என்று தீரும் சோகம்?!
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை – திருமண்டங்குடி பகுதியில் இயங்கி வரும் திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கு எதிராக, கரும்பு விவசாயிகள் 200 நாட்களை கடந்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

திருஆரூரான் சர்க்கரை ஆலையின் உரிமையாளர் தியாகராஜன் ஆலை நட்டத்தில் இயங்கியதாகக்கூறி, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்காமல் ஏமாற்றியதோடு ஆலையை மூடி விட்டார்.
அதனையடுத்து, ஆலையை ஏலம் எடுத்த கால்ஸ் நிறுவனமும் கரும்பு விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கரும்பு பணம் வழங்காதது; விவசாயிகள் பெயரில் கடன் பெற்றது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள். தேர்தல் வாக்குறுதியில் சொன்னதுபோல, ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டு மென்ற கோரிக்கையுடன் தொடர் போராட்டத்தையும் முன்னெடுத்து வருகிறார்கள்.
– தஞ்சை க.நடராஜன்.