தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை பெற்ற திமுக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் 2021 மே 7ஆம் நாள் தமிழ்நாட்டின் 12ஆவது முதல் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
2006 -11 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் பல ஊழல்கள் நடைபெற்றதாக அதிமுகவின் ஜெயலலிதா குற்றம்சாட்டி பரப்புரை செய்தார். திமுகவின் ஆ.இராசா, கனிமொழி மீது 2G ஊழல் வழக்கு தொடரப்பட்டது.
எம்.ஜி.ஆர். தலைமையிலான அமைச்சரவையில், ஆர். நெடுஞ்செழியன், எஸ். ராமச்சந்திரன், ஆர். எம். வீரப்பன், சி. பொன்னையன், சு. திருநாவுக்கரசர், எம். தம்பிதுரை டாக்டர் எச். வி. ஹண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.