திருச்சியில் ரவுடிகள் அட்டகாசம்-தொடர் கொலை-63 ரவுடிகள் கைது!
திருச்சி மாநகர பகுதி எல்லைக்கு உட்பட்ட இடங்களில் தொடர் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவது அதிகரித்து வந்தது. மேலும் செப்டம்பர் 13ம் தேதி திருச்சி மரக்கடை பகுதி அருகே இருக்கக்கூடிய கல்யாணசுந்தரபுரத்தின் அருகே உள்ள மாநகராட்சி கழிப்பிடத்தில் நிஷாந்த் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மேலும் செப்டம்பர் 15-ஆம் தேதி பொண்மலைப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த சின்ராசு கழுத்தை வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
மேலும் சின்ராசு-வினுடைய கண்ணீர் அஞ்சலி போஸ்டரில்.. “விரைவில்” என்று குறிப்பிட்டு மிரட்டல் விடுக்கும் வகையில் போஸ்டர் ஒட்டினர் சின்ராசுவின் நண்பர்கள்.
இப்படி தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதும், மக்களை அச்சுறுத்துவதும் மாநகரப் பகுதியில் அதிகரிப்பதை அடுத்து திருச்சி மாநகர காவல் ஆணையர் திருச்சி மாநகர எல்லைக்கு உட்பட்ட 14 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது இருக்கிறார். இதன்படி திருச்சி மாநகர பகுதிகளில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகளை உடனடியாகக் கண்டறிந்து பாரபட்சமின்றி கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இப்படி திருச்சி மாநகர பகுதியில் செப்டம்பர் 17ஆம் தேதி அதிரடியாக போலீசார் களமிறக்கப்பட்டனர், இதையடுத்து ஜே ஆர் எஸ் நகர் குமரன் (எ) முத்தமிழ் குமரன், ஆல்பா நகர் ஆனந்த குமரர், கொட்டப்பட்டு மொரைஸ் சிட்டி வீர கணேஷ், ஆர்எம்எஸ் காலணி வீரபாண்டி, ஹேமேஸ்வரன், எடமலைப்பட்டிபுதூர் அன்பிலார் நகர் சுதாகர், புதுதெரு சக்தி, கேகே நகர் கே சாத்தனூர் கலிங்கா நகர் எல்லதுறை, இளங்கோ தெரு முருகானந்தம், கோர்ட காவல் நிலைய கருமண்டபம் புது செல்வா நகர் மணிகண்டன், ஏர்போர்ட் பிள்ளையார் கோவில் தெரு சிவா, சிவநேசன், கோட்டை கல்நாயண சுந்தரபுரம் அருண்குமார், விக்னேஷ், மதுரை ரோடு அருண்மணி, கல்யாணசுந்தரபுரம் மகரஜோதி, காளிஅம்மன் கோவில் தெரு சுபேஷ் சந்திரசேகர், காந்திமார்க்கெட் இபி ரோடு புலித்தேவன், தாராநல்லூர் கார்த்திக், பிள்ளைமாநகர் கிறிஸ்டோபர், பிள்ளைமாநகர் அன்சாரி, பென்சனர் தெரு சந்தோஷ் குமார், பாலக்கரை கோரிமேடு பிரசாந்த், இளங்கோ தெரு அப்துல் ஆசிக், காஜாபேட்டை சூர்யா, ஸ்ரீரங்கம் கீழ அடையவளஞ்சான் செட்டி (எ) சிவகுமார், உறையூர் மின்னப்பம் தெரு சரண்ராஜ், காமாட் சியம்மன் கோவில் தெரு லாடு (எ) வெங்கட்பிரசாத், மின்னப்பன் தெரு செந்தில்குமார், சீனிவாசபுரம் மகாராஜா (எ) பெரியமகாராஜா, தில்லைநகர் தென்னூர் மூர்த்தி, ரகுமானியபுரம் காதர்மொய்தீன், அண்டகொண்டான் விக்னேஷ், அரசுமருத்துவமனை மேல் வண்ணாரப்பேட்டை பாண்டி,சதிஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் நேற்று நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில் 29 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு இரண்டு நாட்களில் திருச்சி மாநகர பகுதிகளில் உள்ள 63 ரவுடிகள் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர்.