அன்பிலாரின் பேரனே…ஏனிந்த விபரீதத் தடுமாற்றம் ?
அன்பிலாரின் பேரனே…ஏனிந்த விபரீதத் தடுமாற்றம் ?
அன்பிலாரின்
பேரனே…
எல்லாம்
நல்லாத் தானே
போய்க் கொண்டிருந்தது.
பல செயல்பாடுகளிலும்
அடுத்தடுத்து
ஏனிந்த
விபரீதத் தடுமாற்றம்?
ஒரு மாணவனின்
மாற்றுச் சான்றிதழில்
அதுவும் இன்ன காரணம் எனக் குறிப்பிட்டு
பள்ளி மாற்றுச் சான்றிதழ் தந்து நிரந்தரமாக
நீக்கினால்…
குறிப்பிட்ட
கறை படிந்த மாணவன்
அடுத்து எந்தப் பள்ளியில் சென்று சேர்ந்து படிப்பைத்
தொடருவான்?
அவனை
இருட்டறையில்
தள்ளி
அறைக் கதவைப்
பூட்டி விடுவதும்
இதுவும்
ஒன்று தான்.
சாதிக் கயிறு
கட்டக் கூடாது…
மொபைல் போன் பள்ளிக்குக் கொண்டு வரக் கூடாது…
ஆசிரியர் ஆசிரியைகளை
நக்கல் நையாண்டி செய்திடல் கூடாது
போன்றவைகளை
மிகக் கடுமையாக
நடைமுறைப் படுத்துங்கள்…
மாதம்
ஒரு முறையாவது
அந்தந்தப் பள்ளிகளில்
மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள்
கூட்டுக் கூட்டத்தினை
நடத்திட உத்தரவு
இடுங்கள்.
நம் சமூகத்தில்
மாணவனை மாணவியரைக்
குற்றவாளியாக
அடையாளம்
காட்டும்
இந்த சீர்மிகு
முயற்சியினை
முதலில்
கை விடுங்கள்.
கடந்த
பல ஆண்டுகளாகவே
ப்ளஸ் ஒன் ப்ளஸ் டூ
மாணவ மாணவியர்கள்
(எல்லோரும் அல்ல)
டாஸ்மார்க் கடைகள்
மூலமாக பாட்டில்கள்
வாங்கிக் குழுவாக
“சரக்கு” அடிப்பதாக
சமூக வலைத் தளங்களில்
காணொளிகள்
வலம் வந்தனவே…
அப்போதைய
ஜெயலலிதா அரசும்
இப்போதைய
முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அரசும்…
அவைகள் சார்ந்து
என்ன நடவடிக்கைகள்
வெளிப்படையாக
எடுத்துள்ளன?
வளரும்
வளர வேண்டிய
மாணவப் பயிர்களை துளிர்க்கும் போதே…
இந்தப் பொது சமூகத்தில் இருந்து
“துண்டித்து”
தண்டித்து விடாதீர்கள்.
இப்படிக்கு…
எங்கள் மாவட்ட
அடையாளமாக விளங்கிய
அன்பிலார் அவர்களின்
பேரனுக்கு…
– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு
கல்கி.