திருச்சி பெண் ஆசிரியரை இரும்பு கம்பியால் தாக்கிய மாணவன் ! மூடி மறைக்கும் கல்வி அதிகாரிகள் !

0

சமீபகாலமாக தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சிலர்,  ஆசிரியர்கள் மீது  தகாத செயல்கள் செய்வது போன்று வீடியோ வடிவில் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு மாநில கல்வித்துறை , ஆசிரியர்கள் பாதுகாப்பு குறித்தும், மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து சில கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும்,  மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்து அறிக்கை வெளியிட்டனர்.  இந்த நிலையில்  பெண் ஆசிரியர் மீது மாணவன் ஒருவன் தாக்கிய சம்பவத்தை கல்வி அதிகாரிகள் மூடி மறைக்கும் சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மணப்பாறை சாலையில் உள்ள இனாம்குளத்தூர் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன்,  கணிப்பொறி பெண் ஆசிரியர் மீது அங்கிருந்த  இரும்பு ஜன்னால் மூலம் கடுமையான தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கடுமையான தாக்கப்பட்ட ஆசிரியர் மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளர். நடந்த சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட கல்வி அதிகாரியிடம் பெண் ஆசிரியர் புகார் தெரிவித்த நிலையில், கல்வி அதிகாரியோ… சம்மந்தப்பட்ட பள்ளி ஆசிரியரிடம் சென்று புகார் செய்யுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

பள்ளி தலைமை ஆசிரியரோ… நான் பணி ஓய்வு பெற இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது, நீங்கள் புகார் கொடுக்காதீங்க என்று நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறாராம்.. பள்ளி வாளகத்திற்குள் தாக்கப்பட்ட ஆசிரியருக்கு பாதுக்காப்பு இல்லாத நிலை இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் ஆசிரியர் தரப்பினர்..

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.