பழமையான காலத்தில் இரண்டு அல்லது மூன்று தளங்களைக் கொண்ட கோவில்கள் மட்டுமே கட்டப்பட்ட போது கற்களே கிடைக்காத காவிரி சமவெளி பகுதியில் ராஜராஜ சோழன் 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு பிரம்மாண்ட கற்கோவிலை எழுப்பினார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மிகவும் பழமையானதும் பெரியதுமான வைணவ திருத்தலமாகும். இது திருச்சிராப்பள்ளி காவிரி ஆற்றில் நடுவே உள்ள ஒரு தீவு போல் அமைந்திருக்கிறது.