சிவகாசி பட்டாசு ஆலை விபத்து தீயில் கருகி இரு பெண்கள் பலி !
சிவகாசி பட்டாசு ஆலை விபத்து தீயில் கருகி இரு பெண்கள் பலி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டி ஊராட்சி மண்குண்டாம்பட்டி கிராமத்தில் உள்ள ஆர். எஸ். ஆர். அமர்ஸஸ் என்ற கேப் வெடி தயாரிக்கும் செயல்பட்டு வருகிறது, இங்கு சிறு குழந்தைகள் பயன்படுத்தும்,
ரோல் கேப் வெடி தயாரிக்க நவீன இயந்திரத்தை வெளிமாநிலத்தில் இருந்து புதிதாக இறக்குமதி செய்து, உற்பத்தி செய்து வந்ததாக கூறப்படுகிறது, அனுபவம் இல்லாத தொழிலாளர்களை வைத்து, கேப் வெடிகளை தயாரித்ததாக கூறப்படுகிறது,
சம்பவத்தின் போது விசுவநத்தம் முருகேஸ்வரி என்ற முருகலட்சுமி (வயது 35), மண்குண்டாம்பட்டி பால சரஸ்வதி என்ற பானு (வயது 39) என்ற 2 பெண் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், திடீரென இயந்திரம் பழுதாகி உராய்வு ஏற்பட்டு மூலப்பொருள் கலவை வெடித்ததில், எதிர்பாராத விதமாக இரண்டு தொழிலாளர்களும், அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் கருகி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
விபத்து குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வெம்பக்கோட்டை போலீசார் தொழிற் சாலையின் மேற்பார்வையாளர் கீழ கோதை நாச்சியார்புரம் கண்ணன் (வயது 43) என்பவரை கைது செய்தனர். மற்றும் தலைமறைவான தொழிற்சாலையின் உரிமையாளர் சிவகாசி சித்துராஜபுரத்தைச் சேர்ந்த சண்முகையா மற்றும் பங்குதாரரான அவரது மகன் மகேந்திரன் ஆகிய இருவரையும் வலை வீசி தேடிவரும் நிலையில் விருதுநகர் மாவட்டகண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் நேரில் பட்டாசு ஆலையை ஆய்வு செய்தார்.
மேலும் இந்த விபத்தில் பலியான இரு பெண்களுக்கும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-B.மாரீஸ்வரன்