நவகிரக ஆலயங்கள்- ஆன்மீகப் பயணம் தொடர் 5
நவகிரக ஆலயங்கள் என்பவை 9 கிரக தெய்வங்களுக்காக தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை பகுதிகளை சுற்றியுள்ள ஒன்பது புனித தலங்கள் ஆகும். இந்த சமுதாயத்தில் தனிப்பட்ட ஆன்மீக சடங்குகளை பயன்படுத்தி ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கோயிலை பார்வையிடுவதும் தரிசிப்பதும் பொதுவான நடைமுறையாகும்.
ஒன்பது நவகிரக ஆலயங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய கிரகங்கள்:-
1.சூரியனார் கோவில் – சூரியன்.
சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
- திங்களூர் – சந்திரன்.
சந்திர பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
- வைத்தீஸ்வரர் கோவில் – செவ்வாய்.
அங்காரகன் அல்லது மங்கள பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
- திருவெண்காடு – புதன்.
புதன் பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
- கஞ்சனூர் (சுக்கிரன்) – வெள்ளி.
சுக்கிர பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
- ஆலங்குடி குரு பகவான் – வியாழன்.
வியாழ பகவான் தக்ஷிணாமூர்த்திக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது.
- திருநாகேஸ்வரம் – ராகு.
ராகு பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
- கீழப்பெரும்பள்ளம் – கேது.
கேது பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
- திருநள்ளாறு – சனிபகவான்.
சனி பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலயங்களை ஒரே நாளில் அல்லது குறிப்பிட்ட காலக்கெடுவில் தரிசனம் செய்து ஜோதிட தோஷங்களை நீக்கி பக்தர்களுக்கு தெய்வீக அனுகிரகத்தை பெற்று தரும் என்று நம்பப்படுகிறது. இப்போது நாம் ஒவ்வொரு தலத்தின் கடவுளையும் அதனை வழிபடும் முறையினையும் பார்க்கலாம்.
- சூரிய நாராயனார் கோவில்:-
சூரியனார் கோவில் தமிழ்நாட்டில் நவகிரக தலங்களில் முதன்மையான சூரிய தலம் ஆகும். கோவிலின் உள்ள 90 கம்பங்களும் பல சிற்பங்கள் நிறைந்தவை. இந்த சிற்பங்கள் அதன் கலை நயத்திற்கு சான்றாக உள்ளன.

இக்கோயிலுக்கு வந்தால் மன அமைதி கிடைப்பதாகவும் தலைவலி மற்றும் பார்வை கோளாறுகள் குணமாகும் எனவும் நம்பப்படுகிறது. ஏழரை சனி, அஷ்டமத்து சனி, மற்றும் ஜென்ம சனி போன்ற தோஷங்கள் நீங்க பக்தர்கள் வந்து இங்கு வழிபடுகிறார்கள். தமிழ்நாட்டில் அனைத்து கிரக தெய்வங்களுக்கும் தனி சன்னதிகள் கொண்ட ஒரே கோவில் இதுவாகும்.
- திங்களூர் – சந்திரனார் கோவில் கைலாசநாதர் கோவில்:–
சந்திரனார் கோவில் கைலாசநாதர் கோவில் அல்லது திங்களூர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கும்பகோணம் திருவையாறு சாலையில் தஞ்சாவூரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் கும்பகோணத்திலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள திங்களூர் கிராமத்தில் அமைந்திருக்கிறது. இங்குள்ள மூலவர் சோமன் (சந்திரன்) இருப்பினும் கோயிலில் உள்ள முக்கிய சிலை கைலாசநாதர் ஆவார்.

இந்த கோவில் தமிழ்நாட்டில் உள்ள நவகிரக கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. திங்களூர் என்பது சிவபெருமானின் 63 வது நாயன்மார்களில் ஒருவரும் திருநாவுக்கரசரின் தீவிர பக்தருமான அப்போதி அடிகளின் பிறப்பிடமாகும். இருப்பினும் கோயிலில் துறவி அடிகள் தொடர்புடைய சொத்துக்கள் எதுவும் இல்லை. இக்கோவில் மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம் மற்றும் திருக்கார்த்திகை ஆகியவை கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்கள் ஆகும். ஏழாம் நூற்றாண்டின் தமிழ் சைவ சமய படைப்பான தேவாரத்தில் இந்த கிராமம் மேலோட்டமாக கூறப்பட்டிருக்கிறது. கோவிலின் அசல் வளாகம் சோழர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. அதே நேரத்தில் தற்போதைய கொத்து அமைப்பு பதினாறாம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது. இந்தக் கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்பட்டும், நிர்வகிக்கப்பட்டும் வருகிறது. இந்தக் கோயில் பச்சிளம் குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டுவதற்கு பிரபலமானது.
- வைத்தீஸ்வரர் கோவில் :-
வைத்தீஸ்வரன் கோவில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு நவகிரக ஸ்தலமாகும். இந்த ஆலயம் செவ்வாய் கிரகமான அங்காரகத்துடன் நெருங்கிய தொடர்புடையது மற்றும் நோய் தீர்க்கும் தலமாகவும் ஜோதிட முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. அருள்மிகு வைத்தீஸ்வரநாதர் ஆலயம் என்றும் அழைக்கப்படும். இது செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இந்த ஆலயத்திற்கு புல்லிரக்குவேளூர் என்ற இன்னொரு பெயரும் உண்டு. சடாயு, வேதம், முருகன், சூரியன் ஆகிய நால்வரும் இங்கு வந்து இறைவனை வணங்கியதால் இப்பெயர் பெற்றது.

மேலும், இக்கோவில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இக்கோவில் சித்தாமிர்த தீர்த்ததுடன் தொடர்புடையது. அங்காரகனுக்கான பரிகாரங்கள் இங்கு சிறப்பாக செய்யப்படுகின்றன. செவ்வாய் தோஷம், உள்ளவர்கள் செவ்வாய் பகவானுக்கு சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்வர். மேலும் கோவிலின் குருக்கள் மூலம் சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் செய்வதன் மூலம் பரிகாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
- திருவெண்காடு ஸ்வேதா ரன் ஈஸ்வரர் கோவில்:-
திருவெண்காடு ஸ்வேதாரீஸ்வரர் கோவில் என்பது சமய குறவராகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயம் ஆகும்.

இது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவார பாடல் பெற்ற தலமாகும். இது புதனுக்குரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன் ‘வெள்ளை யானை’ வழிபட்ட தலம் என்பது நம்பிக்கை.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடக்கரை தலங்களில் அமைந்துள்ள 11 ஆவது சிவதலம் ஆகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கின்றார்.
- கஞ்சனூர் சுக்கிர பகவான் ஆலயம்:-
கஞ்சனூரில் உள்ள சுக்கிர பகவான் கோவில் அக்னீஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது கும்பகோணத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கஞ்சனூர் கிராமத்தில் அமைந்துள்ளது. மேலும், சிவன் சிவபெருமானின் அவதாரமான அக்னீஸ்வரராக சுக்கிரனாக காட்சியளிக்கிறார். கஞ்சனூர் நவகிரக ஸ்தலங்களில் சுக்கிர ஸ்தலமாக விளங்குகிறது. இது கும்பகோணம் அருகே ஆடுதுறைக்கும் சூரியனார் கோவிலுக்கும் அருகில் அமைந்துள்ளது. சுக்ர தோஷ நிவர்த்தி மற்றும் சுக்ர யோகம் பெற பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகிறார்கள். கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயிலில் சுக்கிர பகவானை மனமுவந்து பிரார்த்தனை செய்து சுவாமிகள் அருளிய படிக்கத்தை பாராயணம் செய்து வழிபடுவது சிறப்பு. திருமால், பிரம்மன், சந்திரன், கம்ச பாண்டியன் ஆகியோர் வணங்கி பேர் பெற்றதாக வரலாறு கூறுகிறது.

இறைவன் பிரம்ம தேவருக்கு திருமண கோலம் காட்டி அருளியதால் வலப்பாகத்தில் இறைவியை கொண்டுள்ளார். இது சுக்கிர பரிகார ஸ்தலமாக இருந்தாலும் இங்கு சுக்கிரனுக்கு என்று தனி சன்னதி எதுவும் கிடையாது. சிவனே சுக்ரனின் வடிவமாக காட்சியளிக்கிறார். இது திருமண தடை நீங்கும் பரிகார தலமாக விளங்குகிறது. மேலும், நவகிரங்களில் யோககாரகன் என அழைக்கப்படுபவர் சுக்கிரன். இவர் அசுரர்களின் குல குருவாக போற்றப்படுபவர் வாழ்விற்கு தேவையான அத்தனை சந்தோஷங்களையும் தரக்கூடியவர் சுக்கிரன் தான். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் சரியாக இருந்தால் தான் மணவாழ்க்கை மகப்பேறு மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது அமைய முடியும். சுக்கிரனுக்கு உரிய நிறம் வெள்ளை வாகனம் முதலை தானியம் மொச்சை சுக்கிர பகவான் தான் திருமண பந்தத்திற்கு காரணமானவர் என்பதால் ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனின் பலம் குறைந்தால் ஜாதகத்தில் திருமண தடை திருமண தாமதம் ஆவது, இனிமையான திருமண வாழ்க்கை அமைவது போன்றவை ஏற்படும். மேலும் செல்வ சேர்க்கைக்கு காரணமானவராக சுக்கிரனே சொல்லப்படுகிறார். சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி கொடுத்த தளமாகவும் சுக்கிர பகவான் வழிபட்டு அக்கினி பகவான் வழிபட்டு நோய் நீங்கிய தலமாகவும் காணப்படுகிறது. தல விரிச்சத்தை ஒரு மண்டலம் சுற்றி வந்தால் கடன் தீரும் என்று நம்பப்படுகிறது.
- ஆலங்குடி குரு பகவான் கோவில்:-
குரு பகவானுக்கு என மிகவும் சிறப்பு வாய்ந்த ஆலயமாக ஆலங்குடி ஆபத் சகா ஈஸ்வரர் திருக்கோயில் விளங்குகிறது. இந்த திருத்தலம் சோழர்களால் கட்டப்பட்டது. இங்கு சென்று குருவின் அருளை பெறலாம். குரு பெயர்ச்சி தினத்தில் குருவருள் பெற தேடி வரும் கோயிலாக ஆபத் சகா யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோயிலில் சுயம்பு லிங்கமாக தோன்றிய இவர் குருவின் அம்சமாக பார்க்கப்படுகிறார். குருபெயர்ச்சி தைப்பூசம் பங்குனி உத்திரத்தின் போது தட்சிணாமூர்த்திக்கு தேர் திருவிழா சித்திரை பௌர்ணமி விழா ஆகியவை கொண்டாடப்படுகிறது. அம்பிகை இந்த தளத்தில் தவமிருந்து இறைவனை திருமணம் செய்து கொண்டார் என கூறப்படுகிறது. விஸ்வாமித்திரர் முகுந்த வீரபத்திரர் வழிபட்ட புண்ணிய ஸ்தலமாகும்.

இந்தக் கோயில் குறித்து சிவனின் தேவார பாடல் பாடப்பட்டுள்ளது. இங்கு சுந்தரர் சிலையில் அம்மை தழும்புகள் இருப்பதை காணலாம். மேலும் நாக தோஷம் நீங்க மனக்குழப்பம் பயம் நீங்குவதற்கு இங்குள்ள விநாயகரையும் திருமண தடை கல்வியில் சிறக்க இந்த ஆலயத்தில் பிரார்த்தித்து வழிபடலாம். வேண்டுதல் நிறைவேறியவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி வழிபடுவது வழக்கம். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை மகா குரு அபாரமாக கொண்டாடப்படுகிறது. மேலும் ஆலகால விஷத்தை குடித்து தேவர்களை காத்ததால் இதற்கு ஆலங்குடி என பெயர் வந்தது. இங்கு ஆலமரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்கிறார்.
- திருநாகேஸ்வரம்:-
திருநாகேஸ்வரம் நாக நாத சுவாமி கோவில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் எனும் ஊரில் அமைந்துள்ளது. சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப்பெற்ற சிவாலயமாகும். இதனால் பாடல் பெற்ற தலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. தேவார பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரை தலங்களில் 29 வது சிவத்தலமாகும். பெரிய பிரகாரத்தின் முதல் மேற்கு மூலையில் ராகு சன்னதி உள்ளது. ராகுவின் பிறப்பு வரலாறும் கிரக சிறப்பும் சுவை நிரம்பியவை. ராஜ வம்சத்து மன்னன் ஒருவனுக்கும் அரசகுல பெண்ணொருத்திக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடையும்போது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மகா விஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தை பெற்று உண்டு விட்டான். உண்மை அறிந்த மகாவிஷ்ணு கையில் இருந்த அகப்பையில் அவனது மண்டையில் அடிக்கவே தலை வேறு உடல் வேறு ஆகி கீழே விழுந்தான்.

அமிர்தம் உண்ட மகிமையினால் அவன் தலை பகுதியில் உயிர் இருந்தது ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க இறைவன் பாம்பின் உடலை அவனுக்கு கொடுத்து அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார். நவகிரக தலங்களில் ராகு பகவானுக்குரிய விசேஷ தலம் என்ற பெருமை உடையதாகும். சிறந்த சிவபக்த கிரகமாகிய ராகு சில இடங்களில் பெற்று விளங்கிய போதிலும் நாக நாத சுவாமி கோயிலின் இரண்டாவது பிரகாரம் தென்மேற்கு மூலையில் நாகவல்லி, நாகக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாறுடன் தனி கோவிலில் அமர்ந்து காட்சியளிக்கிறார். இவருகுகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்லாமல் இவருக்கு செய்கின்ற பாலாபிஷேகமும் தலைமீது ஊற்றும் பால் தலையில் இருந்து வழிந்து உடல் மீது வரும்போது பாலின் நிறமும் நீலமாக மாறி விடுகின்ற அதிசயத்தை பார்க்கலாம். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து கொள்ளலாம். இது பஞ்ச க்ரோசத்த தலங்களில் ஒன்றாகும்.
- கீழப்பெரும்பள்ளம்:-
கேது தோஷ நிவர்த்தி அளிக்கும் தலமாக விளங்குகிறது. மயிலாடுதுறை மாவட்டம் கீழப் பெரும்பள்ளத்தில் உள்ள அருள்மிகு நாகநாதர் கோவில் நவகிரகங்களில் ஒருவரான கேது பகவான் அனுக்ரஜர் மூர்த்தியாக காட்சியளித்து கேது தோஷ நிவர்த்தி அளிக்கும் தலமாக விளங்குகிறார். அருள்மிகு நாகநாதர் கோவில் காலப் பழமையும் காலப் பெருமைகளும் கொண்டதாக உள்ள ஆன்மிக தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு இறைவன் ஸ்ரீ நாகநாத சுவாமி என்ற திரு பெயருடன் சிவலிங்க திருமேனியாக காட்சியளிக்கிறார். அன்னை ஸ்ரீ சௌந்தர்ய நாயகி அருளுகிறார். கேது பகவான் பிறப்பால் அசுர வம்சத்தை சேர்ந்தவர் ஆவர். இவரது இயற்பெயர் ஸ்வர்பானு காசிப முனிவருள் மகன் விப்ரசித்து கேது பகவானின் தந்தை தாய் சின்சிகை இதனால் சம்சகேயன் ஒரு பெயரும் கேது பகவானுக்கு குறிப்பிடப்படுகிறது.

தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடைந்து அமிர்தத்தை எடுத்த பது மோகினி உருவில் அங்கு தோன்றிய திருமால் அசுரர்களுக்கு அமிர்தம் கிடைக்காதவாறு தேவர்களுக்கு மட்டும் பரிமாறி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஸ்வர்ப்பானோ தேவர் வடிவம் எடுத்து சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே சென்று அமர்ந்து அமிர்தம் பெற்றுக்கொண்டார். இதை கவனித்த சூரிய சந்திரனும் அசுரர்களாக ஸ்வர்பானுக்கு அமிர்தம் கிடைத்திருப்பதை திருமாலிடம் தெரிவித்தார். திருமால் உடனடியாக ஸ்வர்பானியின் தலையில் தாக்கினார். இதில் உடல் வேறு ஆகவும், தலை வேறாகவும் இரண்டு துண்டுகளாக ஆகின. இதையடுத்து தலைப்பாகமான வைப்ரசித்தி பிரம்மனை துதித்து பாம்பு உருவத்துடன் ராவோறிலை பெற்று நவகிரகங்களில் ஒன்றான விளங்கும் அருள் பெற்றது. உடல் பகுதி பரமனை வழிபட்டு பல உருக்கள் பெறும் பாக்கியத்தையும் கேது என்ற பெயருடன் நவகிரகங்களில் ஒன்றாக விளங்கும் அருளையும் பெற்றது. கதிர்ப்பகை, சிகி, செம்பாம்பு என்ற பெயர்களும் கேதுவுக்கு குறிப்பிடப்படுகின்றன. மனிதர்களின் அனிச்சை செயல் ஒவ்வொன்றுக்கும் இவரே காரஹரனாக விளங்குகின்றார்.
- திருநள்ளாறு:-
நவகிரக தலங்களில் சனீஸ்வர பகவானுக்கு உரிய முக்கிய பரிகார தலமாக போற்றப்படுவது புதுச்சேரியில் உள்ள திருநள்ளாறு தலத்தில் உள்ள தர்ப்பாரண்யேசுவர் கோவிலாகும். புதுச்சேரிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. ஒரு மனிதனின் வாழ்நாளில் இரண்டு முதல் மூன்று முறை சனி பகவான் ஏழரை ஆண்டுகள் பிடித்துக் கொண்டு வாழ்க்கை பற்றிய புரிதலையும், பக்குவத்தையும் தரக் கூடியவர். ஏழரை ஆண்டுகள் எந்த அளவிற்கு கஷ்டத்தை கொடுக்கிறாரோ அதே அளவிற்கு சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும்போது நலன்களையும் அள்ளிக் கொடுப்பவர் என்பார்கள். சனிபகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் பயணிப்பார் நவ கிரகங்களிலே ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனி பகவான் மட்டுமே. இவர் தர்மத்தை நிலை நாட்டுபவர் என்றும் சொல்வார்கள். விநாயகர், ஆஞ்சநேயரை வழிபடுபவர்களையும் சனிக்கிழமை விரதம் இருந்து வழிபடுபவர்களையும் சனி பகவானின் கெடுப்பார்வை ஒன்றும் செய்யாது.

மேலும், நவகிரகங்களில் மந்த காரகன் என குறிப்பிடப்படும் சனீஸ்வரன் சூரிய தேவன் மற்றும் சாய தேவியின் மகன். காகத்தை வாகனமாகக் கொண்டவர். கருப்பு நிற வஸ்திரமும் எள் தானியம் சனீஸ்வரருக்கு விருப்பமானதாக கொள்ளப்படுகிறது. சனியின் வக்கிர பார்வையால் இருந்து தெய்வங்களும் கூட தப்ப முடியாது. சனிபகவான் ஒவ்வொருவரையும் ஏழரை ஆண்டுகள் பிடித்தே தீருவார். ஆஞ்சநேயர் மற்றும் விநாயகர் மட்டுமே சனி பிடிக்காத தெய்வங்களாக சொல்லப்படுகின்றன. மேலும், புதுச்சேரியில் உள்ள திருநள்ளாறு தலம் தவிர தேனி மாவட்டம் குஞ்சானூரில் உள்ள சனீஸ்வரன் கோவில், கோவை மாவட்டம் புளிய குளம் லோகநாயக சனீஸ்வரர் கோவில் ஆகியன சனி பகவானின் பரிகார தலங்களாக உள்ளன. இலங்கையில் உள்ள திருகோணமலை சனீஸ்வரன் கோவிலும் சனீஸ்வரருக்கு உரிய தலமாக குறிப்பிடப்படுகிறது. மேலும், இக்கோவிலில் சிவபெருமானை தர்பாரண்யேசுவரை வணங்கி விட்டு பின்னர் சனி பகவானை வணங்குவது பொதுவான நடைமுறையாகும்.
ஆன்மீகப் பயணம் தொடரும்…!
– பா. பத்மாவதி.
Comments are closed, but trackbacks and pingbacks are open.