விளையாட்டு வீராங்கனைக்கு தமிழக அரசு வேலை !

0

விளையாட்டு வீராங்கனைக்கு அரசு வேலை! உதயநிதி முன்னெடுப்பு! செண்பக மூர்த்தி பங்களிப்பு!

ரோஸி மீனா
ரோஸி மீனா

தஞ்சை மாவட்டத்தில், மிக எளிமையான குடும்பத்தில் பிறந்து கோலூன்றி தாண்டுதல் விளையாட்டுப் போட்டியில், இந்திய அளவில் கலந்து கொண்டு, தேசிய சாதனையை இரண்டு முறை முறியடித்தார் ரோஸி மீனா. சர்வதேச உள்ளரங்கு விளையாட்டுப் போட்டியிலும் இந்தியா சார்பில் கலந்து கொண்டு வெண்கலப் பரிசு பெற்றவர்.

4 bismi svs

தற்போது இவரது விளையாட்டுத் திறமையை அறிந்த விளையாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் பரிந்துரையில் , தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழ் நாடு செய்தித்தாள் மற்றும் காகிதம் நிறுவனம் JO. இளநிலை அலுவலர் பதவி வழங்கி, 2.11.2023 அன்று தமிழக அரசு ரோஸி மீனாவிற்கு கௌரவம் சேர்த்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக அமைந்த சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர், எம். செண்பக மூர்த்தி அவர்கள்(ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர்) நோக்கி ரட்சகன் மூவி இணை தயாரிப்பாளர் அவர்கள் ரோஸி மீனாவிற்கு தேவையான உதவிகளை, ஆரம்ப காலத்தில் இருந்து வழங்கி ஊக்கிவித்ததோடு, இந்த வேலை வாய்ப்பு வழங்கிய பெரும் கருணை உள்ளம் கொண்ட முதல்வர்  அவர்களுக்கும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி சார் அவர்களுக்கும் இந்த விளையாட்டுப் பிரிவில் சிறப்புற விளங்கிட விலை உயர்ந்த pole (கோல்) வழங்கி உதவிய  செண்பக மூர்த்தி சார் அவர்களிடம், தனக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அரசு ஆணையை நன்றியுடன் காண்பித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார் ரோஸி மீனா.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.