குழந்தையின் விலை 5 இலட்சம் வசமாக சிக்கிய வழக்கறிஞர் ! – வெளிநாட்டிற்கு கடத்த இருந்த குழந்தையை மீட்ட தமிழக போலிஸ் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கடத்தல் கும்பலுக்கு 5 இலட்ச ரூபாய்க்கு குழந்தை விற்ற வழக்கறிஞர் – வெளிநாட்டிற்கு கடத்த இருந்த குழந்தையை மீட்ட தமிழக போலிஸ் !

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் மங்கம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்.  இவரது மகள் ஜானகி (வயது 32). இவர் திருமணம் ஆகாமல் ஒருவரிடம் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பம் ஆனார். இதனால் அவர் அந்த கர்ப்பத்தை கலைக்க லால்குடி அருகே உள்ள அரியூர் கிராமத்தை சேர்ந்த வக்கீல் பிரபு (42), அவரது 2-வது மனைவி சண்முகவள்ளி (38) ஆகியோரை அணுகி ஆலோசனை கேட்டுள்ளார்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

இதனிடையே கரு வளர்ந்து 7 மாதங்களுக்கு மேலாகி விட்டதால் கருவை கலைக்க முடியவில்லை. இந்தநிலையில், ஜானகிக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அப்பா யார் என்கிற கேள்வியை அரசு மருத்துமனையில் கேட்க கேள்விக்கு பதில் சொல்லாமல் தவித்த ஜானகிக்கு ஆலோசனை சொல்லி, இந்த குழந்தையை நாங்கள் விற்று தருகிறோம் என்று கூறி பிரபுவும், சண்முகவள்ளியும் குழந்தையை திருச்சி அரசு மருத்துமனையிலிருந்த  ஜானகியிடம் இருந்து வாங்கினர்.

திருச்சி அரசு மருத்துமனை
திருச்சி அரசு மருத்துமனை

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

பின்னர் மணக்கால் சூசையாபுரம் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் (35), திருச்சி அரியமங்கலம் மகளிர் சுயஉதவி குழுவை சேர்ந்த புரோக்கர் கவிதா ஆகியோர் உதவியுடன் குழந்தையை ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா கருத்துரை கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் மனைவி சண்முகபிரியா என்பவரிடம் ரூ.3½ லட்சத்துக்கு விற்றுள்ளனர்.

இந்தநிலையில் பிரபு, சண்முகவள்ளி ஆகியோர் ஜானகியிடம், உனது குழந்தை ரூ.1 லட்சத்துக்குதான் விற்பனை ஆகியுள்ளது, இதில் ரூ.20 ஆயிரத்தை நாங்கள் வைத்துக்கொள்கிறோம். ரூ.80 ஆயிரத்தை நீ வைத்துக்கொள் என்று கூறிஉள்ளனர். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட ஜானகி, அதனை செலவு செய்து விட்டார்.

வழக்கறிஞர் பிரபு
வழக்கறிஞர் பிரபு

ஏமாற்றியதால் புகார் இந்த நிலையில் தனது குழந்தையை ரூ.3½ லட்சத்துக்கு விற்றுவிட்டு, ரூ.80 ஆயிரம் மட்டுமே கொடுத்து தன்னை ஏமாற்றிய தகவல் ஜானகிக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஜானகி தனது குழந்தையை பிரபுவும், சண்முகவள்ளியும் கடத்தி சென்றுவிட்டனர் என திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார்.  புகார் மீது நடவடிக்கை எடுக்க கால தாமதம் ஆனாதால்   மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்…

ஜானகி
ஜானகி

வழக்கை விசாரித்த நீதிபதிகள்… குழந்தையை உடனே கண்டுபிடிக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட எஸ்.பிக்கு உத்தவிட்டார்.

இதைத்தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் லால்குடி  துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய் தங்கம், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

டி.எஸ்.பி. அஜய் தங்கம் தலைமையில் 4 இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 15 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குழந்தையை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.   

சண்முகவள்ளி
சண்முகவள்ளி

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அதற்கு இடையில் மீண்டும் கடந்த 4ம் தேதி மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி குழந்தை என்னிடம் தான் உள்ளது, யாரும் கடத்தவில்லை என்று வாக்குமூலம் கொடுக்க அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், குழந்தையை காட்டுங்கள் என்று சொல்ல ஜானகி அமைதியானதும், உடனே குழந்தையை கண்டுபிடிக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிடுகிறார்… நீதிபதி !

நிகழ்ந்த சம்பவங்கள் விசாரணையில், ஜானகி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் ஜானகி நீதமன்றத்தில் சொன்ன ஒப்புதல் வாக்குமூலத்தின் மூலம் பிறகு மாற்றி பேசியது என்ன கடுமையான விசாரணைக்கு பின்னர்..   வழக்கறிஞர் பிரபு, சண்முகவள்ளி, ஆகாஷ், சண்முகபிரியா, கவிதா ஆகியோர் குழந்தையை விற்றது தெரியவந்தது. ஆனால் ஜானகி குழந்தையை விற்ற தகவலை மறைத்து நாடகமாடி போலீசில் புகார் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஜானகி உள்பட 6 பேரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு லால்குடி போலீசார் கைது செய்தனர்.

சுஜித்குமார் - திருச்சி எஸ்.பி
சுஜித்குமார் – திருச்சி எஸ்.பி

இதில் கைது செய்யப்பட்ட சண்முக பிரியா ஈரோட்டில் கருமுட்டை விற்பனை செய்த கும்பலுடன் தொடர்புடையவர் எனவும் தெரியவந்தது. இந்த நிலையில் ஜானகியின் குழந்தை என்ன ஆனது என்ற விவரம் தெரியாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து சண்முகபிரியாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் ஜானகியின் குழந்தை புதுடெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

அஜய் தங்கம் டி.எஸ்.பி
அஜய் தங்கம் டி.எஸ்.பி

இதைத்தொடர்ந்து குழந்தையை மீட்பதற்காக லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் புதுடெல்லி சென்று முகாமிட்டு குழந்தையை பற்றி ரகசியமாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில், புதுடெல்லியை சேர்ந்த கோபிநாத் என்கிற கோபிகிருஷ்ணன் என்பவரிடம் குழந்தை இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் வெள்ளகவி மாவட்டம் உத்யம்பாக் போலீஸ் சரகம் ஜன்னமா நகரை சேர்ந்த பாக்கியஸ்ரீ என்ற பெண்ணிடம் ரூ.5 லட்சத்துக்கு குழந்தையை விற்றது தெரியவந்தது.

மீட்கப்பட்ட குழந்தை (2)
மீட்கப்பட்ட குழந்தை (2)

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த குழந்தையை கர்நாடகாவில் இருந்து மீட்டு டெல்லியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். மேலும், புதுடெல்லி போலீசார் அனுமதியுடன் குழந்தையை திருச்சி கொண்டுவர லால்குடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி புதுடெல்லியில் கைது செய்யப்பட்ட கோபிநாத், குழந்தையை வாங்கிய பாக்கியஸ்ரீ ஆகியோர் வருகிற 22-ந்தேதி திருச்சி அழைத்து வரப்பட்டு திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடத்தல் கும்பல் கோபிநாத்
கடத்தல் கும்பல் கோபிநாத்

குழந்தையை கடத்தல் கும்பல் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் இருந்து குறைந்த விலைக்கு குழந்தைகளை வாங்கி கருத்தரிப்பு மையங்கள் மூலம் குழந்தைகளை விற்பதும், மருத்துவரீதியான சோதனைகளுக்கு  வெளிநாட்டுக்கு  விற்பனை செய்யும் கும்பல் என்பதை கண்டறிந்து உள்ளது தமிழக போலிஸ், இவர் எத்தனை குழந்தைகளை வாங்கி விற்று இருக்கிறார்கள், இவர்களுக்கு தலைவர் யார், மீட்ப்பட்ட குழந்தை தான், கடத்தப்பட்ட குழந்தையா? என்கிற பல்வேறு கேள்விகளுக்கு அடுத்தடுத்த விசாணையில் உண்மை வரும் என்கிறார்கள்…

குழந்தையை மீட்டபதற்காக போலிசார், திருச்சி, நாமக்கல், பச்சமலை, சேலம்,  ஈரோடு, டெல்லி, மஹாராஸ்டிரா, கர்நாடக, சென்னை,  என 6,000 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்து குழந்தையை மீட்டு துரிதமாக நடடிக்கை எடுத்த தமிழக காவல்துறையினருக்கு அங்குசம் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்…

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.