நிதி ஆயோக் குறியீட்டில் தமிழகம் பின்தங்கியுள்ளது ! உதயநிதி கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் டாக்டர் சரவணன் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விருதுநகர் மாவட்டத்தின் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் அனைத்து துறைகளுக்கும், இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டு மாநிலமாக உள்ளது என்று ஒரு தவறான தகவலை உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். நிதி ஆயோக் வெளியிட்ட தகவலில் தேசிய சராசரி விட தமிழகத்தை காட்டிலும் மற்ற மாநிலங்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளது என்பதை அவர் மறைத்துள்ளார்.

தற்போது நிதி ஆயோக் வெளியிட்ட தகவலில் கடந்த எடப்பாடியார் ஆட்சியோடு தற்போது விடியா திமுக ஆட்சியை ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழகம் பின்நோக்கி தான் உள்ளது குறிப்பாக எடப்பாடியார் ஆட்சியின் 2020,2021 ஆண்டின் குறியீட்டையும், தற்பொழுது விடியா திமுக அரசின் 2023 ,2024  குறியீட்டையும் எடுத்து வெளியிட்டுள்ளார்கள்.

SIR Tamil Movie

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

குறிப்பாக எடப்பாடியார் ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட குறியீட்டில் அப்போது கொரோனா என்பது குறிப்பிடத்தக்கது எடப்பாடியார் ஆட்சியில் ஒரு லட்சம் நபர்களுக்கு தற்கொலை விகதத்தில் 17.8 சதவீதம் இருந்தது, தற்போது திமுக ஆட்சியில் 25.9 சதவீதமாக உயர்ந்து விட்டது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

சாலை விபத்தை எடுத்துக் கொண்டால் எடப்பாடியார் ஆட்சியில் 13.88 சதவீதம் இருந்தது தற்போது  திமுக ஆட்சியில் 23.09 சதவீதமாக உயர்ந்து விட்டது.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் கணித பாடம் திறன் குறைவு எடுத்துக் கொண்டால் எடப்பாடியார் ஆட்சியில் 67 சதவீதம் இருந்தது, தற்பொழுது 71.3 சதவீதமாக உயர்ந்துவிட்டது.

உயர் கல்வி சேர்க்கையில் எடப்பாடியார் ஆட்சியில் 49 சதவீதமாக இருந்தது அதனைத் தொடர்ந்து 2021 ஆண்டின் முடிவில் 51 சதவீதமாக உயர்ந்து இருந்தது தற்போது திமுக ஆட்சியில் 47 சதவீதமாக குறைந்துவிட்டது. தொழில் துறையில் புதிய கண்டுபிடிப்பு திறன் எடப்பாடியார் ஆட்சியில் 37.95 சதவீதமாக இருந்தது தற்போது திமுக ஆட்சியில் 15.69 சதவீதமாக பாதி அளவில் குறைந்து விட்டது.

பட்டியலின மக்களுக்கு நாங்கள் பாதுகாப்பான இருந்தோம் என்று ஸ்டாலின் கூறுகிறார் ஆனால் எடப்பாடியார் ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களில் ஒரு லட்சம் நபர்களுக்கு  7.9 சதவீதம் இருந்தது, தற்போது  திமுக ஆட்சியில் 12.2 சதவீதமாக உயர்ந்து விட்டது.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

மலைவாழ் மக்களுக்கு எதிரான குற்றங்களில் ஒரு லட்சம் நபர்களுக்கு எடப்பாடியார் ஆட்சியில் 3.9 சதவீதமாக இருந்தது. தற்போது திமுக ஆட்சியில்  8.4 சதவீதமாக உயர்ந்து விட்டது.  குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஒரு லட்சம் நபர்களுக்கு எடப்பாடியார் ஆட்சியில் 20.37 சதவீதம் இருந்தது. தற்பொழுது திமுக ஆட்சியில் 33.93 சதவீதமாக உயர்ந்துள்ளது. குழந்தைகள் காணாமல் போவது எடப்பாடியார் ஆட்சியில் 22.37  சதவீதம் இருந்தது  தற்போது 33.93 சதவீதமாக உயர்ந்து விட்டது.

அதே போல் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் நிதி ஆயோக் அறிக்கையில் தேசிய சராசரியை ஒப்பிட்டு, அதில் தமிழகம் தேசிய சராசரி காட்டிலும் அதிக மதிப்பீடு பெற்றதாக விளம்பரபடுத்தி வருகிறார் ஆனால் உண்மை என்னவென்றால் தேசிய சராசரியை காட்டிலும் மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டை காட்டிலும் மதிப்பீட்டை அதிமாக பெற்று முதலிடத்தில் உள்ளதை மறைத்து விட்டார்.

பசிப்பிணி அகற்றலில் தேசிய சராசரி 52 சதவீதம் தான் ஆனால் தமிழகம் 75 சதவீதம் பெற்றதாக கூறுகிறார். ஆனால் இதே கேரளாவில் எடுத்துக் கொண்டால் 84 சதவீதம் ,பஞ்சாப் 83 சதவீதம், அருணாச்சல பிரதேசம் 81 சதவீதம், மணிப்பூர் 77 சதவீதம், சிக்கிம் 77 சதவீதம், மிசோரம் 76 சதவீதம், அரியானா 75 சதவீதம் என்று மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் ஆறாவது இடத்தில் தான் உள்ளது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தரமான கல்வியில் தேசிய சராசரி 61 சதவீதம் இதில் தமிழ்நாடு 76 சதவீதம் என்று ஒப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கேரளாவில் எடுத்துக் கொண்டால் 82 சதவீதம், ஹரியானா  77 சதவீதம், இமாச்சலப் பிரதேசம் 77 சதவீதம்  அதற்கு பின்பு தான் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது.

தூய்மையான குடிநீரில் தேசிய சராசரி 89 சதவீதம்,ஆனால் தமிழ்நாடு 89 சதவீதம் பெற்றதாக கூறப்படுகிறது ஆனால் கோவா எடுத்துக் கொண்டால் 100 சதவீதம், இமாச்சலப் பிரதேசம் 99 சதவீதம், பீகார் 98 சதவீதம், சிக்கிம் 97 சதவீதம், மிசோரம் 94 சதவீதம், உத்தரகாண்ட் 94 சதவீதம், சதீஸ்கர் 93 சதவீதம், மகாராஷ்டிரா 93 சதவீதம், உத்திரபிரதேசம் 93 சதவீதம், ஆந்திரா 91 சதவீதம்,கர்நாடகா 90 சதவீதம் என தமிழ்நாடு 9 வது இடத்தில் தான் உள்ளது.

சுகாதாரம் மற்றும் மக்கள் நலனில் தேசிய சராசரி 77 சதவீதம் தான் ஆனால் தமிழகம் 77சகவீதம் பெற்றதாக என்று கூறுகிறது ஆனால் குஜராத் எடுத்துக் கொண்டால் 90 சதவீதம், மகாராஷ்டிரா 84 சதவீதம், உத்தரகாண்ட் 84 சதவீதம், இமாச்சலப் பிரதேசம் 83 சதவீதம், கர்நாடகா 80 சதவீதம், கேரளா 80 சதவீதம், கோவா 79 சதவீதம், பஞ்சாப் 79 சதவீதம், திரிபுரா 79 சதவீதம், மேற்கு வங்காளம் 79 சதவீதம், ஆந்திரா 78 சதவீதம், ஜார்கண்ட் 77 சதவீதம், இதில் தமிழ்நாடு  இடத்தில் 7 தான் உள்ளது.

அமைதி காத்தல், நீதி நிர்வாகம், வலுவான நிறுவனங்களில் தேசிய சராசரி 74 சதவீதம் இதில் தமிழகம் 74 சகவீதம் என்று கூறப்படுகிறது. ஆனால் குஜராத் எடுத்துக் கொண்டால் 87 சதவீதம், இமாச்சலப் பிரதேசம் 85 சதவீதம், மிசோரம் 84 சதவீதம், கோவா 83 சதவீதம், கேரளா 82 சதவீதம், திரிபுரா 82 சதவீதம்,மேற்கு வங்காளம் 82 சதவீதம், கர்நாடகா 81 சதவீதம், பஞ்சாப் 81 சதவீதம், உத்தரகாண்ட் 81 சதவீதம், சிக்கிம் 80 சதவீதம், அருணாச்சலப்பிரதேசம் 79 சதவீதம், தமிழ்நாடு 74  சதவீதம் என தமிழகம் 9வது இடத்தில் உள்ளது.

உற்பத்தி மற்றும் நுகர்வில் தேசிய சராசரி 78 சதவீதம் உள்ளது இதில் தமிழகம் 78 சதவீதம் என கூறப்பட்டுள்ளது. இதில் திரிபுரா  எடுத்துக் கொண்டால் 99 சதவீதம், சதீஸ்கர் 95 சதவீதம், மேற்கு வங்காளம் 94 சதவீதம் ,ஆந்திரா 93 சதவீதம், மத்திய பிரதேசம் 92 சதவீதம், அருணாச்சல பிரதேசம் 90 சதவீதம், ராஜஸ்தான் 89 சதவீதம், உத்தரகாண்ட் 86 சதவீதம்,கர்நாடகா 85 சகவீதம், ஒடிசா 85 சதவீதம், உத்தரபிரதேசம் 85 சதவீதம், இமாச்சலப் பிரதேசம் 78 சதவீதம்  இதில் தமிழ்நாடு 10வது இடத்தில் உள்ளது.

நிலத்தில் வாழ்க்கை குறியீட்டில் தேசிய சராசரி 75 சதவீதம் இதில் தமிழகம் 72 வது இடத்தில் பின்னோக்கி உள்ளது .இதில் ஜார்கண்ட் மாநிலம் 95 சதவீதம்,  திரிபுரா 95 சதவீதம், உத்தரகாண்ட் 94 சதவீதம்,அஸ்ஸாம்  91 சதவீதம், மேற்கு வங்காளம் 91சதவீதம், மத்திய பிரதேசம் 90 சதவீதம் ,கேரளா 88 சதவீதம், மணிப்பூர் 83 சதவீதம், தெலுங்கானா 82 சதவீதம், அருணாச்சலப்பிரதேசம் 80 சதவீதம்,கோவா 79 சதவீதம், சதீஸ்கர் 78 சதவீதம், இமாச்சலபிரதேஷம் 78 சதவீதம், ஆந்திரா 77 சதவீதம், குஜராத் 76 சதவீதம், ஒடிசா 76 சதவீதம், நாகாலாந்து 74 சதவீதம், பீகார் 73 சதவீதம், சிக்கீம் 72 சதவீதம் தமிழ்நாடு 15 இடத்தில் பின்னோக்கி உள்ளது.

நிலையான நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டு தேசிய சராசரி 83 சதவீதம் இது தமிழ்நாடு 81சதவீதம் பெற்று பின்னோக்கி உள்ளது. இதில் மகாராஷ்டிரா 98 சதவீதம் ,குஜராத் 94 சதவீதம்,பஞ்சாப் 94 சதவீதம், உத்தரகாண்ட் 89 சதவீதம், சிக்கிம் 88 சதவீதம், ஹரியானா 86 சதவீதம், மத்திய பிரதேசம் 86 சதவீதம், தெலுங்கானா 86 சதவீதம், ஆந்திரா 85 சதவீதம்,கர்நாடகா 85 சதவீதம், கேரளா 84 சதவீதம், மணிப்பூர் 83 சதவீதம், உத்தர பிரதேஷ் 82 சதவீதம் என தமிழகம் 10வது இடத்தில் பின்னோக்கி உள்ளது.

பாலின சமத்துவத்தில் தேசிய சராசரி 49 சதவீதம் தமிழகம் 53 சதவீதமாக உள்ளது இதில் நாகலாந்து 74 சதவீதம், மிசோரம் 69 சதவீதம், கேரளா 66 சதவீதம்,சிக்கிம் 65 சதவீதம், இமாச்சலப்பிரதேசம் 62 சதவீதம், கோவா 61 சதவீதம், மேகாலயா 58 சதவீதம், உத்தரகாண்ட் 56 சதவீதம், அருணாச்சல பிரதேஷ் 54 சதவீதம், மகாராஷ்டிரா 53 சதவீதம் இதில் தமிழகம் 10 வது இடத்தில் உள்ளதுபொருளாதாரம் மற்றும் சிறந்த வேலை வாய்ப்பில் தேசிய சராசரி 68 சதவீதம் இதில் தமிழ்நாடு 81 சதவீதம் உள்ளது.

இமாச்சலப் பிரதேசம் 88 சதவீதம், கர்நாடகா  86 சதவீதம், சிக்கிம் 84 சதவீதம், தெலுங்கானா 84 சதவீதம், மிசோரம் 81 சதவீதம் இதில் தமிழகம் 4 வது இடத்தில் உள்ளதுதொழில் வளர்ச்சி மற்றும் உள்கட்ட வசதிகளில் தேசிய சராசரி 61 சதவீதம் இதில் தமிழகம் 67 சதவீதம் உள்ளது கோவா 76 சதவீதம், அரியானா 72 சதவீதம், கேரளா 69 சதவீதம் பஞ்சாப் 69 சதவீதம்,இதில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது.

சமத்துவமின்மையை குறைத்தலில் தேசிய சராசரி 65 சதவீதம் தமிழ்நாடு  76 சதவீதம் உள்ளது கோவா 87 சதவீதம், இமாச்சலப் பிரதேசம் 80 சதவீதம், சிக்கிம் 80 சதவீதம், மணிப்பூர் 79 சதவீதம், மேகாலயா 77 சதவீதம், பஞ்சாப் 77 சதவீதம், திரிபுரா 77 சதவீதம் இதில் தமிழகம் 5 வது இடத்தில் உள்ளது.

விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்த திமுக அரசு தற்போது நிதி ஆயோக் குறியீட்டில் தமிழகத்தில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கிய உதயநிதி ஸ்டாலின்  மக்கள் அதை நம்ப மாட்டார்கள்  என டாக்டர் சரவணன் கூறினார்.

 

—   ஷாகுல்.   படங்கள் : ஆனந்தன்

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.