அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்ட Snacks ! ஹோட்டல் தொழில் என்றொரு உலகம் பகுதி –27

திருச்சியில் அடகு நகையை விற்க

ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புக்குப் பின்னர் என்னென்ன தொழில்கள் செய்யலாம் என பார்த்து வருகிறோம். கடந்த இதழில், ரெஸ்டாரண்ட் பற்றி விரிவாக பார்த்தோம்.

இந்த இதழில், ரெஸ்டாரண்ட் வகைகள் குறித்தும் பேக்கரி பற்றியும் பார்ப்போம். ரெஸ்டாரண்ட்கள் – Fine Dining Restaurant, Quick Service Restaurant என இருவகையாக பிரிக்கலாம்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இவற்றுள், Fine Dining Restaurant என்பது ஸ்டார் ஹோட்டல் போல, நமது டேபிளில் ஸ்பூன்,ஃபோர்க், என அனைத்தும் சரியாக வைத்திருப்பதில் இருந்து நமது உணவை ஒவ்வொன்றாக ஆர்டர் செய்வதில் தொடர்ந்து, ஒவ்வொரு உணவாக பரிமாறி, வழியனுப்பும் வரை மெதுவாக நடக்கும். பொதுவாக இவ்வகை ரெஸ்டாரண்ட்டில் உணவருந்த ஒரு மணி நேரம் ஆகும். இவை பெரும்பாலும் மல்டிகுசைன் எனப்படும் அனைத்து விதமான உணவுகளையும் பரிமாறும் உணவகங்களாக இருக்கும்.

Quick Service Restaurant என்பது நாம் ஆர்டர் செய்து சில நிமிடங்களில் உணவு வந்து விடும். நமது சைவ – அசைவ உணவகங்கள் ஆகும். மேலும், இவற்றுள் சில Self Service முறையையும் கடைபிடிக்கின்றன. இவ்வகை ரெஸ்டாரண்டுகளில் நாம் உணவருந்த சராசரியாக 20-30 நிமிடங்களே தேவைப்படும். இதோடு மட்டுமல்லாமல், Fast food எனப்படும் வகை கடைகள், ஆர்டர் செய்த ஓரிரு நிமிடங்களில் உணவளித்து, 10 நிமிடத்தில் மொத்த உணவையும் முடிக்கும் விதமாகவும் இருக்கும்.

https://www.livyashree.com/

இவற்றுள் நாம் எந்த வகை உணவகம் வைக்க வேண்டும், எந்த வகையான வாடிக்கையாளருக்கு உணவளிக்க வேண்டும் என முடிவு செய்து, அதற்கான இடம், மெனு ஆகியவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும். மெனுவை தீர்மானிக்கும் பொழுது பல்வேறு வகையாக நாம் தீர்மானிக்கலாம். மெனுவின் அடிப்படையில் நமது ரெஸ்டாரண்ட் அறியப்படும் அவற்றுள் சில எடுத்துக்காட்டுகள் கீழே…

தமிழ் உணவுகள்

தென்னிந்திய உணவுகள்

வட இந்திய உணவுகள்

ஐரோப்பிய உணவுகள்

குறிப்பிட்ட பிட்சா, பர்கர் வகைகள் மட்டும்.

சாலட் வகைகள் மட்டும்

ஜூஸ் வகைகள் மட்டும்

சாட் ஐட்டங்கள் மட்டும்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

பரோட்டா வகைகள்

தோசை வகைகள்

அனைத்து வகையான உணவுகள்

ஆரோக்கிய உணவுகள்.

என மக்களுக்கும், நமக்கும் பொருந்தும் வகையில் மெனுவை தீர்மானிக்கலாம்.

ரெஸ்டாரண்ட் மட்டுமல்லாமல் உணவுத் தொழிலில், Food Retail sales என்ற வகையில் இயங்கும் மற்றுமொரு தொழில் நமக்கு நன்கு தெரிந்த வியாபாரம் ஆகும். அது பேக்கரி, ஸ்வீட்ஸ் மற்றும் காரம் ஆகும். இவற்றுள் பொருட்கள் தயாராக இருக்கும், வாடிக்கையாளர்கள் வந்து வாங்கிச் செல்வார்கள். இது சில்லரை விற்பனை ஆகும். அதனால்தான், Food Retail sales வியாபாரம் என இதனை வகைப்படுத்துகிறோம். இந்த வியாபாரத்திற்கு FSSAI, இடம், Display counter, பொருட்கள் பாதுகாக்கும் முறை, packing சாதனங்கள், பேக்கரி உபகரணங்கள், மூலப்பொருட்கள், ஸ்வீட் மற்றும் காரம் செய்ய தேவையானவை போன்றவற்றை நன்கு தெரிந்து அதற்கான சரியான ஆட்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இன்றைய காலகட்டதில், வீட்டில் Snacks தீர்ந்து விட்டால் கடையில் வாங்கி வைத்துக் கொள்வது பெரும்பாலான வீடுகளில் பழக்கமாகிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு தீனி என்றால், எப்பொழுதாவது செய்வது அல்லது வாங்குவது ஆகும். ஆனால், இப்பொழுதெல்லாம் அனைத்து நாட்களிலும் வீட்டில் Snacks இருக்கிறது. இந்த வியாபாரத்திற்கு மிகப்பெரிய தேவை உள்ளது. மேலும், இவற்றுள் பெரும்பாலான பொருட்களை 2-3 நாட்களுக்கு மேல் வைத்துக் கொள்ளலாம். சில இடங்களில், சாட் ஐட்டங்கள், ஜூஸ், டீ, காபி போன்றவையும் பரிமாறப்படுகின்றன. சில இடங்களில் உணவகமும், சேர்ந்து உள்ளது.

இந்த வியாபாரம் செய்யும்பொழுது, நமது மெனுவை மிகுந்த கவனத்துடன் தீர்மானிக்க வேண்டும். ஒரு புதிய சமையல் கலைஞர் வந்து நல்லதொரு புதிய உணவு வகையை அறிமுகப்படுத்தலாம் என்பார். அவரை நம்பி மட்டும் நாம் அந்த உணவை அறிமுகப்படுத்தக் கூடாது. ஏதேனும் ஒரு காரணத்தினால் அவர் வேலை மாறிவிட்டாலும், அதனை நாம் தொடர்ந்து செய்யுமளவுக்கு தயார் ஆன பிறகே, அந்த உணவை வாடிக்கையாளருக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

பேக்கரி, ஸ்வீட்ஸ், காரம் போன்ற பொருட்கள், இப்பொழுதெல்லாம், தீபாவளி, ஆயுத பூஜை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மட்டுமல்லாமல், வீட்டு நிகழ்வுகள், அலுவலக மீட்டிங்குகள், சிறிய மற்றும் பெரிய விழாக்கள் ஆகியவற்றிலும் பயணத்திற்கு Snacks என்பது போன்று அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டதால், இந்தத் தொழிலை நல்ல முறையில் தரத்துடனும், சுத்தம் சுகாதாரத்துடனும் செய்தால் மிகுந்த வரவேற்பு உள்ளது.

தொடர்ந்து இன்னும் சில தொழில் வாய்ப்புகளைப் பார்ப்போம்.

—    கபிலன்

முந்தைய தொடரை காண

சாப்பாட்டுத் தொழில் கைவிடாது ! ஹோட்டல் துறை என்றொரு உலகம்! பகுதி –26

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.