அங்குசம் சேனலில் இணைய

தமிழக அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு ! துணை குடியரசுத் தலைவரைச் சந்தித்த நடிகை மீனா ! மத்திய அமைச்சராகிறாரா?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழ்நாட்டின் முன்னணி நடிகையாக இருந்த மீனா குழந்தை நட்சத்திரமாக திரை வாழ்வைத் தொடங்கினார். அன்புள்ள ரஜினிகாந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ரஜினியோடு நடித்தவர், பின்னர் அவருக்குக் கதாநாயாகியாகவும் நடித்தார். அப்போதை முன்னணி நடிகர்களோடும் நடித்தும் தன் அழகாலும் ரசிகர்களைக் கவர்ந்தார். மீனா 2009 இல் தொழிலதிபர் வித்யாசாகரை மணந்தார், அவர் நீண்டகால உடல்நலக்குறைவுக்குப் பிறகு 2022இல் இயற்கை எய்தினார். தற்போது சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் டெல்லியில் துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கரைச் சந்தித்தார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

துணை ஜனாதிபதியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட மீனா, ” துணை ஜனாதிபதி ஸ்ரீ ஜகதீப் தன்கர் ஜி அவர்களுடன். உங்களை சந்தித்தது ஒரு மரியாதை, ஐயா. உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன், அது என் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் வழிநடத்த உதவும் என்று நான் நம்புகிறேன். உங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி” என்று எழுதினார்.

நடிகை மீனா துணை குடியரசுத் தலைவரைச் சந்தித்தார்
நடிகை மீனா துணை குடியரசுத் தலைவரைச் சந்தித்தார்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

இந்த சந்திப்பு மீனா பாரதிய ஜனதா கட்சியில் (BJP) சேரத் தயாராக இருக்கலாம் என்றும், மத்திய இணை அமைச்சராகவும் கூட நியமிக்கப்படலாம் என்றும் பலத்த வதந்திகளை கிளப்பியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அவரது அரசியல் விருப்பங்கள் குறித்து ஊகங்கள் இருந்து வந்தாலும், டெல்லியில் அவர் சமீபத்தில் நடத்திய உயர்மட்ட உரையாடல்கள் இந்த விஷயத்தில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன. மீனா பாஜகவில் இணைவது என்பது நடிகர் ரஜினியின் ஆலோசனை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில், டெல்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல். முருகனின் இல்லத்தில் நடந்த பொங்கல் கொண்டாட்டத்தில் மீனா கலந்து கொண்டார், இது அரசியலில் அவருக்கு அதிகரித்து வரும் ஆர்வம் குறித்த கிசுகிசுக்களைத் தூண்டியது. நடன இயக்குனர் கலா மாஸ்டர் அவரை அழைத்ததாக ஆரம்ப அறிக்கைகள் கூறினாலும், மீனா அரசியல் வாழ்க்கையைப் பற்றி பரிசீலித்து வருவதாக ஊகங்கள் செய்தி வெளியிட்டன. தமிழ் திரைப்பட நடிகைகளைப் பாஜகவில் இணைக்கும் முயற்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. குஷ்பூ, கௌதமி, நமிதா, ரதிகா போன்றவர்கள் இணைந்துள்ளது சான்றாக அமைகின்றது.

பாஜக உறுப்பினர்கள் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, முக்கிய முகங்களை முக்கியப் பதவிகளில் அமர்த்த பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மத்திய இணை அமைச்சர் பதவிக்கு மீனா பரிசீலிக்கப்படுவதாக மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், அதிகாரப்பூர்வ  எதுவும் வெளியிடப்படவில்லை, மேலும் மீனாவே இந்த விஷயத்தில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஊகங்கள் தொடர்ந்து பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் ஒரு பரபரப்பை உண்டாக்க நடிகை மீனாவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் கொடுக்கப்பட்டு, மத்திய மந்திரியாக ஆக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பாஜக தமிழ்நாட்டில் தேர்தல் வெற்றிகாக எதையும் செய்யும் என்பது நாம் அறிந்த ஒன்றுதானே?

 

—    ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.