டாஸ்மாக் கடையால் மக்களிடையே மது பழக்கம் அதிகரித்து குடும்ப அமைதி குலைந்துவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு குறைந்துள்ளதாகவும், சமூகத்தில் பிரச்சினைகள் உருவாகி வருவதாகவும்
போலீசார் தொடக்கக் கட்ட விசாரணையில், இருவரும் வயல்வெளியில் சட்டவிரோத மின்வலைக்கு சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்றும், பின்னர் அவர்களின் உடல்கள் உறைகிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
கிருஷ்ணசாமி அவர்கள் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் பொதுமக்களைச் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி, மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு வருகிறார்.
சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.எஸ். அய்யப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர் ஜோதி நிவாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஏழை குடும்பங்களுக்கு அரிசி பைகள் வழங்கினார்.
படந்தால் சந்திப்பில் இறங்கி மதுரை பஸ்சில் ஏறியபோது கைப்பை காணாமல் போனது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனே அவர் சாத்தூர் பஸ் ஸ்டாண்ட் சென்ற போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.
மேல்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், வைப்பாற்றில் தற்போது சுமார் 500 கனஅடி நீர் பாய்ந்து வருகிறது. இதனால் ஆற்றங்கரையோர பகுதிகளில் நீர் மட்டம் தொடர்ந்து உயரும் நிலையில் உள்ளது.