இந்த குடிநீர் குழாயில் எப்படி தண்ணி பிடிக்கிறது…! மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு !

0

மாநகராட்சி குடிநீர் குழாயில் குடம் வைத்து குடிநீர் பிடிக்க தொட்டி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!!!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கோஅபிஷேகபுரம் கோட்டம் மண்டலம் 5 பழைய வார்டு எண் 51 புதிய வார்டு எண் 27 விஸ்வப்ப நாயக்கன் பேட்டை தெரு தெருவில் பொதுமக்கள் குடிநீர் பிடிக்க சாலை ஓரத்தில் மாநகராட்சி குடிநீர் குழாய் உள்ளது.

ஒரு ஜான் அளவே இடைவெளி
ஒரு ஜான் அளவே இடைவெளி

சமீபத்தில் பழைய சாலை மீது புதிய சாலை அமைக்கும் போது சாலை பகுதி உயர்ந்து விட்டது. இதனால் குடம் வைத்து குடிநீர் பிடிக்க இயலவில்லை. குடிநீர் குழாய்க்கும் புதிதாக அமைக்கப்பட்ட சாலைக்கும் இடையில் ஒரு ஜான் அளவே இடைவெளி உள்ளது. இந்த மாநகராட்சி குடிநீர் குழாயில் எப்படி தண்ணீர் பிடிப்பது என்கிற பட்டிமன்றமே மக்களிடம் நடந்து கொண்டிக்கிறது..  எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குடிநீர் தொட்டி அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

– வெற்றி 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.