ஸ்ரீரெட்டி, வனிதா, விஜயலெட்சுமி விவகாரத்தில் சிக்கிய ஹரிநாடார் : அடுத்தது யாரோ?

0

ஸ்ரீரெட்டி, வனிதா, விஜயலெட்சுமி விவகாரத்தில் சிக்கிய ஹரிநாடார் : அடுத்தது யாரோ?

எப்போதும் பத்து கிலோ நகையை அணிந்தபடி வலம் வருபவர் அதிரடிப் பார்ட்டியான ஹரிநாடார். கடந்த தேர்தலின் போது, பிரதமர் மோடி, ரேஞ்சுக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்து பிரச்சாரம் செய்தனர் ஹரிநாடாரும் ராக்கெட் ராஜாவும். “என்னை அதுக்குப் பயன்படுத்தினார்கள்” என ஆந்திர கிளாமர் நடிகையான ஸ்ரீரெட்டியும் சில மாதங்கள் ஹரிநாடாரின் அரவணைப் பிலும் பாதுகாப்பிலும் இருந்தார்.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

4 bismi svs

கடந்த 2021 மார்ச் மாதம், அதாவது தேர்தலுக்கு சில மாதங் களுக்கு முன்பு ‘அண்ணாச்சி சினி மார்க்’ என்ற பெயரில் சினிமாக் கம்பெனியைத் துவக்கிய ஹரி நாடார், ‘2 கே காதல் அழகானது’ என்ற படத்தின் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார் ‘பனங்காட்டுப் படை’ கட்சியின் தலைவரான ஹரி நாடார். ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்த இந்தப் படத்தின் அமளிதுமளியான பூஜைக்கு, டைரக்டர் ஹரி, நடிகர் இமான் அண்ணாச்சி உட்பட நாடார் சமூகப் பிரமுகர்கள் பலர் ஆஜராகினர். படத்தின் ஹீரோயினாக, அதாவது ஹரிநாடாருக்குச் ஜோடியாக, ‘எதற்கும் துணிந்த’ வனிதா விஜயகுமார் கமிட்டானார். இதற்காக பெரிய அமவுண்டைக் கொடுத்த ஹரிநாடார், சில கோடிகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி வனிதாவிடம் கொடுத்திருந்தார்.

தேர்தல் முடிந்து சில மாதங்களிலேயே, பேங்கில் 50 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாகச் சொல்லி, பெங்களூரு தொழிலதிபர் ஒருவரிடம் 4 கோடி ரூபாய் சீட்டிங் போட்ட வழக்கில், ஹரிநாடாரை அள்ளிக் கொண்டு போனார்கள் பெங்களூர் போலீசார்.
இதுவும் போக டைரக்டரும் ‘நாம் தமிழர்’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானுக்காக, நடிகை விஜய லட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, சில மாதங்களுக்கு முன்பு தமிழக போலீசார், கர்நாடக ஜெயிலில் இருந்த ஹரிநாடாரை அரெஸ்ட் பண்ணி, இங்கே சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து, மீண்டும் கர்நாடக ஜெயிலுக்கு அனுப்பிவிட்டனர். நடிகை விஜயலட்சுமி வழக்கில் சீமான் மட்டும் தப்பியபடியே இருக்கிறார்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.