19 விருதுகள் பெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்! வாழ்த்து தொிவித்த முதல்வா்!
அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பால் வழங்கப்படும் தேசிய பொதுப் பேருந்து போக்குவரத்து செயல்திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு விருதுகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்பட்ட 19 விருதுகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (25.4.2025) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள் சந்தித்து, அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU) மூலமாக வழங்கப்படும் 2023-24 ஆண்டிற்கான தேசிய பொதுப் பேருந்து போக்குவரத்து செயல்திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்பட்ட 19 விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளின் விவரங்கள்
அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு, அகில இந்திய அளவில் உறுப்பினர்களாக உள்ள 70 மாநில போக்குவரத்துக் கழகங்களின் வளங்கள் மற்றும் செயல்திறனை ஆராய்ந்து, ஆண்டுதோறும் போக்குவரத்துக் கழகங்களை ஊக்குவிக்கும் வண்ணம் விருதுகள் வழங்கி வருகிறது.
அதன் அடிப்படையில் 2023-24 ஆண்டிற்கான தேசிய பொதுப் பேருந்து போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் 19 விருதுகளை பெற்றுள்ளன. முதல் பரிசுக்கான 38 பிரிவுகளில் 12 பிரிவுகளிலும், இரண்டாம் பரிசுக்கான 31 பிரிவுகளில் 7 பிரிவுகளிலும், என மொத்தம் 69-ல் 19 பிரிவுகளில் பரிசு பெற்றுள்ளது. இது மொத்த விருதுகளில் நான்கில் ஒரு பங்குக்கு மேல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் விவரங்கள்:
மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு சிறந்த சாலைப் பாதுகாப்பு நடைமுறைக்கான விருது (முதல் பரிசு) மற்றும் நிதி நடைமுறைக்கான விருது (இரண்டாம் பரிசு) ஆகிய 2 விருதுகள்;
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு பணியாளர் செயல்திறனுக்கான விருது (முதல் பரிசு), டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான விருது (முதல் பரிசு) மற்றும் வாகன பயன்பாட்டிற்கான விருது (இரண்டாம் பரிசு) ஆகிய 3 விருதுகள்;
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் – இரண்டாம் பரிசுக்கான எரிபொருள் செயல்திறனுக்கான விருது (புறநகர்);
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்இ சேலம் – எரிபொருள் செயல்திறனுக்கான விருது (முதல் பரிசு), சிறந்த சாலைப் பாதுகாப்பு நடைமுறைக்கான விருது (புறநகர்) (முதல் பரிசு), சிறந்த சாலைப் பாதுகாப்பு நடைமுறைக்கான விருது (நகர்ப்புறம்) (முதல் பரிசு) மற்றும் வாகன பயன்பாட்டிற்கான விருது (முதல் பரிசு) ஆகிய 4 விருதுகள்;
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் – எரிபொருள் செயல்திறனுக்கான விருது (புறநகர்) (முதல் பரிசு), எரிபொருள் செயல்திறனுக்கான விருது (நகர்ப்புறம்) (முதல் பரிசு), உருளிப்பட்டை செயல்திறனுக்கான விருது (கிராமப்புறம்) (இரண்டாம் பரிசு), உருளிப்பட்டை செயல்திறனுக்கான விருது (நகர்ப்புறம்) (முதல் பரிசு) மற்றும் வாகன பயன்பாட்டிற்க்கான விருது (முதல் பரிசு) ஆகிய 5 விருதுகள்;
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், மதுரை –உருளிப்பட்டை செயல்திறனுக்கான விருது (கிராமப்புறம்) (முதல் பரிசு), உருளிப்பட்டை செயல்திறனுக்கான விருது (நகர்ப்புறம்) (இரண்டாம் பரிசு), எரிபொருள் செயல்திறனுக்கான விருது (நகர்ப்புறம்) (இரண்டாம் பரிசு) மற்றும் வாகன பயன்பாட்டிற்கான விருது (இரண்டாம் பரிசு) ஆகிய 4 விருதுகள் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு மொத்தம் 19 விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப.இ போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்
திரு. க. பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப.இ மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் திரு. பிரபு சங்கர், இ.ஆ.ப.இ தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.