அரவணைக்கும் உடன்பிறப்புகள் ; விலகிச்செல்லும் அருண் நேரு!

0

திருச்சி திமுக என்றால் அனைவரின் நினைவுக்கு முதலில் வருவது கே என் நேரு தான். இப்படி திருச்சி திமுகவில் முக்கியமான புள்ளியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக திருச்சி மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்துள்ளார். இந்தநிலையில் அவரது தம்பி கே.என்.ராமஜெயம் நேருவுக்கு பெரும் உதவியாக இருந்தார்.

https://businesstrichy.com/the-royal-mahal/

கே என் நேரு அரசியல் பணியை மேற்கொள்ள, கே.என். ராமஜெயம் குடும்பத்தையும், தொழிலையும், அரசியலையும் என்று மூன்று பணிகளையும் திறம்பட மேற்கொண்டு அண்ணனின் நிழலாக இருந்து வந்தார்.

இந்தநிலையில் கே.என்.ராமஜெயம் மரணத்திற்குப் பிறகு நேரு குடும்பத்தில் யாரும் பெரிய அளவில் அரசியலுக்கு வரவில்லை.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இதையடுத்து திமுக வின் முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு பொறுப்பேற்ற பிறகு மாவட்ட மாவட்ட அரசியலை பார்த்துக் கொள்வதற்கு அருண் நேருவை களத்தில் இறக்கினார், கே.என்.நேரு.

கே.என்.நேரு மாநில அரசியலை மேற்கொள்ள, அருண் மாவட்ட அரசியலில் கலக்கப் போகிறார் என்ற பேச்சு திருச்சி உடன்பிறப்புகள் இடையே பெரிதாக எழுந்தது. மேலும் புலிக்குப் பிறந்தது பூனையாகுமா…. கே என் நேரு 2.o தான் அருண் நேரு, திருச்சி அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாக்குவார் என்றெல்லாம் திருச்சி உடன்பிறப்புகள் புகழ்ந்து தள்ளினர்.

மேலும் கல்யாண பத்திரிக்கை முதல் அனைத்து வகை சுப நிகழ்ச்சிகளிலும் அருண் நேருவின் பெயர் இடம் பெறத் தொடங்கியது. இப்படி ஒவ்வொரு போஸ்டர்களிலும் மு க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கே என் நேரு, அருண் நேரு என்று உடன்பிறப்புகள் அருண் நேருவை திருச்சியின் மூலைமுடுக்குகளில் எல்லாம் தெரியப்படுத்தினர்.

மிகக்குறுகிய காலத்திலேயே திருச்சி மாவட்டத்தில் அனைவராலும் அறியப்பட்ட நபராக அருண் நேரில் மாறினார்.

இதில் மேலும் ஒரு படி சென்று சில உடன்பிறப்புகள் ஸ்டாலினுக்கு எப்படி கே.என்.நேருவோ அதுபோல் அண்ணன் உதயநிதிக்கு இனி அருண் நேரு என்றெல்லாம் வீர முழக்கம் எழுப்பினர்.

Arun Nehru

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஆனால் இவை அனைத்தும் உடன்பிறப்புகளினுடைய எதிர்பார்ப்பாக மட்டுமே இன்றுவரை இருக்கிறது என்பது திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட உடன்பிறப்புகளின் கருத்தாக உள்ளது.

அருண் நேரு ஆரம்பம் முதலே அரசியலில் பெரிய ஈடுபாடு காட்டவில்லை, அருண் நேரு முதன் முதலில் பொது வெளியில் வந்தது முதலே எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் வந்து கலந்து கொள்வார். உடனே சென்று விடுவார், ஆனால் அதன் பிறகு எந்த ஒரு நிர்வாகிகளோடும் பெரிதாக தொடர்பு வைத்துக்கொள்வது கிடையாது. மேலும் நிர்வாகிகளை பார்த்தால் பேசுவதோடு சரி அவர்களோடு நெருங்கிப் பழகுவதில் இருந்து சற்று விலகியே இருந்தார். இப்படி அரசியலில் இருந்து சற்று விலகியவரே ஆரம்பம் முதல் காணப்பட்ட அருண் நேரு போகப் போக சரியாகி விடுவார் என்று எண்ணிய உடன்பிறப்புகள், தற்போதும் கூறுவது அருண் நேரு இன்னும் கள அரசியலோடும், எதார்த்த அரசியலோடும் ஒத்துப் போகவில்லை என்று தான் கூறி வருகின்றனர்.

கே.என்.நேரு ஊரில் இல்லை என்றால் தினமும் காலை அலுவலகம் செல்வது, கட்சியினரின் குடும்ப நிகழ்ச்சிக்கு செல்வது, கட்சி நிகழ்ச்சிக்கு செல்வது, சுப நிகழ்ச்சிகளுக்கு செல்வது மற்றும் துக்க நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொள்வது என்று இருந்தாலும் நிகழ்ச்சிக்கு வருவதோடு முடிந்துவிடுகிறது அருண் நேருவினுடைய அரசியல் ஆர்வம். பிறகு எந்த ஒரு பாலோப்பும் கிடையாது இப்படியே இருந்தால் வருங்காலம் என்ன ஆவது என்று புலம்புகின்றனர் திருச்சியின் உடன்பிறப்புகள்.

மேலும் கே.என்.நேரு அமைச்சராகவும், முதன்மைச் செயலாளராக செயல்படுவதால், இப்போதெல்லாம் பெரும்பான்மையான நாட்கள் சென்னையிலேயே இருக்க வேண்டிய சூழல் இருப்பதால் மாவட்ட அரசியல் கே என் நேரு-வால் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. இந்த நேரத்தில் கூட அருண் நேரு தன்னை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து முன்புபோலவே செயல்படுவதால் திருச்சியின் மத்திய மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்டத்தில் உள்ள தொண்டர்களும் நிர்வாகிகளும் சோர்வடைய தொடங்கியிருக்கின்றனர் என்று நேருவின் அலுவலகத்தில் பேச்சுக்களும் கசிந்து வருகிறது. அதே வேலையில் அருண் நேரு தான் கே என் நேரு நடத்தக்கூடிய பிரம்மாண்ட மாநாடுகள், பொதுக்கூட்டங்களுக்கான திட்டங்களையும் செயல்பாடுகளையும் முன்னின்று கவனிப்பாராம்.

இது குறித்து திருச்சியின் உடன்பிறப்பு ஒருவர் நம்மிடம் கூறியது, கே என் நேரு எப்படி திருச்சி திமுகவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறாரோ, அதுபோல் அருண் நேரு தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். கட்சித் தொண்டர்களுடன் நெருங்கி பழக வேண்டும். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட அவ்வப்போது தான் வந்து தலையைக் காட்டிவிட்டு சென்றார். அதேசமயம் தீவிர தேர்தல் பிரச்சாரமும் செய்ய தவறிவிட்டார். இந்த நேரத்தில் கே என் நேரு சென்னையிலேயே இருக்க வேண்டி உள்ளதால் மாவட்டக் கட்சியின் வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ள அருண் நேரு இன்னொரு நேருவாக செயல் படவேண்டும், இல்லை என்றால் தற்போது சில போஸ்டர்களில் தான் நேருவின் புகைப்படம் விடுபடுகிறது. இதே நிலை தொடர்ந்தால் நிலைமை மோசம் தான் என்றார்.

திமுக மாநாடு தயாரிப்பில் அருண் நேரு


மேலும் அருண் நேரு இன்று வரை அரசியலுக்கு தகுந்தாற்போல் தன்னுடைய ஆடை அணியும் முறையைக் கூட மாற்றிக் கொள்ளவில்லை, விரைவில் மாறுவார் என்று நம்புகிறோம் என்றார்.
இந்த வேலையில் நேருவும் என்ன முடிவில் இருக்கிறார் என்று எங்களுக்கு சரியாக விளங்கவில்லை, நேருவும் வருங்கால அரசியலை கருத்தில் கொண்டு விரைவில் தன்னுடைய அரசியல் வாரிசை முன்னிலைப் படுத்தவேண்டும் என்று கூறினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.