கல்லூரிக்கு பணம் கட்ட முடியாமல் மாணவன் தற்கொலை..!

0

கல்லூரிக்கு பணம் கட்ட முடியாமல் மாணவன் தற்கொலை..!

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பச்சனம்பட்டி காலனி பகுதியில் சுப்பிரமணி என்பவர் இரண்டு மகன் மணிகண்டன், கோகுல் மற்றும் மனைவி பாக்கியலட்சுமி ஆகியோருடன் கொத்தனார் வேலை செய்து அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் மூத்த மகன் மணிகண்டன் மேச்சேரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக் படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நன்றாக படித்திருந்த நிலையில் பணம் கட்ட முடியாத பொழுது அவ்வப்போது தனது படிப்புக்காக தந்தையுடன் கொத்தனார் வேலைக்கு சென்று படித்து வந்தார். இந்த நிலையில் மேலும் கல்லூரிக்கு அதிகமாக பணம் கட்ட வேண்டும் என்பதால் தனது தந்தையிடம் கேட்டுள்ளார்.

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

தற்கொலை செய்து கொண்ட மாணவன்
தற்கொலை செய்து கொண்ட மாணவன்

ஆனால் தனது தந்தை கூலி வேலை செய்து பிழைத்து வருவதால் அவரால் பணம் கட்ட இயலவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் மணிகண்டன் மேலும் மேலும் பணம் கட்ட சொல்லி தொந்தரவு செய்ததால் தந்தை மகனை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மணமுடைந்த மணிகண்டன் தனது வீட்டில் சேலையால் தூக்கில் மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் அறிந்த ஓமலூர் போலீசார் மாணவன் பிரேதத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை செய்து வருகின்றனர். ஓமலூர் அருகே கல்லூரிக்கு பணம் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.