தந்தையின் முகத்தில் பாக்ஸிங்…. மகனால் நேர்ந்த கொடூரம் – சேலம் தொழிலதிபர் கைது? வீடியோ
தந்தையின் முகத்தில் பாக்ஸிங்…. மில் அதிபருக்கு மகனால் நேர்ந்த கொடூரம். சேலம் தொழிலதிபர் கைது. சொத்துக்காக தனது தந்தையை, அவரது ஒரே மகன் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த தந்தைக்கு நேர்ந்த கொடுமை இதோ..
தந்தையின் முகத்தில் பாக்ஸிங் கொடூரம்… சிக்க வைத்த வீடியோ.
3.42 நிமிடங்கள் கொண்ட அந்த முதல் வீடியோவில், ஒரு முதியவர் நாற்காலியில் அமர்ந்திருக்க, வாலிபர் ஒருவர் ஆவேசமாக முதியவரை தனது மொத்த பலத்தை பிரயோகம் செய்து ஒரு குத்து சண்டை வீரரை போன்று தனது கைகளால் குத்திக்கொண்டே இருக்க, தன்னை காப்பாற்றிக்கொள்ள கூட இயலாத அந்த முதியவர் முகத்தில் இரத்தம் வலிந்த நிலையில் நாற்காலியில் சாய்கிறார். அப்போதும், இரங்கமில்லா அந்த இளைஞர், விடாமல் தனது காலால் கிக் பாக்ஸிங் போல் முகத்தில் உதைக்கிறார்.
அதைப்பார்த்த ஒரு பெண்ணும், ஆணும் ஓடிவந்து தடுக்கிறார். இவ்வாறாக முடிகிறது அந்த முதல் வீடியோ.
காருக்குள் புகுந்து கொடூர தாக்குதல் அலரவைக்கும் மற்றொரு வீடியோ.
காயமடைந்த அந்த முதியவரை அவரது ரத்தம் ஆடையை மாற்றியபின் முதியவரை, நான்கு பேர் கை தாங்கலாக அழைத்துக் கொண்டு வீட்டு வாசலை முன்புறம் இருந்த கார்களில், ஒரு வெள்ளைநிற காருக்குள் அவரை ஏற்றுகிறார்கள்.
அப்போதும், அந்த இளைஞர் அதிவேகமாக கையில் ஒரு பொருளை எடுத்து வந்து காருக்குள் இருக்கும் அந்த முதியோரை தாக்குகிறார்.
தாக்குதலில் மீண்டும் அந்தப் பெரியவர் காரில் இருந்து கீழே சரிந்து கிடக்கிறார். கார் டிரைவர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அது இளைஞரை பிடித்தாலும் அவர் மீண்டும் மீண்டும் அந்த முதியவரை தாக்குகிறார். தாக்குதலில் தடுக்க வந்தவருக்கும் காயம் ஏற்பட்டது அந்த 1.42 நிமிட வீடியோவில் உள்ளது. பார்ப்பவரை பதற வைக்கிறது.
அந்த வீடியோவை பார்ப்பவர்கள் சமூக வலைத்தளங்களில் தாக்குதல் நடத்தும் நபரை கைது செய்திட கோரிக்கை வைத்து வருகின்றார்கள்.. இந்த விவகாரத்தில் சேலத்தில் மார்டன் ரைஸ் மில் நடத்திவரும் தொழிலதிபர் சக்திவேல் என்பவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாக விசாரித்தோம்..
ஆரம்பத்தில் சேலம் போலீஸார் கைது செய்ததாக தகவல் வர. பின்னரே பெரம்பலூர் போலீஸார் அவரை கைது செய்து விசாரிப்பது தெரியவந்தது.
நாமும் விசாரித்தோம்.
பெரம்பலூர் மாவட்டம், கிருஸ்ணாபுரத்தில் வேல்முருகன் மார்டன் ரைஸ் மில் நடத்தி வந்தவர் அத்தியப்பன் கவுண்டர். இவரது மகன் குழந்தைவேல். குழந்தைவேலுக்கு, ஹேமா என்கிற மனைவியும், சத்திவேல் என்கிற மகனும், சங்கவி என்கிற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இருவரும் அவர்களது குடும்பத்தாருடன் தனியாக வசித்து வருகிறார்கள்,
சக்திவேல் தற்போது அவரது குடும்பத்துக்கு சொந்தமான சேலம் பகுதியில் ரைஸ் மில்லை தனியாக நடத்தி வருகிறார். இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் மாடர்ன் ரைஸ் மில்லின் அருகே உள்ள வீட்டில் குழந்தைவேலுவும் அவரது மனைவியும் தனியே வசித்து வருகிறார்கள்.
தாக்குதலுக்கு காரணம் இதுதான்…
குழந்தைவேலுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. அந்தவகையில் பெரும் பணக்காரர். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக சக்திவேல் தனது தந்தை குழந்தைவேலுவிடம் சொத்தை பாதியாக பிரித்து தர கேட்டு பிரச்னை செய்து வந்துள்ளார்.
அவ்வபோது, இது தொடர்பாக சக்திவேல், குழந்தைவேலிடம் தகராறு செய்வதும், வீட்டில் உள்ள பொருட்களை அடித்து சேதப்படுத்தியும் வந்தாராம். இதுதொடர்பாக குழந்தைவேல் பலமுறை புகார் அளித்தும் போலீஸில் நடவடிக்கையில்லையாம்.
இந்நிலையில் கடந்த 16.2.2024 ம் தேதி காலை சக்திவேல், கிருஸ்ணாபுரத்தில் உள்ள குழந்தைவேல் வீட்டிற்குள் ஆவேசமாக நுழைந்து, வீட்டுக்குள் சோபாவில் அமர்ந்திருந்த முதியவர் குழந்தை வேலை, பார்த்து திட்டிக்கொண்டு, நான் ஊர் முக்கியஸ்தர்களை அனுப்பி சொத்து பிரித்து தர கேட்டு அனுப்பினால், ஆறு மாதமாகட்டும் பார்க்கலாம்னு சொல்லுறியாடா, நீ எனக்கு சொத்து தர்றது” என கூறி தாக்கியது தான் குழந்தைவேல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி வீடியோக்களில் பதிவாகி உள்ளது..
குழந்தைவேல் திருச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அப்போதும் புகாரை பதிவு செய்த பெரம்பலூர் மாவட்ட போலீஸார், வழக்கம்போல குடும்ப பிரச்னை என சமாதானம் பேசி முடித்துவிட்டனர்.
கடைசியாக நடந்த தாக்குதலில், முகத்தில் மூக்கு எழும்பு உடைப்பட்ட குழந்தைவேல், கடந்த சில தினங்களுக்கு முன் இறந்துவிட்டார். அவரது இறப்புக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.
இந்நிலையில்தான் குழந்தைவேலை சக்திவேல் தாக்கிய சி.சி.டி.வி கேமரா பதிவுகளை குழந்தைவேலின் தீவிர விசுவாசிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்கள். அந்த வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன.
இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரில் பெரம்பலூர் மாவட்ட போலீஸார், சேலத்தில் வைத்து இன்று காலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து சக்திவேல் தரப்போ, குழந்தைவேலு மரணத்திற்கும் சக்திவேலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. குடும்பப் பிரச்சனையை சுமுகமாக பேசி முடித்த பிறகும் தொழில் போட்டியின் காரணமாக பழிவாங்கும் நோக்கில் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதாக கூறி வருகிறார்கள்.
இவ்வளவு கொடூரமான தாக்குதலை நடத்திய சக்திவேல் மீது குழந்தைவேல் நேரடியாக புகார் கொடுத்தும் முறையாக விசாரணை நடத்தாமல் போலீசார் மெத்தனமாக செயல்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
சொத்துக்காக சொந்த மகனே ஆசையாய் வளர்த்த அப்பாவின் மீது கொடூரமாக தாக்கும் வீடியோ பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.