திருச்சியும் சினிமா தியேட்டர்கள் … ( திருத்தம் )

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருவிளையாடல் திரைப்படத்தில் தருமி நாகேஷிடம் சிவபெருமான் சிவாஜியிடம் “ பிரிக்கமுடியாதது எதுவோ” என்று கேட்க “ தமிழும் சுவையும்” என்பார் தருமி…

அப்படித்தான் திருச்சியையும் சினிமாவும் பிரிக்கமுடியாது. 80 களில் திருச்சி ஒன்றும் பெரிய ஊர் அல்ல.!!

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

ஒரு சைக்கிள் எடுத்தால் ஜங்ஷன் உறையூர் டோல்கேட் என்று மொத்தமே இருபது கிலோமீட்டருக்குள் அடங்கிவிடும். ஆனால் அரசியல் கூட்டங்கள் இரவு 11.00 மணிக்கு தொடங்கி விடியற்காலை மூன்று மணிவரை பரோட்டாவும் குருமாவும் சுடச்சுடச இட்லி வழங்கும் இட்லி கடைகள் ஓவ்வொரு பகுதிக்கும் ஒரு திரையரங்கம் இவையெல்லாம் சேரந்துதான் திருச்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும்.!!

திருச்சியில் ராஜா தியேட்டர், ராமகிருஷ்ணா தியேட்டர், ஜூபிடர் தியேட்டர், பேலஸ் தியேட்டர் என நான்கு தியேட்டர்களுமே திருச்சி மதுரை ரோட்டில் அடுத்தடுத்து வரிசையாக அமைந்திருந்த சினிமா தியேட்டர்கள் ஆகும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

பாலக்கரை பகுதியில் சிவாஜிக்குச் சொந்தமான பிரபாத் தியேட்டர். காந்தி மார்க்கெட் பின்புறம் சென்ட்ரல் டாக்கீஸ். கீழப்புலிவார்டு ரோட்டில் முருகன் டாக்கீஸ். காந்தி மார்க்கெட்டுக்கும் மலைக்கோட்டைக்கும் இடைப்பட்ட மையத்தில் பெரிய கடைவீதியில் ராக்ஸி, வெலிங்டன் தியேட்டர்கள். இரண்டுக்கும் ஒரே நுழைவாயில் தான். திருச்சி மக்கள் இதனை “ரெட்டைக் கொட்டாய்” என்பார்கள் அந்தக் காலத்தில்.

மெயின்கார்ட்கேட்டில் கெயிட்டி தியேட்டர். திருச்சி சாலை ரோடு உறையூரில் ருக்மணி தியேட்டர். உறையூரில்
அருணா தியேட்டர். திருச்சி ஜங்ஷனில் பிளாசா தியேட்டர். இந்தப் பிளாசா தியேட்டரில் பெரும்பாலும்
ஆங்கிலப் படங்கள் அமோகமாக ஓடும்.

மெயின்கார்ட்கேட் கெயிட்டி, உறையூர் அருணா தியேட்டர்களில் அந்தக் கால கல்லூரி பருவத்தினரின்
இதயங்களைக் கொள்ளை கொண்ட இந்தித் திரைப் படங்கள் இடைவெளி இல்லாமல் திரையிடப்படும்.

ராக்ஸி, வெலிங்டன் தியேட்டர்களில் ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்
வெளியிடப்படும். முருகன் டாக்கீஸில் திருச்சி நகருக்குள் முதன்முதலாக ரிலீசான படங்கள் ஒவ்வொன்றும்

இரண்டாவது ரவுண்டாக முருகன் டாக்கீஸில் ஓடிக் கொண்டிருக்கும். எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களில் பெரும்பாலும் ஜூபிடர், பேலஸ் தியேட்டர்களை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும்.

சிவாஜி நடித்த பக்திப் படங்கள் பெரும்பாலும் சென்ட்ரல் டாக்கீஸ்சில் ரிலீஸ் ஆகும். சிவாஜி நடித்த பெரும்பாலான படங்கள் பாலக்கரை பிரபாத் தியேட்டரிலும், மதுரை ரோடு ராஜா தியேட்டரிலும் தான் ரிலீஸ் ஆகும்.

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

அப்போது திருச்சிக்குள் சென்ட்ரல் டாக்கீஸ்சும், ராஜா தியேட்டர் இரண்டும் தான் பார்வையாளர்கள் இருக்கைகள் அடிப்படையில் கொஞ்சம் பெரிய தியேட்டர்கள். பாலக்கரை பிரபாத் தியேட்டரில் சிவாஜி நடித்த “சவாலே சமாளி” ரிலீஸ்சின் போது

திருச்சிக்கு வெளியே சுற்றுவட்டாரக் கிராம மக்கள் மாட்டு வண்டிகள் கட்டிக் கொண்டு வந்து “சவாலே சமாளி” திரைப்படம் பார்த்துக் கண்டு களித்ததெல்லாம் தனி வரலாறு.

ஜங்ஷன் பகுதியில் ஆங்கில படங்களை மட்டுமே திரையிடும் பிளாசா தியேட்டர்.!! இரண்டாவது ஷோ 12.00 மணிக்கே முடிந்து பிளாசா தியேட்டரிலிருந்து வெளியேறும் கும்பல் திரைப்படத்தை பற்றி பேசுவதைவிட பிளாசா தியேட்டரில் இடைவேளையின் போது சுடச்சுடச் போடப்படும் முட்டைகோஸ் வடையின் சுவையை பற்றியே பேசி கலையும்.!!

இன்றைய ராஜா காம்பெளக்ஸ் அன்றைய ராஜா தியேட்டர்கள் டி. ஆரின் முதல் படமான ஒரு தலை ராகம் , கே. பாக்கியராஜ் முந்தானை முடிச்சு போன்ற திரைப்படங்கள் வெள்ளிவிழா கண்டது இங்கேதான்.!!

1979 ல் ஜூபிடர் தியேட்டரில் காற்றிலே வரும் கீதம் திரைப்படத்தை பார்த்து தியேட்டரை விட்டு வெளியே வந்த போது காவேரி வெள்ளம் திருச்சியில் நகருக்குள் கரைபுரண்டு ஓடியது.!!

1980 களில் ஜங்ஷன் கலையரங்கம் திரையரங்கம் எம்ஜிஆர் இறுதியாக நடித்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தோடு தன் சினிமா கணக்கை தொடங்கியது.!!

ஆசியாவிலே ஒரே காம்பெளக்ஸில் ஐந்து தியேட்டர்கள் என்று மாரீஸ் காம்பெளக்ஸ் தொடங்கியது திருச்சியில் சினிமா புத்தாடைக்குள் மாறியது.!!

நவீன ஆங்கில படங்களுக்கு சிப்பி தியேட்டர் 3 டி திரைப்படங்களுக்கு மகாராணி தியேட்டர் இப்படி வகைவகையாய் தியேட்டர்கள் கொண்ட ஊர் திருச்சி மட்டுமே. அத்தனை தியேட்டர்களையும் மாரீஸ் தியேட்டர்கள் வாரி சுருட்டிக் கொண்டது.!!

என்றைக்கு மாரீஸ் வந்ததோ அன்றிலிருந்து திருச்சியில் சினிமா நவீனவடிவம் கொண்டது மட்டுமின்றி பராம்பரிய தியேட்டர்கள் அத்தனையையும் காலி செய்துவிட்டது.!! இன்றும் “எல்.ஏ சினிமா” என்ற பெயரில் சக்கைபோடு போடுகிறது.!!

என்னைப்போன்ற 80 kட்ஸ் அக்கா வளர்மதி புதுசா திருச்சிக்கு கல்யாணம் கட்டிவந்துஅடுக்கையடியில் அக்கா ஒரு பச்சைகலர் டப்பாவிலிருந்து எடுத்துகொடுத்த காசில் ராக்சி- வெலிங்கடன் தியேட்டர்களில் பார்த்த திரைப்படங்களை மெல்ல அசைபோட்டபடி அந்த பகுதிகளை கடந்து போகிறோம்.!!

– செல்வராஜ் கருப்பையா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.