வசூல் ராஜாவாக வலம் வரும் ஆயுதப்படை அதிகாரி …

மத்திய மண்டல பெரம்பு மாவட்ட காவல் துறையில் கில்லியான பெயரைக் கொண்டவர் ஆயுதப்படை அதிகாரியாக இருந்து வருகிறார். ஐயா, ஏற்கனவே பணியாற்றிய இடங்களிலெல்லாம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர். அதே பவரை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் தினமும் பணக்கார கடவுளின் முகத்தில் தான் கண் விழிக்கிறாராம்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலைய கட்டப்பஞ்சாயத்து விக்ஷயங்களிலும் தலையிடுவதுடன், மேல்மட்ட அதிகாரிகளுக்கு கமிக்ஷன் வாங்கித்தரும் வசூல் ராஜாவாகவும் வலம் வருகிறாராம். இதனால் மாவட்ட மேலதிகாரியையே மதிப்பதில்லையாம். புகார் போனாலும் எல்லாம் மேலே இருக்கிறவங்க பாத்துப்பாங்க என்று துணிச்சலாக செல்கிறாராம் கில்லி அதிகாரி.

 

 —         ஸ்பை டீம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.