“வரி வெறியுடன் அலையும் நிர்மலா மாமி”– ‘சரண்டர்’ விழாவில் மன்சூரலிகான் சரவெடி!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

Upbeat Pictures சார்பில், தயாரிப்பாளர்  வி.ஆர்.வி. குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கௌதம் கணபதி இயக்கத்தில், தர்ஷன் நாயகனாக நடிக்க, காவல்துறை பின்னணியில், அதிரடி ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ள படம் ‘சரண்டர்’.

வரும் ஆகஸ்ட் 01 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் ஜூலை 23- ஆம் தேதி  மதியம் நடந்தது.

Srirangam MLA palaniyandi birthday

இந்நிகழ்வில் அனைவரையும் வரவேற்றுப் பேசி தனது முதல் தயாரிப்பிற்கு பேராதரவு தரும்படி மீடியாக்களுக்கு வேண்டுகோள் வைத்து சுருக்கமாக பேசினார் தயாரிப்பாளர் வி.ஆர்.வி. குமார். அதற்கடுத்து பேசியவர்கள்…

 *மன்சூர் அலிகான்*

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

“இந்த மாதிரி புதியவர்களை ஊக்குவிக்கும் தயாரிப்பாளருக்கு என்  வாழ்த்துகள். சினிமாவில் தொடர்ந்து ஒரே மாதிரி படங்கள் மட்டுமே வருகிறது. அது மக்களுக்கு போரடிக்கிறது. அவர்களுக்கு வித்தியாசமான படங்களைக் கலைஞர்கள் தர வேண்டும். அதே மாதிரியான படமாக சரண்டர் சரியான நேரத்திற்கு வருகிறது.

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள்” என படம் குறித்து பேசிவிட்டு, “இப்பல்லாம் நின்னா வரி, உட்கார்ந்தா ஜி.எஸ்.டி., எந்திரிச்சு நடந்தா சேவை வரின்னு இந்த நிர்மலா மாமி வரி வெறியுடன் இருக்கார்” என பட்டாசாக வெடித்தார் மன்சூரலிகான்.

*ஹீரோயின் பாடினி குமார்*

“எனக்கு வாய்ப்பளித்த கௌதம் சாருக்கு நன்றி. ஹார்ட் ஒர்க், விடாமுயற்சி எல்லாம் சேர்ந்தது தான் இப்படம். கேமராவுக்கு முன்னும் பின்னும் எல்லா கலைஞர்களும் மிகவும் கடினமாக உழைத்துள்ளனர். நீங்கள் தான் இப்படத்திற்கு முழு ஆதரவைத் தர வேண்டும்”.

*இயக்குனர் கௌதம் கணபதி*

“இது எனக்கு முதல் மேடை. என் குரு அறிவழகன் சார் இங்கு வந்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. இப்படத்தை மிக நேர்மையாக எடுத்துள்ளோம். படத்தில் பாட்டு இல்லை, தேவைப்படவில்லை. கேமராமேன், எடிட்டர், மியூசிக் டைரக்டர் என எல்லாமே அறிவழகன் சாரிடமிருந்து வந்தவர்கள் தான். ஒரு டீமாக எல்லோரும் உழைத்துள்ளோம். படம் மிக நேர்த்தியாக வந்துள்ளது. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்”.

*இயக்குனர் அறிவழகன்* “இந்த மொத்த குழுவும் என்னுடன் வேலை செய்தவர்கள் தான். இவர்களுக்கு வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் குமார் அவர்களுக்கு நன்றி.  கௌதம் மிகச்சிறப்பான ஒரு படத்தைத் தந்துள்ளார் அனைவரும் ஆதரவு தாருங்கள்.  படம் வெற்றி பெற வாழ்த்துகள்”.

*தர்ஷன்*

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

கௌதம் சாருக்கு நன்றி, அவர் எப்போதும் என்னை மிகப்பெரிய ஹீரோ போல தான் நடத்தினார். எனக்காக என்னுடன் எப்போதும் நிற்கிறார். தயாரிப்பாளர் குமார் சார் இந்த கதையை நம்பி, புது டீமை நம்பி, இவ்வளவு செலவு செய்து படம் செய்துள்ளார். அவருக்கு நன்றி. படத்தில் எல்லோரும் கடின உழைப்பைத் தந்துள்ளனர்.  என்னை மக்களிடம் சேர்த்த பத்திரிகை நண்பர்கள் இப்படத்தையும் சேர்த்து விடுங்கள்”.

இப்படத்தில்  தர்ஷன் நாயகனாக நடித்துள்ளார், பாடினி குமார் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மன்சூர் அலிகான், லால், அருள் ஷங்கர், முனீஷ் காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

*தொழில் நுட்பக் குழு*

தயாரிப்பாளர்:வி.ஆர்.வி. குமார்,

எழுத்து & இயக்கம் – கௌதமன் கணபதி

ஒளிப்பதிவு : மெய்யேந்திரன்,

இசை : விகாஸ் படிஸா,

எடிட்டர்: ரேணு கோபால்,

கலை இயக்குநர்: ஆர் .கே. மனோஜ் குமார்,

ஸ்டண்ட்: ஆக்‌ஷன் சந்தோஷ்,

ஒலி வடிவமைப்பு: கே.பிரபாகரன் & பி.தினேஷ் குமார்

ஒலிக்கலவை: ஷரோன் மனோகர்,

மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் (S2 மீடியா)

 

—   மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.