‘ஸ்வீட்ஹார்ட்’-ல் ஒரிஜினல் ஸ்வீட் ஹார்ட் யார்?– டிரெய்லர் ரிலீஸ்  ஸ்வீட் ஷாக் நியூஸ்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஒய் .எஸ்.ஆர்பிலிம்ஸ் பேனரில் இசையமைப்பாளர்  யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில்  ரியோ ராஜ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ்‌ சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஸ்வீட்ஹார்ட்’. மார்ச் 14-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆவதையொட்டி டிரெய்லர் வெளியீட்டு விழா பிப்ரவரி 28-ஆம் தேதி காலை சென்னை பிரசாத் லேப் தியேட்டரில்  நடந்தது. படத்தை தமிழகம் முழுவதும் ஃபைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார்.

‘ஸ்வீட் ஹார்ட்’ டிரெய்லர் ரிலீஸ் விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் பொன் ராம், தேசிங்கு பெரியசாமி, சுரேஷ், கார்த்திக் வேணுகோபாலன், ஹரிஹரன் ராம்‌, கலையரசன் தங்கவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

நிகழ்வில் பேசியவர்கள்…..

நடிகர் ரெடின் கிங்ஸ்லி

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

“என் தலைவன் யுவன் சங்கர் ராஜா  தயாரிக்கும் இந்தப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக அவருக்கும் , இயக்குநருக்கும் நன்றி”.

இயக்குநர் இளன்

“யுவன் சாரை சந்தித்த பிறகு தான் என் வாழ்க்கையில் மாற்றம் நிகழ்ந்தது. படத்தின் முன்னோட்டம் இளம் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது. யுவன் சங்கர் ராஜாவிற்கு ‘மார்டன் மாஸ்டரோ’, ‘கிங் ‘ என பல பெயர்கள் இருந்தாலும் அவருடன் பழகிய அனைவருக்கும் தெரிந்த ஒரே வார்த்தை தான் இந்த படத்தின் டைட்டில் போல அவர் ஸ்வீட்ஹார்ட்”.

இயக்குநர் பொன் ராம் 

“யுவனுடன் இணைந்து பாடல் கம்போசிங் செய்வது ஜாலியான அனுபவமாக இருக்கும். முதலில் அவரிடமிருந்து எப்படி பாடல்களை பெறுவது என்பதில் தயக்கம் இருந்தது. ஆனால் அவருடன் பத்து நிமிடம் பழகியவுடன் அவர் ஒரு ஸ்வீட் ஹார்ட் என்பதை தெரிந்து கொண்டேன்.

புது இயக்குநர்களுக்கு யுவன் சங்கர் ராஜா வாய்ப்பளிப்பதை நான் வரவேற்கிறேன். புது இயக்குநர்களை அறிமுகப்படுத்துவது என்பது சாதாரண விசயம் அல்ல. இதற்கு நம்பிக்கை அதிகம் வேண்டும். இதற்காகவும் யுவன் சங்கர் ராஜாவிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி”.

யுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா

திங்க் மியூசிக் சந்தோஷ்

”யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் படத்தில் திங்க் மியூசிக் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். அழகான பீல் குட் ரொமான்டிக் திரைப்படம்.

இந்தப் படத்தில் பணியாற்றிய இயக்குநர் உள்ளிட்ட நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்”.

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன்

“நான் பார்த்து பழகியவர்களில் பாசிட்டிவானவர் ஸ்வீனித். இவரைப் போன்ற ஒருவர் நம்முடன் இருக்கும்போது நாம் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். இப்படி ஒரு இளம் குழுவினரை அறிமுகப்படுத்தும் யுவன் சங்கர் ராஜாவிற்கு நன்றி. என் முதல் ஹீரோ ரியோ ராஜ். அவருக்கு இந்த ஸ்வீட்ஹார்ட் சூப்பர் ஹிட்டாகும்”. இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் முதல் படம். முதல் மேடை.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

‘ஜோ’ பட ஷூட்டிங் கின் போது ரியோ ராஜிடம் இப்படத்தின் கதையை சொல்லிவிட்டேன்.  அடுத்த படம் இதுதான் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ‘ஜோ’ படம் ஹிட்டான பிறகு ஏராளமான தயாரிப்பு நிறுவனங்கள் அவரை அணுகியது. ஆனால் என்னிடம் சொன்ன வார்த்தைக்காக இந்த :ஸ்வீட்ஹார்ட்’ டை நிறைவு செய்து தந்திருக்கிறார். இதற்காக அவருக்கும் இப்படத்தில் நடித்தவர்கள் டெக்னீசியன் கள் அனைவருக்கும்  நன்றி.

இப்படத்தில் படப்பிடிப்பை 34 நாட்களில் நிறைவு செய்தோம்.

யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தின் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் அனைவரும் சொல்வது போல் நானும் யுவனின் பாடல்களை கேட்டு தான் வளர்ந்தேன். நானும் அவருடைய மிகப்பெரிய ரசிகன்.  என்றாவது ஒருநாள் அவரை நேரில் சந்தித்து விட மாட்டோமா..! என்ற ஏக்கத்துடன் இருந்திருக்கிறேன். அவருடைய இசை மற்றும் தயாரிப்பில் நான் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன் என்றால்… அதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பொதுவாக ஒரு படத்திற்கு இயக்குநரைத் தான் கேப்டன் என்று சொல்வார்கள். ஆனால் இந்தப் படத்தை பொறுத்தவரை யுவன்  தான் கேப்டன், இதயம் எல்லாமே அவர் தான். இந்தப் படத்தின் மூலம் என்னைப் போல் நிறைய பேர் ஸ்வீட் ஹார்ட் யுவன் சங்கர் ராஜா வால் அறிமுகமாகி இருக்கிறார்கள்”.

ஹீரோயின் கோபிகா ரமேஷ்,

“எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம், என்னுடைய முதல் தமிழ்ப் படம்.  தமிழ்ப் பெண்ணாக இல்லை என்றாலும் தமிழ் ரசிகர்கள் என் மீது செலுத்தும் அன்பிற்கு நன்றி.

கோபிகா ரமேஷ்
கோபிகா ரமேஷ்

மலையாளத்தில் உள்ளவர்களுக்கும் யுவன் சங்கர் ராஜா தான் ஃபேவரிட். எங்கள் வாழ்க்கையில் வலிகளை மறக்கச் செய்தவர் யுவன். அவர் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடித்திருப்பதை நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன்.

மனு என்ற கதாபாத்திரத்திற்காக என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும் நன்றி. இந்தப் படத்திற்காக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதியன்று தேர்வானேன். இந்த ஒரு வருடத்தில் படக் குழுவினருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது”.

ஹீரோ ரியோ ராஜ்

“இங்கே பேசிய அனைவரும் யுவனின் ரசிகர்கள் தான். அனைவருக்கும் யுவனை மிகவும் பிடிக்கும். ஆனால் எனக்கு மட்டும் ரொம்ப ஸ்பெஷல். அவர் தான் படத்தின் ஒரிஜினல் ‘ஸ்வீட் ஹாட் ‘. இது ஒரு கம்ப்ளீட் ரொமான்டிக் டிராமா. யுவன் சங்கர் ராஜாவின் இசையை ரசித்து அனுபவிக்கலாம்.

இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் மீது நான் வைத்த நம்பிக்கையை அவர் காப்பாற்றி இருக்கிறார். அவர் சினிமாவை மிகவும் நேசிக்கக் கூடியவர். ‘இவர் என் மாணவர்’ என பெருமையாக சொல்வேன்.  சிறப்பு விருந்தினர்களுக்கும் என்னுடன் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி . இந்தப்படத்தில் பாடல் ஒன்றையும் எழுதி இருக்கிறேன். அனைவரும்  ஆதரவளிக்க வேண்டும்”.

ரியோ ராஜ்

ரியோ ராஜ்

தயாரிப்பாளர் & இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா

“மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி.

இந்தப் படத்தின் பணிகள் எப்படி நடைபெற்றது என்றால். முதலில் ஒரு இன்ட்ரோ வீடியோ ஒன்றை வெளியிட்டோம். அதன் பிறகு எனக்கு எதுவும் தெரியாது. நான் டூர் போய்விட்டு வருவதற்குள் படத்தை நிறைவு செய்திருந்தார்கள். உண்மையில் இதான் நடந்தது. அதன்பிறகு படத்தை பார்த்து  பிறகு  எனக்கு உற்சாகம் ஏற்பட்டு இரண்டு பாடல்களை இணைத்தோம்.  இன்றைக்கு ஸ்வீட்ஹார்ட் பிரம்மாண்டமாக தயாராகியிருக்கிறது. இது இயக்குநர் ஸ்வினீத்தின் கனவு. இவரைப் போன்ற ஏராளமான புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு.  மார்ச் 14ஆம் தேதி வெளியாகும் ‘ஸ்வீட்ஹார்ட்: படத்தை பார்க்க திரையரங்குகளில் சந்திப்போம் ”.

 

—  மதுரை மாறன்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.