அங்குசம் சேனலில் இணைய

இதுதான் இன்றைய தமிழ்நாடும் இந்தியாவும்……

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

  • கோவில் கருவறையில் தமிழ் மொழிக்கு தமிழ்நாட்டில் அனுமதி இல்லை..
  • அனைத்து சாதி அர்ச்சகர் சட்டப் போராட்டத்தால் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கருவறைக்குள் பூஜை செய்ய முடியாது….
  • கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் என்னும் புர்க்கா அணிய கூடாது.
  • மாட்டுக்கறியை உலக நாடுகள் முழுக்க ஏற்றுமதி செய்வதிலும் அதே கறியை வைத்திருந்ததாக கூறி கொலை செய்வதிலும் முதலிடத்தில் இருப்பது.
  • இந்து கடவுள்களை வைத்துக்கொண்டு கலவரங்களை தூண்டி அதன் மீது ஆட்சி நடத்துவது.
  • சகோதரத்துவத்தை உடைத்து சாதிய கட்டமைப்பை வலுப்படுத்துவது.
  • உ.பி , குஜராத் போல கல்வி அறிவு அற்ற அடிமை விலங்குகளை தமிழ்நாட்டில் உருவாக்குவது.
  • மாநில சுய ஆட்சியை ஒழித்து ஒன்றியத்திடம் கையேந்தும் நிலையை உருவாக்குவது.
  • இலக்கியம், அறிவியல்,வரலாறு இவைகளை திரித்து புராணக் குப்பைகளை பாடத்திட்டமாக்குவது.
  • நடுநிலைப் பள்ளியிலேயே பொது தேர்வை திணித்து கல்வி அறிவின் சதவீதத்தை குறைக்க சதி செய்வது.
  • நம் உழைப்பை சுரண்டி வரிப்பணமாய் தின்றுவிட்டு நிதி தர முடியாது என திமிராக பேசுவது.
  • போராடி பெற்ற தொழிலாளர் உரிமைகளை புதிய சட்டங்களை உருவாக்கி முடக்குவது.
  • குற்றவியல் சட்டங்களை நஞ்சாக்கி ஜனநாயகத்தை கொலை செய்வது.
  • பாலியல் குற்றவாளிகளுக்கு அரசு பதவி முதல் அமைச்சர் தகுதி வரை கொடுத்து அழகு பார்ப்பது.
  • தமிழ்நாட்டின் பொதுத்துறைகள் அத்தனைகளிலும் காவிகளை உயர் அதிகாரிகளாக அமர்த்துவது.
  • அம்பேத்கர், பெரியார் போன்ற தமிழ்நாடு ஆளுமைகளை அவதூறு செய்ய அரசியல் வேசிகளை உருவாக்கி கைக்குள் வைத்துக் கொள்வது.
  • 10 பைசாவுக்கு கூட பயன்படாத ஆளுநர் என்ற ஒன்றை உருவாக்கி கோடிக்கணக்கில் செலவு செய்து போட்டி அரசாங்கம் நடத்துவது.
  • வள்ளுவர், வள்ளலார் தொடங்கி நீதிமன்றங்கள் வரை காவி சாயம் பூசுவது.
  • மாட்டு மூத்திரத்தை மருந்து என்றும் புனிதம் என்றும் ஐஐடி வரை ஊத்திக் கொடுப்பது..
  • மனு தர்மத்தையும் சனாதனத்தையும்

அரசமைப்பு சட்டமாக்கி ஒரே மதம் கொண்ட நாடாக மாற்றுவது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

  • மனித நாகரீகத்தின் அடையாளமாய் திகழும் தாய் மொழியை அழித்து மாற்று மொழியை திணிப்பது.
  • நாம் உதிரம் சிந்தி உருவாக்கிய பொதுத்துறைகளை பெரு நிறுவன முதலைகளுக்கு இறையாக்குவது.
  • நாட்டின் செல்வங்களை சூறையாட கதவுகளை திறந்து விட்டு வெளியில் நின்று காவல் காப்பது…
  • பாசிசத்தின் அபாயம் தெரிந்தும் தன்னை நம்பியவர்களை பலி கொடுக்க உருவாகும் வேடதாரி எட்டப்பர்கள்..

மொத்தத்தில் மூன்று வேளை உணவுக்காக அந்நியனிடம் கையேந்தும் நிலையை உருவாக்கி… நாட்டை மீண்டும் மறுகாலணியாக்கும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

தேச துரோகிகள் நம்மை மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்திற்கு அனைவரையும் தயார்படுத்துகிறார்கள்.

நாம் உண்டு நம் பொழப்பு உண்டு என நீங்களே கண்டு காணாமல் ஒதுங்கி சென்றாலும்… இனி நீங்கள் விரும்பாத அரசியலால்… ஆளப்படுவீர்கள்., ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

விழித்துக் கொள்ளுங்கள்….

உங்களுக்கான அரசியலை விரும்புங்கள்….

 

     —       செ.கார்க்கி,  திருச்சி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.