கண் சிவந்த முதல்வர்… ஆட்டம் காட்டும் பெண் அதிகாரி.!
கண் சிவந்த முதல்வர்… ஆட்டம் காட்டும் பெண் அதிகாரி.!
நெற்களஞ்சிய மாவட்டத்தில் ’யங்கான’ பெண் அதிகாரி மாவட்டத்தின் அதிகார மையத்தில் இருந்து வருகிறாராம். தலைமைக்கு பக்கத்து வீடு என்ற கெத்தொடு சுற்றிவருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் தமிழக முதல்வர் அந்த மாவட்டத்திற்கு விசிட் அடித்த போது, பெண் அதிகாரி மீது ஒரு சில தொழிலதிபர்கள் நேரடியாகவே வாய்மொழியாக புகாரை குவித்துள்ளனர்.
அதில், சமூக பாகுபாடு பார்த்து அதிகாரி செயல்படுவதாகவும், உயர்வான துறையின் அமைச்சர் சொல்வதை மட்டும் செய்வதுடன், அவருடைய ஆதரவாளருக்கு மட்டும் தான் எல்லாம் செய்து தருகிறார்.
இதில், வாரத்தில் பாதிநாட்கள் அமைச்சரின் அலுவலத்திற்கு கையெழுத்துப்போட சென்றுவிடுகிறார் என புகாரை கொட்டித்தீர்த்துள்ளனர்.
ஏற்கனவே, ’யங்கான’ பெண் அதிகாரி மழலை வளர்ச்சித்திட்ட துறையில் பணியாற்றியபோது, 50 லட்டுகள் கொண்ட டெண்டரை தனது கணவர் பெயரில் எடுத்த விவகாரம் ஒருபக்கம் விசாரணை கிளம்பி வர, தற்போது பெண் அதிகாரி தொடர்பாக மேலும் புகார்கள் முதல்வர் காதுக்குச்செல்ல கண் சிவக்க மாவட்டத்தை விட்டு வெளியேறினாராம்.
-ஸ்பை