சூரி, ஐஸ்வர்யா லக்ஷ்மி இணையும், ‘மாமன்’ ஆரம்பம்!
‘லார்க் ஸ்டுடியோஸ்’ கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்கும் மூன்றாவது படம் ‘மாமன்’. ‘விலங்கு’ வெப்சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்குகிறார். சூரிக்கு ஜோடி ஐஸ்வர்யா லக்ஷ்மி. இதில் நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
டிசம்பர் 16 காலை படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள, பூஜையுடன், படப்பிடிப்பு இனிதே துவங்கியது. ‘கருடன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு, ‘லார்க் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில், சூரி நடிக்கும் இரண்டாவது படம் ‘மாமன்’.
‘விலங்கு’ வெப்சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம், அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்குகிறார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தொழில் நுட்பக் குழு–
இசை – ஹேசம் அப்துல் வஹாப்
ஒளிப்பதிவு – தினேஷ் புருஷோத்தமன்,
கலை இயக்கம் – துரைராஜ்,
படத்தொகுப்பு – கணேஷ் சிவா ,
சண்டைப்பயிற்சி – மகேஷ் மேத்யூ ,
மக்கள் தொடர்பு – யுவராஜ்.
— மதுரை மாறன்.