“எனக்கு ‘செக்’ வைத்திருக்கிறார் சி.வி.குமார்!–சூது கவ்வும்–2′ விழாவில் சிவா கலகலப்பு!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் & தங்கம் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சூது கவ்வும் 2’ படத்தின் முன்னோட்டம் சென்னை கமலா திரையரங்கில் டிசம்பர் 03-ஆம் தேதி நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இயக்குநர் பா. ரஞ்சித் முன்னோட்டத்தை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

படத்தில் மிர்ச்சி சிவாவுடன் ஹரிஷா ஜஸ்டின், வாகை சந்திரசேகர், ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், கல்கி, கராத்தே கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் மற்றும் ஹரி எஸ். ஆர். ஆகியோர் இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள்.   சி. வி. குமார் மற்றும் எஸ் .தங்கராஜ் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தை தமிழகம் முழுவதும் சண்முகா ஃபிலிம்ஸ் கே. சுரேஷ் வெளியிடுகிறார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

இம்மாதம் 13-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘ சூதுகவ்வும் -2’.

டிரைலர் வெளியீட்டு

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

நிகழ்வில் பேசியவர்கள் தயாரிப்பாளர் தங்கராஜ்

” நானும், சி வி குமாரும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கத் தொடங்கினோம்.‌  நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். அதற்காக இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப்படம் வரும் 13ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும்”.

இயக்குநர் பா. ரஞ்சித், ”தயாரிப்பாளர்கள் சி.வி.‌குமார் மற்றும் தங்கராஜ் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள். படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் ரசிக்கும்படி சுவாரசியமாக இருக்கின்றன. நிச்சயமாக இந்தப்படம் வெற்றி பெறும். ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.

சூது கவ்வும்--2' சென்னை 28 படத்தில் நான் பணியாற்றும்போது மிர்ச்சி சிவாவும் அதில் நடித்திருந்தார். அவருடைய திறமை இன்னும் வெளிப்படவில்லை என்று தான் நான் கருதுகிறேன். நல்லதொரு தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். நிச்சயமாக அவர் வெல்வார் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தயாரிப்பாளர் சி .வி குமாரிடம் வாய்ப்பு பெற்றது தனிக் கதை. நானும் என்னுடைய நண்பரும் இணைந்து எங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அவருக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பி, அதன் மூலமாக வாய்ப்பினை பெற்றோம். அது மறக்க இயலாத நிகழ்வு.  சூது கவ்வும் 2 படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்று தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை தர வேண்டும் என வாழ்த்துகிறேன்”.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

“சூது கவ்வும் முதல் பாகத்தின் கதையை நலன் குமாரசாமி எழுதும்போதே எனக்கு தெரியும். அவர் ஃபாதர் ஆப் டார்க் ஹுயூமர். அவருடைய திரைக்கதை சிறப்பாக இருக்கும்.  சூது கவ்வும் படத்தை நாம் எப்போது வேண்டுமானாலும் பார்த்து ரசிக்கலாம். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி இருக்கிறது. இதற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியும், வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறேன்.சூது கவ்வும்  முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் பெரிய அளவில் வெற்றியைப் பெறும்”.

இயக்குநர் நலன் குமாரசாமி

‘சி வி குமார் ஸ்கிரிப்ட் படித்து அதனை நன்றாக ஜட்ஜ் செய்யக்கூடிய திறமை பெற்றவர். அவர் ஸ்கிரிப்டை மட்டுமல்ல டைரக்டரையும் ஜட்ஜ் செய்யக்கூடியவர். திறமையான இயக்குநர்கள் உருவாகி இருக்கிறார்கள் என்றால் அதில் அவருடைய கணிப்பும் இருக்கிறது.

சூது கவ்வும் 2 படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும்”.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

“அட்டகத்தி படத்திற்கு முன்பு என்னை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு தயாரிப்பாளரிடத்திலும் அறிமுகப்படுத்தி திறமையான இசை கலைஞர் வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டவர் அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா.‌ நான் எப்போதெல்லாம் சோர்ந்து  போகிறேனோ அப்போதெல்லாம் உற்சாகப்படுத்துபவர் மிர்ச்சி சிவா தான்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மிர்ச்சி சிவா நடித்த தமிழ் படம் தான் நான் இசையமைக்க வேண்டிய முதல் திரைப்படமாக இருக்க வேண்டியது.‌ அந்தப் படத்தின் இசை வேறு வடிவமாக இருக்கும் நீ வேண்டாம் என்று நாசூக்காக மறுத்தவர் மிர்ச்சி சிவா.

சந்தோஷ் நாராயணன்அதன் பிறகு சி.வி.‌குமார் என்னை ஒருநாள் சந்தித்தார். என்னுடைய இசை எல்லாம் கேட்டுவிட்டு நன்றாக இருக்கிறது, ஒரு மூன்று மாதம் காத்திருங்கள் என்றார். சொன்னது போல் மூன்று மாதம் கழித்து வந்தார், பா. ரஞ்சித்தை அறிமுகப்படுத்தினார்.‌ அவருக்கு என்னுடைய இசை பிடிக்கவில்லை. இந்த மக்களைப் பார் என்று அழைத்துச் சென்று காண்பித்தார். அதன் பிறகு ஃபோக் மியூசிக்கை பற்றி தெரிந்து கொண்டேன்.‌ உண்மையை சொல்லப் போனால் என்னை ஒரு கலைஞராக மாற்றியது பா. ரஞ்சித் தான்.

சூது கவ்வும் 2 படத்திற்கு இசையமைத்த அறிமுக இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள். அவர் இங்கு மேடையில் நேரலையாக இசை நிகழ்ச்சி நடத்தினார்.  இது என்னை மிகவும் கவர்ந்தது. இந்த இசை அமைப்பாளருக்கு தொடர்ந்து இரண்டு படங்களில் வாய்ப்பு வழங்குங்கள் என்று தயாரிப்பாளர் சி வி குமாரிடம் கேட்டுக்கொள்கிறேன். சூது கவ்வும் 2 குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.‌ இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும்.”

தயாரிப்பாளர் சி வி குமார்

“சூது கவ்வும் 2 படத்தின் கதையை எழுதிக் கொடுங்கள் என்று நலன் குமாரசாமியிடம் கேட்டேன். அவரால் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை.அதன் பிறகு அவரிடம் கதைக் கருவை கொடுங்கள். நாங்கள் திரைக்கதை எழுதிக் கொள்கிறோம் என்று  அனுமதி கேட்டேன். அர்ஜுன் திறமையான எழுத்தாளர்.  அவருக்கு கதையைப் பற்றிய அறிவு நிறைய இருக்கிறது.  இன்று ஏராளமானவர்களுக்கு காமெடியை காட்சிப்படுத்த தெரியவில்லை. ஆனால் இயக்குநர் அர்ஜுன் அதனை இந்தப் படத்தில் நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார்.‌

சூது கவ்வும்--2'
சூது கவ்வும்–2′

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர், என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி இருக்கிறார்கள்.

இந்தப் படம்  இந்த அளவிற்கு ரசிகர்களை சென்றடைகிறது என்றால் அதற்கு முதன்மையான காரணம் தயாரிப்பாளர் தங்கராஜ் தான். திரையரங்கில் பார்த்து ரசிக்கும் வகையிலான படம். அனைவருக்கும் பிடிக்கும். இந்த படத்தின் பணிகள் நிறைவடையும் முன்பே அடுத்த பாகத்திற்கான கதையையும் அர்ஜுன் எழுதிக் கொடுத்து விட்டார். அந்த படமும் விரைவில் நடைபெறும் என்று நம்புகிறேன்”.

இயக்குநர் எஸ் ஜே அர்ஜுன், ”தயாரிப்பாளர் சி வி குமார் நிறைய விஷயங்களை மனதிற்குள் வைத்திருப்பார்.‌ அது நடைபெறும் போது தான், சாத்தியமாகும் போது தான், அவர் என்ன நினைத்தார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிகழ்வு திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட்டின் ரீ யூனியன் நிகழ்வாக இருக்கிறது.

படத்தை ஓரளவு சிறப்பாகவே செய்து இருக்கிறோம். இந்தப் படத்தை இயக்குநர் நலன் குமாரசாமி பார்த்துவிட்டு திட்டாமல் இருந்தாலே வெற்றி பெற்றதாகவே நினைக்கிறேன்.

சூது கவ்வும்--2' இந்தப்  படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகளும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை  வழங்கினார்கள். அனைவருக்கும் இந்த தருணத்தில் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தை இயக்குவதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சி.வி. குமாருக்கும் தங்கராஜுக்கும் நன்றி”.

நடிகர் பாபி சிம்ஹா, “இந்தப் படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும். ஏனென்றால் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்திருக்கிறார். சில பேரால் தான் சில கேரக்டர்களை ஏற்று நடிக்க முடியும்.  அந்த வகையில் இந்தப் படத்தில் இடம்பெறும் குருநாத் என்ற கேரக்டரை சிவாவால் மட்டுமே நடிக்க முடியும். சி. வி. குமார் சார் ‘சூது கவ்வும் 2’ வெல்லும், கவலைப்படாதீர்கள். இந்தப் படம் நிச்சயமாக பெரிய வெற்றியை பெறும்”.

ஹீரோ மிர்ச்சி சிவா

siva1“தயாரிப்பாளர் சி.வி  குமார் தமிழ் சினிமாவின் சொத்து. அவர் ஒரு பல்கலைக்கழகம். அந்தப் பல்கலைக்கழகத்தில் வசதி இல்லை என்றாலும் திறமையான மாணவர்களை உருவாக்கியிருக்கிறார். சினிமாவை அளவு கடந்து நேசிப்பவர். இன்னும் நிறைய புதுமுக திறமைசாலிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து அவர் படங்களை தயாரிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தயாரிப்பாளர் தங்கராஜ் தங்கமான மனிதர். படப்பிடிப்பு முழுவதும் சுவையான உணவை வழங்கினார். இந்தப் படத்திற்கான சம்பளத்திற்கு ‘செக்’ கொடுத்து செக் வைத்திருக்கிறார்கள். எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவை விற்பனையான பிறகு சம்பளம் கிடைக்கும் என சொல்லி இருக்கிறார்கள். அதனை நினைவூட்ட விரும்புகிறேன்” என கலகலப்பூட்டினார் சிவா.

 

— மதுரை மாறன்.

Saravana Multispeciality Hospital Pvt. Ltd., Madurai,

Leave A Reply

Your email address will not be published.