சிவகாசி சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் பணியிட மாற்றம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சிவகாசி சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறையின் இணை மேலாண்மை இயக்குனராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.

தமிழ்நாடு சேலம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட ஐஏஎஸ் அதிகாரி பிரியா ரவிச்சந்திரன், இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு குரூப் 1 அதிகாரியாக பணியில் சேர்ந்து தமிழகத்தின் முதல் பெண்  தீயணைப்பு துறை இணை இயக்குனராக பணிபுரிந்தவர்,

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

பிரியா ரவிச்சந்திரன்
பிரியா ரவிச்சந்திரன்

இவரது கணவர் ரவிச்சந்திரன் சென்னை வருமான வரித்துறையில் கூடுதல் ஆணையராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

பிரியா ரவிச்சந்திரன் கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னையில் பொங்கல் பண்டிகையின் போது சேப்பாக்கத்தில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது அப்போது தனது உயிரை பணயம் வைத்து தீயை அணைக்க முயன்று பிரியா ரவிச்சந்திரன் 40% தீக்காயத்துடன் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார்.

சிவகாசி வட்டாட்சியர் அலுவலகம்
சிவகாசி வட்டாட்சியர் அலுவலகம்

அப்போது இவரது செயலை பாராட்டி ஜனாதிபதியின் வீர தீர செயலுக்கான விருதும் மற்றும் முதலமைச்சரின் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கடந்தாண்டு ஜூன் 13ஆம் தேதி சிவகாசி சப் கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட பிரியா ரவிச்சந்திரன் சிறப்பாக பணியாற்றி வந்தார். தற்போது அவரை தமிழக அரசு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குனராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

—  மாரீஸ்வரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.