அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

த.வெ.க. விஜய் இரண்டு தொகுதியில் போட்டி ஏன் ? காரணம் இதுதான் !

திருச்சியில் அடகு நகையை விற்க

தமிழகத்துக்கான 17-வது சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஒரு வழியாக மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறார் த.வெ.க. தலைவரும் நடிகருமான விஜய்.

திரை நட்சத்திரம் என்ற அடையாளத்தோடு, அரசியலில் களம் இறங்கி எம்.ஜி.ஆர். பாணியில் ஆட்சியை கைப்பற்றும் கனவோடு அரசியலில் இறங்கிய விஜய்க்கு அடுத்தடுத்து சோதனைதான். கரூர் சம்பவத்தின் பாதிப்பிலிருந்து கட்சி மீள்வதற்குள்ளாகவே, மனைவி சங்கீதாவின் விவாகரத்து வழக்கு விவகாரம் புயலை கிளப்பியது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

விஜய் ரசிகர் கூட்டம்
விஜய் ரசிகர் கூட்டம்

கரூர் சம்பவத்தை தொடர்ந்து தஞ்சாவூரிலும் தொண்டர் ஒருவர் விஜயின் வாகனத்தை பின்தொடர்ந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரம் வரையில் த.வெ.க. தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. ஆனாலும், இதை எதைப்பற்றியும் தொண்டர்களும் அக்கறை கொண்டதாக தெரியவில்லை. இது தலைமைக்கு, “அதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை” என்று புறங்கையால் ஒதுக்கித்தள்ளும் அளவுக்கு எல்லாமே எளிதாகிப்போனது. அரசியல் தளத்தில் அணில் குஞ்சுகள், தற்குறிகள் என்றெல்லாம் கூர்மையான விமர்சனங்களை முன்வைத்த போதிலும், த.வெ.க. எதற்கும் அசராமல் தனது அடுத்தடுத்த நகர்வுகளை நகர்த்த தொடங்கியிருக்கிறது.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் - MMM TRICHY -

மற்ற கட்சிகளைப்போலவே, த.வெ.க.வும் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களின் விருப்ப மனுக்களை பெறத்தொடங்கியது. எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு விருப்ப மனுக்களை வாங்கிச் சென்றதோடு சரி. அதில் பத்து சதம்கூட, விருப்ப மனுவை பூர்த்தி செய்து திருப்பியளித்ததாக செய்திகள் இல்லை. நேர்காணல் நடத்தியதாகவும் எந்தவொரு புகைப்படங்களும் வெளியாகவில்லை. ஆனாலும், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது த.வெ.க.

அதிமுகவின் செங்கோட்டையன் தொடங்கி, நாஞ்சில் சம்பத், கு.ப.கிருஷ்ணன் என தமிழகம் அறிந்த அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி, கடைசி நேரத்தில் த.வெ.க.வுக்குத் தாவிய திருப்பத்தூர் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் என்.திருப்பதி, நாங்குநேரி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் வரையில், கட்சியில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களின் கடைசிப்புகழிடமாக த.வெ.க. மாறிவிட்டதா? என்ற கேள்வியையும் எழுப்ப வைத்திருக்கிறது.

இந்த பின்புலத்தில்தான், நேர்காணலே நடத்தாமல் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்தது எப்படி? என்ற சொந்தக் கட்சியினரிடமிருந்தே எழும் விமர்சனங்களுக்கு மத்தியில்தான் இந்த வேட்பாளர் அறிவிப்பு சடங்கு நடந்தேறியிருக்கிறது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

விஜய்அடுத்த விசயம், தலைவர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடத்திலும் இருந்தது. எப்படியும் முதல்வர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் போட்டியிடுவார் என்றும் அல்லது கிறிஸ்தவர்களை கணிசமாக கொண்ட திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்த்திருந்த நிலையில், டிவிஸ்டாக இரண்டு இடங்களில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார் விஜய்.

தற்போது விஜய் டிக் செய்திருக்கும் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளுமே, கிறிஸ்துவர்கள் நிறைந்த பகுதி. வேட்பாளர் அறிவிப்பிலும்கூட, தன்னை ஜோசப் விஜய் என்றே அறிமுகப்படுத்திக் கொண்டார் விஜய்.

பெரம்பூர் தொகுதியை பொருத்தவரை 2008 ஆம் ஆண்டு வரையில், தனி தொகுதியாக இருந்து வந்தது.  2008 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது பொது தொகுதியாக மாற்றம் பெற்றது. இந்த தொகுதியில் இதுவரை திமுக 9 முறையும்; அதிமுக, மார்க்சிஸ்ட் தலா மூன்று முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வென்றிருக்கிறது.

கடந்த 2021 தேர்தலில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர், தன்னை எதிர்த்து அதிமுகவுடன் கூட்டணி வைத்து இரட்டை இலையில் போட்டியிட்ட தனபாலனை 54,976 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, தொகுதியை மீண்டும் திமுக வசமாக்கினார். இந்த தொகுதி, 1,07,995 ஆண் வாக்காளர்கள்,  1,14,726 பெண் வாக்காளர்கள் என மொத்தமாக  2,22,792 வாக்காளர்களுடன், சென்னை மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக இருக்கிறது. சுமார் 70,000-க்கு அதிகமான இளைஞர்களின் வாக்குகளை கொண்ட தொகுதி. த.வெ.க. கணக்குப்படி, சுமார் 40,000-க்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட தொகுதி.

அடுத்து, திருச்சி கிழக்கு தொகுதியை பொருத்த வரையில், 2008 ஆண்டு நடைபெற்ற தொகுதி சீரமைப்பில் திருச்சி-1 என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி என்பதாக மாற்றம் பெற்றது.

1984, 1989 ஆகிய இரண்டு முறை மலர்மன்னன், 1996, 2001 ஆகிய இரண்டு முறை பரணிக்குமார், 2006 இல் அன்பில் பெரியசாமி  என தொடர்ந்து திமுக வசமிருந்த தொகுதி. அதிமுகவை பொறுத்த வரையில், 2011 இல் தற்போது ஸ்ரீரங்கம் வேட்பாளராக களம் காணும் மனோகரனும், 2016 இல்  முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் வென்ற தொகுதி இது. இதனை தொடர்ந்து, 2021 தேர்தலில் வெல்லமண்டி நடராஜனை 53,797 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திருச்சி கிழக்கு தொகுதியை தன்வசமாக்கியவர் திமுக வேட்பாளராக களமிறங்கிய கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ். பெரம்பூர் தொகுதியைப் போலவே,  இந்த தொகுதியிலும்  1,04,883 ஆண் வாக்காளர்கள்,  1,12,460 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 2,17, 397 வாக்காளர்கள் உள்ளனர்.  கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மையினரை குறிவைத்தே இந்த தொகுதியை அவர் தேர்வு செய்திருக்கிறார் என்கிறார்கள்.

கட்சியை தொடங்கிய முதல் நாளிலிருந்தே தீயசக்தி திமுக என்றே வர்ணித்து வந்தவர், ஒவ்வொரு மேடையிலும் திமுகவை தனிப்பட்ட முறையில் சீண்டியும் வந்தவர், மற்றவர்களை போல நாங்கள் இல்லை என்று மார்தட்டிக் கொண்டவர், அதுவும் முதல்வர் வேட்பாளர் ஏன் இரண்டு தொகுதியில் போட்டியிட வேண்டும்? என்ற கேள்விதான் தமிழகத்தில் பரவலாக எதிரொலிக்கிறது. நல்லவேளை, மதுரை மாநாட்டில் சொன்னதுபோல, 234 தொகுதிகளிலும் இதே ஜோசப் விஜய்தான் போட்டியிடுகிறான் என்று அறிவிக்காமல் போனாரே!

–              அங்குசம் தேர்தல் செய்திக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.