தென் சென்னை மக்களவை சட்டமன்றத் தொகுதிகள் 2026 தேர்தல் களம் யாருக்கு ?
தென் சென்னை சட்டமன்ற தொகுதிகள் வெற்றி யாருக்கு ? தேர்தல் களம் 2026 ! பேரா. தி. நெடுஞ்செழியன்
தென்சென்னை மக்களவை என்பது வரலாற்று சிறப்பு மிக்க தொகுதி. இந்தத் தொகுதியிலிருந்து டிடி கிருஷ்ணமாச்சரி, நாஞ்சில் கி.மனோகரன், பேரறிஞர் அண்ணா, முரசொலி மாறன், முன்னாள் குடியரசுத் தலைவர் இரா.வெங்கட்ராமன் நடிகை வைஜயந்தி மாலா, 1996, 98, 99, 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் டி.ஆர்.பாலு 4 முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். 2019 மற்றும் 2024 தேர்தலில் பேராசிரியர் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றிப் பெற்றுள்ளார்.

2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுகவின் சார்பில் பேராசிரியர் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்றுள்ளார். இவர் பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசையை சுமார் சுமார் 2 இலட்சத்து 26ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
தமிழச்சி தங்கப்பாண்டியன் திமுக 5,16,305
தமிழிசை சௌந்தரராஜன் பாஜக 2,90,289
மருத்துவர் ஜெ. ஜெயவர்த்தன் அதிமுக 1,72,396
சு. தமிழ்ச்செல்வி நாதக 83,911
தென்சென்னை மக்களவை சட்டமன்றத் தொகுதிகள் விருகம்பாக்கம், சைதாபேட்டை, தியாகராய நகர், மைலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் பகுதிகளின் தேர்தல் களம் பற்றி விபரங்கள்.
விருகம்பாக்கம்
2021இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விருகம்பாக்கம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் திமுகவைச் சார்ந்த ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா வெற்றிபெற்றுள்ளார். இவர் அதிமுக சார்பில் போட்டியிட்ட வி.என்.விருகை இரவியைத் தோற்கடித்தார்.
2021இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் 74 ஆயிரம். அதிமுக+பாஜக கூட்டணி பெற்ற வாக்குகள் 55 ஆயிரம். அதிமுகவை விட திமுக சுமார் 19ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இத் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 10 ஆயிரம் வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் 16ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளன.

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் சுமார் 69ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளார். அதிமுக 22ஆயிரம் வாக்குகளையும் பாஜக 43ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளன. அதிமுக+பாஜக இணைந்து சுமார் 65 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளன. திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட சுமார் 4ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி 10ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது. மக்கள் நீதி மய்யம் 16ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட 19 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தது. 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அதிமுக+பாஜக இணைந்து வாங்கிய வாக்குகளை விட 4ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. ஆட்சியில் இருக்கும் திமுகவுக்கான எதிர்ப்பு மனநிலை, தமிழக வெற்றிக் கழகம் என்று வாக்குகள் பிரிந்தாலும், இந்த வாக்கு வித்தியாசங்களை வைத்து பார்க்கும்போது விருகம்பாக்கம் தொகுதியில் திமுகவுக்கு வெற்றி எளிதாக இருக்காது. போட்டி பலமாக உள்ளது.
சைதாப்பேட்டை
2021இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சைதாப்பேட்டை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் திமுகவைச் சார்ந்த மா.சுப்பிரமணியம் வெற்றிபெற்றுள்ளார். 2016 மற்றும் 2016 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு 2ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அதிமுகவைச் சார்ந்த சைத சா.துரைசாமியை 2021 தேர்தலில் தோற்கடித்துள்ளார்.
2021இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் 74 ஆயிரம். அதிமுக+பாஜக கூட்டணி பெற்ற வாக்குகள் 55 ஆயிரம். அதிமுகவை விட திமுக சுமார் 19 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இத் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 10 ஆயிரம் வாக்குகளும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் 16 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளன.

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் சுமார் 76ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளார். அதிமுக 23 ஆயிரம் வாக்குகளையும், பாஜக 28 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளது. அதிமுக+பாஜக இணைந்து சுமார் 51 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளன. திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட சுமார் 25 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி 10 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட 19 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தது. 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அதிமுக+பாஜக இணைந்து வாங்கிய வாக்குகளை விட 25ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. ஆட்சியில் இருக்கும் திமுகவுக்கான எதிர்ப்பு மனநிலை, தமிழக வெற்றிக் கழகம் என்று வாக்குகள் பிரிந்தாலும், கடந்த தேர்தல்களின் வாக்கு வித்தியாசங்களை வைத்து பார்க்கும்போது சைதாப்பேட்டை தொகுதியில் திமுக மீண்டும் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன.
தியாகராய நகர்
இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் கே.வினாயகம், ம.பொ.சிவஞானம் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும். 2021இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தியாகராய நகர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் திமுகவைச் சார்ந்த ஜெ.கருணாநிதி வெற்றிபெற்றுள்ளார். தொடர்ந்து 3 முறை அதிமுக வசம் இருந்த தொகுதியில் திமுக வெற்றிப்பெற்றுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்திய நாராயணன் என்கிற தி.நகர் சத்யாவை திமுக வேட்பாளர் தோற்கடித்துள்ளார்.
2021இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் 56 ஆயிரம். அதிமுக+பாஜக கூட்டணி பெற்ற வாக்குகள் 55 ஆயிரம். அதிமுகவை விட திமுக சுமார் ஓர் ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இத் தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் 14 ஆயிரம் வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 8ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளன.

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தியாகராய நகர் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் சுமார் 51ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளார். அதிமுக 17ஆயிரம் வாக்குகளையும், பாஜக 45 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளது. அதிமுக+பாஜக இணைந்து சுமார் 62 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளன. திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட சுமார் 11 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளது. இத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி 6 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட ஓராயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தது. 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அதிமுக+பாஜக இணைந்து வாங்கிய வாக்குகளை விட 11ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளது. ஆட்சியில் இருக்கும் திமுகவுக்கான எதிர்ப்பு மனநிலை, தமிழக வெற்றிக் கழகம் என்று வாக்குகள் பிரிந்தாலும், கடந்த தேர்தல்களின் வாக்கு வித்தியாசங்களை வைத்து பார்க்கும்போது தியாகராய நகர் தொகுதியில் அதிமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
மயிலாப்பூர்
மயிலாப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் திமுகவின் சார்பில் த.வேலு போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இவர் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காவல்துறை அதிகாரியாக இருந்த ஆர்.நட்ராஜ் அவர்களைத் தோற்கடித்துள்ளார். இந்தத் தொகுதியில் திரைப்பட தயாரிப்பாளர் இராம.அரங்கண்ணல், டி.என்.அநந்தநாயகி, ப.வளர்மதி, நடிகர் எஸ்.வி.சேகர். பாஜக கே.என்.இலக்குமணன் ஆகியோர் போட்டியிட்டு வென்ற தொகுதியாகும்.
2021இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் 68 ஆயிரம். அதிமுக+பாஜக கூட்டணி பெற்ற வாக்குகள் 55 ஆயிரம். அதிமுகவை விட திமுக சுமார் 13ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இத் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியை 10ஆயிரம் வாக்குகளையும் மக்கள் நீதி மய்யம் 14ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளன.

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் சுமார் 64ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளார். அதிமுக 21ஆயிரம் வாக்குகளையும், பாஜக 38 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளன. அதிமுக+பாஜக இணைந்து சுமார் 59 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளன. திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட சுமார் 5 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி 12 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட 13 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தது. 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக+பாஜக இணைந்து வாங்கிய வாக்குகளை விட 5 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. ஆட்சியில் இருக்கும் திமுகவுக்கான எதிர்ப்பு மனநிலை, தமிழக வெற்றிக் கழகம் என்று வாக்குகள் பிரிந்தாலும், கடந்த தேர்தல்களின் வாக்கு வித்தியாசங்களை வைத்து பார்க்கும்போது திமுக கூட்டணி வெற்றி அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. திமுகவுக்கு கடுமையான போட்டியை அதிமுக கூட்டணி தரும்.
வேளச்சேரி
2021இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், வேளச்சேரி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் ஜே.எம்.எச்.அசன் மவுலானா. இவர் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எம்.கே.அசோக்-ஐ தோற்கடித்துள்ளார். இந்த தொகுதியில் நடிகர் வாகை சந்திரசேகரன் திமுக சார்பில் வெற்றி பெற்றிருக்கிறார்.
2021இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் 68 ஆயிரம். அதிமுக+பாஜக கூட்டணி பெற்ற வாக்குகள் 64 ஆயிரம். அதிமுகவை விட திமுக சுமார் 4 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இத் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 14ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளார். மக்கள் நீதி மய்யம் 23ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது.

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் சுமார் 76ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளார். அதிமுக 23ஆயிரம் வாக்குகளையும், பாஜக 51 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளன. அதிமுக+பாஜக இணைந்து சுமார் 74 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளன. திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட சுமார் 2 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி 12 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட 4 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தது. 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக+பாஜக இணைந்து வாங்கிய வாக்குகளை விட 2 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. ஆட்சியில் இருக்கும் திமுகவுக்கான எதிர்ப்பு மனநிலை, தமிழக வெற்றிக் கழகம் என்று வாக்குகள் பிரிந்தாலும், கடந்த தேர்தல்களின் வாக்கு வித்தியாசங்களை வைத்து பார்க்கும்போது வேளச்சேரி தொகுதியில் திமுக வெற்றி பெறுவது கடினமே.
சோழிங்கநல்லூர்
சோழிங்க நல்லூர் சட்டமன்றத் தொகுதி செங்கல்பட்டு மாவட்டம் சார்ந்தது. 2021இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சோழிங்கநல்லூர் தொகுதியில் திமுக கூட்டணியில் திமுகவின் சார்பில் போட்டியிட்டவர் எஸ். அரவிந்த் ரமேஷ். இவர் அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட கே.பி.கந்தனைத் தோற்கடித்துள்ளார். திமுக வேட்பாளர் 2 முறையாக வெற்றி பெற்றிருக்கிறார்.
2021இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் ஒரு இலட்சத்து 71 ஆயிரம். அதிமுக+பாஜக கூட்டணி பெற்ற வாக்குகள் ஒரு இலட்சத்து 36 ஆயிரம். அதிமுகவை விட திமுக சுமார் 35ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இத் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 38ஆயிரம் வாக்குகளையும். மக்கள் நீதி மய்யம் 30ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளன.

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் சோழிங்கநல்லூர் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் சுமார் ஒரு இலட்சத்து 77 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளார். அதிமுக 63ஆயிரம் வாக்குகளையும், பாஜக 81 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளன. அதிமுக+பாஜக இணைந்து சுமார் ஒரு இலட்சத்து 44 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளன. திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட சுமார் 33 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி 35ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட 35 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தது. 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக+பாஜக இணைந்து வாங்கிய வாக்குகளை விட 33ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. ஆட்சியில் இருக்கும் திமுகவுக்கான எதிர்ப்பு மனநிலை, தமிழக வெற்றிக் கழகம் என்று வாக்குகள் பிரிந்தாலும், கடந்த தேர்தல்களின் வாக்கு வித்தியாசங்களை வைத்து பார்க்கும்போது சோழிங்கநல்லூர் தொகுதியில் திமுக தொடர்ந்து 3ஆவது முறையாக வெற்றி பெறும் வாய்ப்புகள் உள்ளன.
அடுத்த சந்திப்பில் மத்திய சென்னை மக்களவைக்கு உட்பட்ட வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதிகளில் யாருக்குத் தேர்தல் களம் ஆதரவாக உள்ளது என்பதைப் பார்ப்போம்.
— அங்குசம் அரசியல்.