அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஆசைகள் அளவில்லாதவை … அது ஒரு முடிவிலி ! நாங்கள் ஏமாந்த கதை ! பாகம் – 02

திருச்சியில் அடகு நகையை விற்க

”பேராசை” என்ற ஒற்றை சொல்லுக்கு ”தீமை விளைவிக்கும் ஆசைகள்” என்ற சொல்லாடல் எவ்வளவு பொருத்தமானது என்பதை பார்த்தோம். பேராசைகள் என்பது ஒருபக்கம் கிடக்கட்டும். முதலில் ஆசைகளுக்கு அளவுகள் இருக்கிறதா? இதற்குத்தான் ஆசைப்பட வேண்டும். இதற்கெல்லாம் ஆசைப்படக்கூடாது என்பதற்கு நியதிகள் இருக்கிறதா? ஆசைகள் அளவில்லாதவை. அது ஒரு முடிவிலி.

”ஆசையே துன்பத்திற்கு காரணம்” – இது புத்தரின் போதனைகளுள் முதன்மையானது. புத்தரையும் அவரது போதனைகளையும் இன்றைய சமூகம் எப்படி பார்க்கிறது?

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

“அவர் அந்த காலத்து மனுசன். பிழைக்கத்தெரியாத ஆள் வேற. இன்றைய காலகட்டத்துக்கு அதெல்லாம் பொருந்துமா? இன்னைக்கு பணம்தான் சார் வாழ்க்கை. பணம் இல்லைன்னா கூட இருக்க சொந்த பந்தம் நம்மள மதிக்காது. அவ்வளவு ஏன் கட்டுன பொண்டாட்டிகூட இளக்காரமாத்தான் நடத்துவா” இதுபோன்ற பதில்கள்தான் இன்றைய வாழ்க்கை குறித்த கண்ணோட்டமாகவே பலரிடம் வெளிப்படுகிறது.

நாங்கள் ஏமாந்த கதைவீட்டில் ரேஷன் அரிசியை பொங்கித்தின்றாலும், பிள்ளையை கான்வென்டில் படிக்க வைத்தாக வேண்டும். ”என் பிள்ளை இந்த பள்ளியில்தான் படிக்க வேண்டும். என் சொந்த பந்தம் எல்லாம் அந்த பள்ளியில்தான் படிக்க வைக்கிறார்கள்” என்று ஸ்டேட்டஸ்-க்காக கணவன்களை நச்சரிக்கும் நடுத்தர வர்க்கத்து மனைவி மார்களும் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Admission Enquiry Form

இங்கே, பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும் என்ற அடிப்படையான நோக்கம் அடிபட்டு, என்னுடைய விருப்பம், என்னுடனை தகுதி, என்னுடைய அந்தஸ்து, அதற்கு இணையாக அல்லது அதற்கும் மேலான விருப்பமாகவே பள்ளிக்கூடங்களைக்கூட தேர்வு செய்யும் மனநிலையை காண்கிறோம்.

சரி, பிள்ளைய நல்ல பள்ளிக்கூடத்துல சேர்க்கலாம். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி அதை செய்யலாம்தான். தவறு ஒன்றும் இல்லைதான். ஆனால், அதற்கு நம் பொருளாதார நிலை ஒத்துழைக்க வேண்டுமே? இந்த இடத்தில்தான், ”கடன்பட்டாவது பிள்ளைகளை கான்வென்டில் சேர்த்துவிட வேண்டும்”, “இங்கே நீட் தேர்வுகள் தடையாக இருந்தாலும், கடன்பட்டாலும் வெளிநாடு அனுப்பி வைத்தாவது என் மகனை மகளை டாக்டராக்கி அழகு பார்க்க வேண்டும்.” என்பது போன்ற புதிய ஆத்திச்சூடி அமலுக்கு வருகிறது.

நாங்கள் ஏமாந்த கதைஇந்த மனநிலைதான், இதுபோன்ற நமது வாழ்க்கைத் தரத்துக்கு அப்பாற்பட்ட, வரம்பு மீறிய பேராசைகள்தான் மோசடிக்காரர்களின் வலையில் வீழ்வதற்கான பலவீனமான கன்னியாக அமைந்து விடுகிறது. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வதே மனநிறைவான மகிழ்வு என்பதற்குப் பதிலாக, வரம்புகளை கடந்த வாழ்க்கைத் தேவைகளுக்காக ஓடி வாழ்நாள் நிம்மதியை இழந்து தவிக்கிறார்கள்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஆசைகள் அதிகரிக்க, வாங்கும் சம்பளத்தை மீறிய வாழ்நாள் சேமிப்புகளையும் மீறிய பணத் தேவைகளும் அதிகரிக்கிறது. எட்டு மணி நேர வேலை என்பது பத்து பன்னிரண்டு மணி நேர வேலையாகிறது. நாமே தீர்மானித்துக்கொண்ட புதிய தேவைகளுக்கு ஏற்ப, அதனை ஈடுகட்ட கூடுதல் வருவாய் ஈட்ட என்ன செய்ய வேண்டுமென்ற கேள்வியை எழுப்பி அதற்காக ஓட வைக்கிறது.

இதுபோன்று தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் சந்தோசத்திற்காக, தனக்காக, தன்னுடைய தேவைகளுக்காக இன்னும் கூடுதலாக சம்பாதிக்க வேண்டும். குறுகிய வாழ்நாள் காலத்திற்குள் எல்லா பவிசுகளையும் அனுபவித்தாக வேண்டுமென்ற வேட்கையில் இருப்பவர்களைத்தான் மோசடிக்காரர்கள் எளிதில் தங்கள் வயப்படுத்திவிடுகிறார்கள்.

“நீ வச்சிருக்கிற காசை பேங்க்ல போட்டா இவ்வளவுதான் வட்டி. பத்து வருசம் போட்டாலும் டபுள் ஆகாது. என்கிட்ட கொடு ரெண்டே வருஷத்துல டபுள் ஆக்கி காட்டுறேன்.”னு ஒருத்தன் சொன்னா, அதற்கு அனிச்சை செயலாக நம் தலையை ஆட்டுவிக்கிறது.

நாங்கள் ஏமாந்த கதை”டி.வி.யில பேப்பர்ல விளம்பரம் கொடுத்தா கோடி கணக்கில் செலவாகும். அவன்கிட்ட கோடிய கொட்றதுக்கு பதிலா, வாய்வழியா எடுத்து சொல்லி விக்கிறதாலதான் கம்மி விலைக்கு கொடுக்க முடியுதுனு…” மொக்கையான ஒன்றை நம் தலையில் கட்டும் மல்டிலெவல் மார்க்கெட்டிங் பிசினஸ் பிய்த்துக்கொண்டு ஓடுகிறது.

”நாம சேர்ந்ததோட இல்ல. நாம ஒரு நாலு பேர சேர்த்துவிட்டா, அந்த நாலு பேரு இன்னும் நாலு பேர சேர்த்துவிட்டா, அந்த நாலு-நாலு பேரும் அவங்க அவங்க கணக்குக்கு இன்னும் ஒரு நாலு-நாலு பேர சேர்த்துவிட்டா….” அப்படின்னு மனக்கணக்குகள் கண்முன் விரிகின்றன.

இதுபோன்ற கம்பிகட்டும் கதைகளை நம்பி வாழ்நாள் சேமிப்பை அவர்களை நம்பி கொடுத்துவிட்டு, தற்போது வாழ்நாள் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

—   வே.தினகரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.