அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மாணவர்களிடம் அறம் சார்ந்த அறிவை வளர்த்தெடுக்க வேண்டும்! – ஆசிரியர் மகா.இராஜராஜசோழன் உரை ! யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை 32

திருச்சியில் அடகு நகையை விற்க

அங்குசம் சமூக நல அறக்கட்டளை தொடர்ந்து நடந்தி வரும் யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடையின் 32-ஆம் நிகழ்வாக கடந்த 25.10.2025 ஆம் நாள் நடைபெற்ற படைப்பாளர் அரங்கில் ஆசிரியர் மகா.இராஜராஜசோழன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கி.சதீஷ்குமாரன் சிறப்புரையாளரை அவைக்கு அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்வுக்கு வருகை தந்த சான்றோர்களை வரவேற்றார். சிறப்புரையாளருக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரெ.நல்லமுத்து பயனடை அணிவித்து சிறப்பு செய்தார். பெரியார் விருதாளர் திருச்சி தி.அன்பழகன் நூல்களை வழங்கி சிறப்பித்தார்.

சிறப்புரையாளரை அறிமுகம் செய்து வைத்து தொடக்க உரையாற்றிய பேராசிரியர் கி.சதீஷ்குமாரன், “ சிறப்பு விருந்தினர் மகா.இராஜராஜசோழன் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் முதுகலைத் தமிழ் முடித்து பின்னர் திருச்சி எஸ்.ஆர்.வி. பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். “தாகத்தோடு பயணிக்கும் நதி” என்னும் கவிதை நூலையும், “சார்! இது பேய்….. இது நீங்க“ என்ற தொடக்கப் பள்ளி மாணவர் உளவியல் குறித்த நூலையும் இயற்றியுள்ளார். மாணவர் உளவியல் குறித்த இவரது நூல் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிள்ளைகள் கேட்கும் எந்த கேள்வியாக இருந்தாலும் அதற்குப் பெற்றோர் முறையான சரியான பதில்களைத் தரவேண்டும். மாணவர்களிடம்அறம் சார்ந்த அறிவு வளரவேண்டும் என்ற விழைவோடு தன் எழுத்துப் பணியைத் தொடர்ந்துக் கொண்டிருக்கும் ஆசிரியர் மகா.இராஜராஜன் அவர்களை அவைக்கு அறிமுகம் செய்து வைத்து உங்கள் சார்பில் வரவேற்று மகிழ்கிறேன்” என்று உரையை நிறைவு செய்தார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

ஆசிரியர் மகா.இராஜராஜசோழன்
ஆசிரியர் மகா.இராஜராஜசோழன்

நிகழ்வில் சிறப்புரையாற்றிய ஆசிரியர் மகா.இராஜராஜசோழன், “இன்றைய பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களை அழைத்து நீ கல்லூரிக் கல்வியில் என்ன படிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டால் நூற்றில் தொன்னூற்று எட்டு மாணவர்கள் மருத்துவம், பொறியியல் என்ற இரண்டு பிரிவுகளுக்குள் அடங்கிப் போவார்கள். கண்மூடித்தனமாக மருத்துவர், பொறியியல் என்ற பொதுச் சிந்தனை இவர்களுக்குள் எங்கிருந்து வந்தது. சமூகத்தின் பொதுப்புத்தியிலிருந்து உருவான தட்டையான சிந்தனை இது. இந்தச் சிந்தனையை நுட்பமாகப் பார்க்க வேண்டும்.

https://www.livyashree.com/

தாய்மொழி வழி சிந்திக்க மறந்த தலைமுறைகளை உருவாக்கியதன் விளைவுகள் இவை. மேலை நாட்டு மொழி ஆதிக்கம் குழந்தைகளில் இருந்தே ஆதிக்கம் செலுத்துவதின் விளைவு. இங்கு இன்னொரு சிக்கலும் உருவாகிக் கொண்டிருப்பதை உணரவேண்டும். முழுதுமாக ஆங்கிலவழியில் படிக்கும் குழந்தைகள் பலருக்குத் தாய்மொழியிலும் ஆழ்ந்த அறிவில்லை ஆங்கில மொழியிலும் ஆழ்ந்த ஆறிவில்லாதவர்களாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

யாவரும் கேளீா்நான் எஸ்.ஆர்.வி. பள்ளியில் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, ஒரு நிகழ்ச்சியில் பேசிய அறிஞர் ஒருவர் தன் பேச்சின் இடையில் காஃபி என்பதற்குத் தமிழில் என்ன சொல் பயன்படுத்தப்படுகிறது என்று கேட்டார். எல்லாரும் அமைதியாக இருந்தனர். நான் பள்ளிக்குப் புதிது என்பதால் நானும் அப்படியே இருந்தேன். எனக்குப் பதில் தெரியும் என்றாலும் தொடர்ந்து அமைதியாக இருந்தேன். யாருக்கும் பொருள் தெரியவில்லையா என்றவுடன் எனக்குத் தெரியும் என்றேன். சொல்லுங்கள் என்றார். குளம்பி என்றேன். சரியான பதில். ஏன் அந்தப் பெயர் வந்தது என்பது தெரியுமா? என்றார். காஃபி கொட்டைகள் குதிரையின் கால் குளம்புகள்போல் இருப்பதால் அது குளம்பி என்று அழைக்கப்படுகின்றது என்றேன். அரங்கத்தில் கைதட்டல்கள் கிடைத்தன. இதை நான் படித்து தெரிந்து கொள்ளவில்லை. நான் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் முதுகலைத் தமிழ்ப் படித்துக்கொண்டிருந்தபோது, எனக்குப் பாடம் நடத்திய பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் ஐயா பாடத்திட்டங்களைத் தாண்டி தமிழ்க் கலைச்சொற்கள், பயன்பாட்டில் உள்ள புதிய சொற்கள், அறிஞர்களின் உரை ஆகியவற்றை எங்களுக்கு அறிமுகம் செய்வார். அப்படி அறிமுகம் செய்யப்பட்ட காஃபிக்கான விளக்கம்தான் என்னை ஓர் அரங்கம் பெருமையோடு பார்த்தது என்பதைப் பதிவு செய்கிறேன்.

ஆசிரியர் பணியில், ஒரு மாணவர் தன்னோடு படிக்கும் இன்னொரு மாணவரைப் பார்த்து, மயிரு என்று பேசிவிட்டார். இதை மாணவர் என்னிடம் புகார் செய்ய, நான் மயிரு என்பது கெட்டவார்த்தை இல்லை என்று மாணவரை சமாதானம் செய்தேன். “மயிரு எப்படி கெட்டவார்த்தை இல்லை என்று நீங்கள் மாணவர்களிடம் கூறலாம். நாளை நான் நாளை பள்ளிக்கு வருகிறேன்” என்றார், அந்த மாணவரின் தந்தை.

யாவரும் கேளீா்பள்ளி முதல்வர் வரையில் இந்த விவகாரம் சென்றது. ”மயிரு என்பது கெட்டவார்த்தை என்றால் மயிர் நீப்பின் உயிர்வாழ கவரிமான் என்று வள்ளுவர் திருக்குறளில் கூறியுள்ளார். மயிர்முடி அணிந்திருந்த இராவணன் என்று இராணவ காவியத்தில் குறிப்பிடப்படுகின்றது. ஆங்கிலேயர் வருகை பின்னர் முடிவெட்டிக் கொள்கிற வழக்கம் வரும்போது, வெட்டப்பட்ட மயிர்களைப் பயன்பாடு இல்லாமல் ஒதுக்கித் தள்ளுவதைப் பின்காலத்தில் மயிரு என்றால் வசைச் சொல்லாக மாறிப் போய் உள்ளது”  என்று விளக்கம் சொன்னேன். ”நான் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றுகிறேன். அவசரமாக பள்ளிக்குச் செல்ல வேண்டும் நேரமாகிவிட்டது” என்று அவர் விடைபெற்றார், அந்த மாணவனின் பெற்றோர். மாணவர்களிடம் பாடத் திட்டம் தாண்டி பாடங்களை நடத்தமுடியாத சூழ்நிலையே நிலவுகின்றது.

எனது இல்லத்தில் 2 ஆயிரம் நூல்கள் உள்ளன. என் மகளுக்கு வாசிப்பை அறிமுகம் செய்து வைத்துள்ளேன். தமிழை நன்றாக வாசிப்பார். தாய்மொழி அறிவு இருந்தால்தான் பிறமொழி அறிவு எளிமையாக இருக்கும் என்பதைப் பெற்றோர் அறியாமல் உள்ளனர். பெற்றோர் தங்களின் பிள்ளைகளோடு சேர்ந்து நாள்தோறும் நாளிதழ் மற்றும் புத்தகங்களை வாசிக்க பழக்கவேண்டும். அறிவு அறம் காக்கும் கருவி என்பதை உணர்ந்து நாம் அனைவரும் செயல்பட்டு மாணவர்களின் சிந்தனைத் திறனை மேம்படுத்தவேண்டும்” என்று உரையை நிறைவு செய்தார்.

அங்குசம் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் ஜெடிஆர் சிறப்புரையாற்றிய ஆசிரியர் மகா.இராஜராஜசோழன் அவர்களுக்கு இதழ்களைப் பரிசாக வழங்கி சிறப்பித்தார். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரெ.நல்லமுத்து நன்றி கூற படைப்பாளர் அரங்கம் நிறைவடைந்தது.

—   ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.