சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட கைத்துப்பாக்கியோடு களத்தில் இறங்கிய தமிழகப் போலீசார் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட கைத்துப்பாக்கியோடு களத்தில் இறங்கிய தமிழகப் போலீசார் !  – ”தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை” என்று எதிர்க்கட்சிகள் மாறிமாறி குற்றம் சாட்டிக் கொள்வதென்பது வழக்கமான ஒன்றுதான். ஆனாலும், இந்தமுறை பி.எஸ்.பி. கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்திற்குப் பிறகு, ”தேசியக் கட்சியின் தலைவருக்கே பாதுகாப்பு இல்லை”, “தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பில்லை” என்ற குற்றச்சாட்டுகளும் சேர்ந்து கொண்டன.

ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்டு மிக குறுகிய காலத்தில், கூலிப்படைக் கும்பல்களால் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட படுகொலை சம்பவங்களை பட்டியலிட்டு, ரவுடிகளின் ராஜ்ஜியமாக தமிழகம் மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டையும் பல்வேறு தரப்பிலிருந்து எழுப்பி வருகிறார்கள்.

Frontline hospital Trichy

இவை எவற்றையும் பொருட்படுத்தாமல், சர்ச்சைக்குள்ளான அதிகாரிகளை அவர்கள் எந்த உயர்பதவி வகித்து வந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் இடமாற்றம் உள்ளிட்டு பல்வேறு அதிரடிகளை அரங்கேற்றி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ரவுடிகளின் ராஜ்ஜியமாக தமிழகம் மாறியிருக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, அடுத்தடுத்து ரவுடிகளின் என்கவுண்டர் சம்பவங்களும் அரங்கேறிவருகின்றன.

தமிழகம் முழுவதும், எஸ்.ஐ. தொடங்கி உயர் அதிகாரிகள் வரையில் அனைவரும் கைத்துப்பாக்கியை கட்டாயம் எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டுமென்ற உத்தரவும் பறந்திருக்கிறது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

போலீசார் மத்தியில் வருடாந்திர பிஸ்டல் மற்றும் ரைபில் துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் போட்டி நடைபெறுவது வழக்கமான நடவடிக்கைதான் என்றபோதும், தமிழகத்தில் நிலவும் தனிச்சிறப்பான இந்த சூழலில் அவை கவனத்தைப் பெற்றிருக்கின்றன.

அந்த வகையில், திருச்சியில் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி. திருச்சி மத்திய மண்டலத்தில், காவல்துறை துணை கண்காணிப்பாளர் முதல் காவல் காவல்துறை தலைவர் வரையிலான திருச்சி மத்திய மண்டல உயர் அதிகாரிகளுக்கு இடையிலான வருடாந்திர பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் துப்பாக்கி சுடும் தளத்தில் கடந்த ஜூன் 15 மற்றும் 16 ஆகிய இருநாட்கள் நடைபெற்றது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்த போட்டியில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர், மத்திய மண்டலத்ததைச் சேர்ந்த திருச்சி சரக துணைத் தலைவர், காவல் கண்காணிப்பாளர்கள், உதவி காவல் கண்காணிப்பாளர், முதலாம் பிரிவு தளவாய், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், ஆகியோர்கள் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் க. கார்த்திகேயன், IPS., துப்பாக்கி சுடும் போட்டியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு ரைபிள் பிரிவில் முதலாவது இடத்தையும், ஒட்டுமொத்த துப்பாக்கி சுடும் போட்டியில் இரண்டாவது இடத்தையும் பெற்றார்.

மேலும், பிஸ்டல் பிரிவில் திருவெறும்பூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன், முதலாவது இடத்தையும், திருச்சி மாநகர வடக்கு மண்டல துணை ஆணையர் விவேகானந்தர் சுக்லா, IPS., இரண்டாவது இடத்தையும், ஒரத்தநாடு உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஷஹ்னாஸ், IPS., மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

ரைபிள் பிரிவில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் க. கார்த்திகேயன், IPS., முதலாவது இடத்தையும், அரியலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் இரண்டாவது இடத்தையும், கணினிசார் குற்றப்பிரிவு, அரியலூர் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அந்தோனிஹரி அவர்கள் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

ஒட்டுமொத்த துப்பாக்கி சுடும் பிரிவில் திருச்சி மாநகர வடக்கு மண்டல துணை ஆணையர் விவேகானந்தர் சுக்லா, IPS., முதலாவது இடத்தையும், திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் க. கார்த்திகேயன், இரண்டாவது இடத்தையும், திருவெறும்பூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

இப்போட்டியில் கலந்து கொண்ட அதிகாரிகளுக்கும், வெற்றி பெற்ற அதிகாரிகளுக்கும் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் க. கார்த்திகேயன், IPS., பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

– அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.