அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நகை, பணம் திருட்டில் டிஎஸ்பி – காவல் ஆய்வாளர் மீது சந்தேகம் ! விசாரணை அதிகாரி மாற்றம் !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடப்பட்ட சம்பவத்தில் டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் மீத சந்தேசம் எழுப்பப்பட்டதால் வேறு காவல் ஆய்வாளரை நியமித்து விசாரி்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பகுதியைச் சேர்ந்த முத்து ராமலிங்கம், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு – ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி போலீஸார் கடந்த 2021-ல் சட்ட விரோத காவலில் வைத்து என்னைத் தாக்கினர்.  இதனால் இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தேன்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

அந்த வழக்கில் எனக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து நிலுவையில் உள்ளது.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

இந்நிலையில் கடந்த ஜூன் 26-ல் எனது வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டன. வீட்டிலிருந்த சிசிடிடி கேமரா மற்றம் கதவை உடைத்துப் பொருட்களைத் திருடியுள்ளனர்.

யாவரும் கேளீர்

இது குறித்த போலீஸில் புகார் அளித்தம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது வீட்டை உடைத்து நகை, பணம் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், நகை, பணத்தை மீட்டுத்தரவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.முரளிசங்கர், மனுதாரா் தரப்பில் மனுதாரா் வீட்டில் நடந்த சம்பவத்தில் ராமநாதபுரம் டிஎஸ்பி மற்றும் இளஞ்செம்பூர் காவல் ஆய்வாளருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

இதனால் ராமநாதபுரம் மாவடட காவல் கண்காணிப்பாளர் வேறு எதேனும் ஒரு காவல் ஆய்வாளரை நியமித்து மனுதாரரின் மனுவைப் பரிசீலித்து இரண்டு வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.