வெகு விமர்சியாக நடைபெற்ற தே. சிந்தலைச்சேரி 107 ம் ஆண்டு புனித அந்தோனியர் தேர் திருவிழா !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா தே.சிந்தலைச்சேரி ஊராட்சியில் புனித அந்தோனியாரின் தேவாலயம் அமைந்துள்ளது.  ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இருபதாம் தேதி அந்தோனியாரின் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம்.

புனித அந்தோனியர் தேர் திருவிழாஇந்த ஆண்டு புனித அந்தோணியாரின் 107 ஆம் ஆண்டு தேர்ப்பவனி சிறப்பாக நடைபெற்றது.  இத்திருவிழா தேர்ப்பவணியில்  வெளிநாடுகள், வெளி மாவட்டங்கள், மற்றும் தேனி மாவட்டம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு புனித அந்தோனியாரின் அருளும் ஆசியும் பெற்று சென்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

கொட்டும் பனியையும் பொருள்படுத்தாமல் சிறு குழந்தைகளிலிருந்து முதியவர் வரை அனைவரும் கலந்து கொண்டு  தள்ளாடும் வயதிலும் புனித அந்தோனியாரின் தேரை தள்ளிக் கொண்டு செல்வார்கள்.

புனித அந்தோனியர் தேர் திருவிழாஇத்தேர் பவனியை முன்னிட்டு தெருக்கள் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வானவேடிக்கைகள் முழங்க திருவிழா கோலமாக காட்சியளிக்கிறது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

அதனைத் தொடர்ந்து தேவாலயத்தில் 30க்கும் மேற்பட்ட குருமார்கள் பங்கேற்று சிறப்பு கூட்டுத் திருப்பலி அருட்தந்தை மரிய பிரபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

பின்பு குருமார்கள் தேறினை  புனித நீரால் மந்திரித்து அபிஷேகம் செய்து தேர் புறப்பட்டது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தேனி மாவட்டத்திலேயே ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வெகு சிறப்பாக அந்தோனியாரின் நவநாள் தேர் பவனி நடைபெற்றது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இரவு 10 மணிக்கு ஆரம்பித்த தேர் பவனி ஆனது அதிகாலை 6 மணி வரை ஊர் முழுவதும் சுற்றி வந்து தேவாலயத்தில் நிறுத்தப்படுகிறது.

புனித அந்தோனியர் தேர் திருவிழா
புனித அந்தோனியர் தேர் திருவிழா

இத்திருவிழாவானது நாட்டாமை திரவியம், கோவில் பிள்ளை பன்னீர், மணியார் அன்பரசு இவர்களின் ஏற்பாட்டில் மிக சிறப்பாக நடைபெற்றது.

தேவாரம் காவல் ஆய்வாளர் அய்யம்மாள் ஜோதி அவர்கள் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .

 

 — ஜெய்ஸ்ரீராம்.

Saravana Multispeciality Hospital Pvt. Ltd., Madurai,

Leave A Reply

Your email address will not be published.