-ஆம் தேதி வரை 75 கோடி ரூபாய் கலெக்ஷன் பண்ணியிருப்பதாக, தயாரிப்புத் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ”அது உண்மை தான் என்றாலும் அந்த உண்மைக்குப் பின்னால் ஒரு ரகசியம் இருக்கு” என்றார் தயாரிப்புத்தரப்பிலிருக்கும் நமது நண்பர் ஒருவர். “சொல்லுங்க, சொல்லுங்க, நமக்கு ரகசியம் தாங்க முக்கியம், ரசனையா முக்கியம்?” என்றோம்.
இப்ப சூப்பர் ஹிட்டாகியிருக்கும் ‘மாவீரன்’ கதைக்கு முன்னால் வேறு ஒரு கதையைத் தான் சிவகார்த்திகேயனிடம் டைரக்டர் மடோன் அஷ்வின் சொன்னார், ஏதோ ஒரு நினைப்பில் சிவாவும் ஓகே சொல்லி, முக்கால்வாசி ஷூட்டிங்கும் முடிந்த பிறகு தான் கதை போன போக்கு சிவாவுக்கு ஒத்துவரவில்லை. கதையில் பல மாற்றங்களைச் செய்ய வேண்டியம் கட்டாயம் டைரக்டருக்கு.
இதனால் கிட்டத்தட்ட ஏழு கோடி செலவு செய்து எடுத்திருந்த படத்தைத் தூக்கிப் போட வேண்டிய கட்டாயம் தயாரிப்பாளர் அருண்விஸ்வாவுக்கு. அதன் பிறகு தான் இந்த ‘மாவீரன்’ கதை செட்டாகி, தயாரிப்பாளரைக் காப்பாற்றியிருக்கு. இதான் போஸ்ட் ரிலீஸ் ரகசியம். இதவிட ரகசியம் என்னன்னா, படத்தின் ஷூட்டிங்கின் போதும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடக்கும் போதும் ஹீரோயின் அதிதியிடம் அவரின் அப்பா டைரக்டர் ஷங்கரைப் பற்றி எப்போதும் பிரமிப்பாக புகழ்ந்து கொண்டே இருப்பாராம் எஸ்.கே.
“அப்பாகிட்ட என்னைப் பத்திச் சொல்லுங்க, எப்படியாவது அவரோட டைரக்ஷன்ல நடிச்சிரணும்கிறது தான் என்னோட ஆசை, லட்சியம், கனவு எல்லாமே. இதையும் அழுத்தமா சொல்லுங்க. நான் கமிட்டாகப் போகும் அடுத்த படத்துல நீங்க தான் என்னோட ஹீரோயின்” என சீக்ரெட் பிட்டைப் போட்டாராம் சிவகார்த்திகேயன். ”அது சரி, ரெண்டு பேரு மட்டும் பேசிக்கிற சீக்ரெட் ஒங்களுக்கு மட்டும் எப்படிய்யா கேட்குது”ங்கிற உங்க மைண்ட் வாய்ஸ் கேட்கத்தான் செய்யுது. ஒங்களோட மைண்ட் வாய்ஸே கேக்கும் போது, சினிமா சீக்ரெட் கேக்காமலா போகும்?
-மதுரை மாறன்