நீச்சல் குளம்
நீச்சல் குளம்
என் கிராமத்து
நீச்சல் குளம்
குளத்தை சுற்றி
இயற்கை வளம்
குதித்து விளையாடுவதும்
நீச்சலடித்து குளிப்பதும்
சிறுவா்களின் வழக்கம்
சுறுசுறுப்பின் பழக்கம்
உடைந்த பானையை
சில்லாக்கி
குளத்தில் வீசி எறிந்தால்
பறவை பறப்பது போல
தண்ணீரை செதுக்கி ஓடும்
அந்த அழகே அழகு
கைதட்டி சிரிக்கும்
சிறுவா்கள் கூட்டம்
வயற்காட்டில் வேலை பார்த்து
அலுப்பான உடம்புக்கு
உடல் சோர்வை போக்கும்
குளம்
கள்ளம் கபடம் இல்லாமல்
ஆணும் பெண்ணும் குளிக்கும்
படித்துரை
அந்த குளத்தில் ராணியாக
பூத்திருக்கும்
தாமரை
கவிஞா் தஞ்சை ஹேமலதா
Comments are closed, but trackbacks and pingbacks are open.