அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

உதயமாகுங்கள்… புதிய தொழில் முனைவோராக…!!!

0

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

சிறிய, நடுத்தர, பெரிய அளவிலே LIVE  ICE  CREAMS  CAFÉ  சார்ந்து, புதிய தொழில் முனைவோராக உங்களைத் தகவமைத்துக் கொண்டு இயங்க வேண்டுமா? உங்களை இரு கரங்கள் நீட்டி வரவேற்று, அதற்கான முழு ஏற்பாடுகளையும் உடனிருந்து செய்து தந்து வழி காட்டிடக் காத்திருக்கிறது, சென்னையில் இயங்கி வருகிற நேச்சுரோல்ஸ் NATUROLLS எனும் நிறுவனம். அதன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் இலக்கியா சிங்காரவேல். அதன் இணை இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சிங்காரவேல்.

சிங்காரவேல்
சிங்காரவேல்

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

நேச்சுரோல்ஸ் லைவ் ஐஸ்க்ரீம்ஸ் கபே என்பது கைவினை, நேரடி தயாரிப்பு ஐஸ்க்ரீம்கள் மற்றும் பாப்சிகல்களுக்குப் பெயர் பெற்ற ஒரு இந்திய பிராண்ட் ஆகும். மேலும், இந்த NATUROLLS  நேச்சுரோல்ஸ் லைவ் ஐஸ்க்ரீம்ஸ் கபே என்பது, பதிவு பெற்றுள்ள ட்ரேட் மார்க் ஆகும். நிர்வாக இயக்குனர் இலக்கியா அவர்களுடன் பேசினோம்.

இலக்கியா சிங்காரவேல்
இலக்கியா சிங்காரவேல்

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

((??)) இதற்கு முன்னர் நீங்கள் என்னவாகப் பணியாற்றி வந்து உள்ளீர்கள்?

((!!!!)) கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் இரண்டு ஆண்டுகள் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றியுள்ளேன். அதன் பின்னர் பாலிமர் செய்திகள் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினேன். என் கணவர் சிங்காரவேல், ஷனா இண்டஸ்ட்ரீஸ் என்கிற பெயரில் ஐஸ்க்ரீம்ஸ் தயாரிக்கும் எந்திரங்களை உற்பத்தி செய்து கொண்டிருந்தார். அதுபோன்ற ஐஸ்க்ரீம்ஸ் தயாரிப்பு எந்திரங்கள் சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில், இந்தியா முழுதும் பரவலாக அனுப்பப்பட்டு அவைகள் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

((??)) பின்னர் நீங்கள் எவ்விதமாக இந்த “நேச்சுரோல்ஸ்”  எனும் லைவ் ஐஸ்க்ரீம்ஸ் கபே அமைத்துத் தருகின்ற புதிய செயல்பாட்டுக்கு உங்களை உட்படுத்திக் கொண்டீர்கள்?

புதிய தொழில் முனைவோராக((!!!!)) ஐஸ்க்ரீம்ஸ் தயாரிப்பு எந்திரங்களை உற்பத்தி செய்து அதனை வெளியே அனுப்பி வைப்பதுடன், நாங்களே ஏன் புதிய பெயரில் லைவ் ஐஸ்க்ரீம்ஸ் கபேக்களை நிறுவி, ஆங்காங்கே அங்கீகரிக்கப்பட்ட மையங்களாக அமைத்துத் தந்திடலாமே என்று யோசித்தோம். எனது மற்றும் என் கணவரின் சீரிய சிந்தனையில் உருவானது தான் இந்த “நேச்சுரோல்ஸ்”. அதன் பின்னரே தமிழ்நாடு முழுவதுமாக எங்களின் நேச்சுரோல்ஸ் ப்ரான்ச்சீஸ்களாக நிறைய இடங்களில் லைவ் ஐஸ்க்ரீம்ஸ் கபேக்களை நாங்களே அமைத்துத் தந்துள்ளோம்.

((??)) உங்களின் நேச்சுரோல்ஸ் மையங்கள் என்கிறீர்கள். அதனை நடத்துபவர்கள் உங்களுக்குக் காப்பீட்டுத் தொகை செலுத்த வேண்டுமா? அந்த மையத்தின் வருமானத்தில் உங்களுக்கு அவ்வப்போது ராயல்டி பணம் தர வேண்டுமா?

((!!!!)) அதெல்லாம் ஏதுமே இல்லை. மையத்தில் அவர்களது முதலீடு. அவர்களது உழைப்பு. அவர்களது வருமானம். முழு உரிமை அவர்களுக்குத் தான். அவர்களுக்கு ஐஸ்க்ரீம்ஸ் தயாரிப்பு எந்திரங்கள் தருகிறோம். ஐஸ்க்ரீம்ஸ் எவ்விதம் தயாரிப்பது என்கிற பயிற்சியும் அளிக்கிறோம். மூன்று நிலை கபேக்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். அதிலே அவர்களுக்கு எந்த நிலை வேண்டுமோ, அதனை அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம் அதற்கான தொகை மட்டுமே எங்களுக்கு செலுத்தினால் போதும். மேலும் அந்தப் புதிய தொழில் முனைவோர்க்கு வங்கிக் கடனுதவியும் நாங்களே பெற்றுத் தருகிறோம்.

புதிய தொழில் முனைவோராக((??))  அது என்னங்க மூன்று நிலையில் ஆன கபே?

Sowdambikaa Group Of Schools & Colleges In & Around ...

(((!!!!))  மினி, க்ளாசிக், பிரிமியம் என்று மூன்று நிலைகள். அவைகள் ஒவ்வொன்றுக்கும் அந்தக் கடையின் பரப்பளவு, அதன் தயாரிப்புகள், மேலும் அதற்கான எந்திரம் மதிப்பீட்டுத் தொகையென அதன் மொத்தத் தொகையானது மாறுபடும். ஒவ்வொரு நிலை அமைப்புக்கான ஐஸ்க்ரீம்ஸ் தயாரிப்பு, ஹாட் வகைகளான பீட்ஸா, பர்கர், சான்ட்விச் தயாரிப்புகள் குறித்தான விபரப் பட்டியல் தனியான அட்டவணையில் காணலாம். மினி நிலை எனில் நூறு சதுர அடி பரப்பளவு கடை. அதற்கான தொகை இரண்டரை லட்சம். க்ளாசிக் நிலை எனில் இருநூற்றைம்பது சதுர அடி பரப்பளவு கடை. தொகை மூன்றரை லட்ச ரூபாய். பிரிமியம் நிலை எனில் அறுநூறு சதுர அடி பரப்பளவு கடை. அதற்கான தொகை ரூபாய் ஐந்து லட்சம்.

((??)) இதுவரையில் எத்தனை இடங்களில் நேச்சுரோல்ஸ் கிளைகள் அமைத்துத் தந்துள்ளீர்கள்? வங்கிக் கடன் வசதி பெற்றுத் தந்துள்ளீர்கள்?

((!!!!)) சென்னையில் ஆறு இடங்கள். ஹைதராபாத் நகரில் இரண்டு இடங்கள். தாம்பரம், கோயம்புத்தூர், காரைக்குடி, இராஜபாளையம், பேரணாம்பட்டு போன்ற இடங்கள் சேர்த்து மொத்தம் பதின்மூன்று இடங்களில் எங்களின் நேச்சுரோல்ஸ் கிளைகள் அமைந்துள்ளன. அவைகளில் சிலருக்கு வங்கிக் கடனுதவியும் பெற்றுத் தந்துள்ளோம். அவ்விதம் வங்கிக் கடன் வேண்டுவோர் தங்கள் பெயரில் அந்தக் கடையின் வாடகைதாரர் ஒப்பந்தப் பத்திரம், அந்தக் கடை இடத்தின் உரிமையாளரிடம் பெற்றிருக்க வேண்டும். PMFME  என்கிற பிரதம மந்திரி பெயரிலான மத்திய அரசின் வங்கிக் கடனுதவி அவர்களுக்குப் பெற்றுத் தந்துள்ளோம். இதற்கு எவ்வித ஸ்யூரிட்டியும் தேவையில்லை. ஆனாலும் வங்கி  நிர்ணயித்துள்ள சிபில் ஸ்கோர் சரியாக இருந்தால் மட்டுமே  வங்கிக் கடன் பெற முடியும். மத்திய அரசின் மேற்கண்ட கடனுதவியில் முப்பத்தைந்து சதவிகித தொகை மானியமாக வழங்கப்படுகிறது.

ஐஸ்க்ரீம்கள்((??)) “நேச்சுரோல்ஸ்”சின் தனித்துவம் தான் என்னென்ன?

((!!!!)) எங்கள் எந்திரங்களில் பத்து நிமிடங்களில் ஐம்பது ஐஸ் கேண்டி தயாரிக்கலாம். நேரடியாக அந்த மையங்களில் ஐஸ்க்ரீம்ஸ் சுவைஞர்களின் கண்ணெதிரே, தயாரித்துத் தருவது எங்கள் மையங்களின் தனிச் சிறப்பு. இயற்கையாகப் பழங்கள், பழச்சாறுகள், நட்ஸ் வகைகள் கொண்டே எங்கள் “நேச்சுரோல்ஸ்” ஐஸ்க்ரீம்ஸ் வகைகள் சுகாதாரமாகவும் தூய்மையாகவும் தயாரிக்கப்படுகின்றன.

நேச்சுரோல்ஸ் உங்களுக்கு ஒரு தனித்துவமான இனிப்பு அனுபவத்தை வழங்குகிறது. இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துதல், உள்ளூர் விவசாயிகளை ஆதரித்தல் மற்றும் வாடிக்கையாளரின் குடும்ப விருந்து நிகழ்வுகள், திருமணம் மற்றும் சுப விஷேச விருந்துகளுக்கு எங்களின் ஐஸ்க்ரீம்ஸ் வகைகளை மொத்தமாகத் தயாரித்து தருவதில் மிகவும் கவனம் கொண்டுள்ளோம். எங்களின் நேச்சுரோலஸ் ஐஸ்க்ரீம்ஸ் வகைகளை ஒருமுறை சுவைத்து மகிழ்ந்தவர், மீண்டும் மீண்டும் “நேச்சுரோல்ஸ்”சையே விரும்பி நாடுவார் என்பதே எங்களின் தனிச் சிறப்பு.” எனக் கூறுகிறார் “நேச்சுரோல்ஸ்” லைவ் ஐஸ்க்ரீம்ஸ் கபே அமைப்புகளின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனருமான இலக்கியா சிங்காரவேல்.

கலைச்செல்வி ராஜ்குமார்.
கலைச்செல்வி ராஜ்குமார்.

நான் காரைக்குடி நகரம் திருச்சி சாலை வாட்டர் டேங்க் பகுதியில், கடந்த ஒரு ஆண்டாக “நேச்சுரோல்ஸ்” லைவ் ஐஸ்க்ரீம்ஸ் கபே நடத்தி வருகிறோம். அதன் நிர்வாக இயக்குனர் இலக்கியா, புதிய தொழில் முனைவோர்க்கான மத்திய அரசின் பிரதம மந்திரி கடன் உதவித் திட்டத்தில் ஐந்து லட்ச ரூபாய்க் கடன் பெற்றுத் தந்துள்ளார். வங்கிக்கு மாதாந்திர கடன் தொகையினைச் செலுத்தி வருகிறேன். ஒவ்வொரு மாதமும் எங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில் எங்களுக்கு வருமானமும் தொய்வின்றி வந்து கொண்டிருக்கிறது.” என்கிறார் காரைக்குடி கலைச்செல்வி ராஜ்குமார்.

தாஜுதீன்.
தாஜுதீன்.

நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஆவடி நகரில் இந்த நேச்சுரோல்ஸ் லைவ் ஐஸ்க்ரீம்ஸ் கபே, அதன் இயக்குனர் இலக்கியா அவர்களின் ஒத்துழைப்புடன் தொடங்கினேன். எங்களுக்கு நல்ல வருமானம் வந்து கொண்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பாக வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகரில் புதிதாக நேச்சுரோல்ஸ் லைவ் ஐஸ்க்ரீம்ஸ் கபே தொடங்கியுள்ளோம். தற்போது எனக்கு சென்னை ஆவடி மற்றும் வேலூர் பேரணாம்பட்டு ஆகிய இரண்டு கிளைகளிலும் நல்ல வருமானம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.” எனச் சொல்கிறார் தாஜுதீன்.

 

புதிய கிளைகள் துவக்க தொடர்புக்கு  – 9600242878

 

 

—    ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.