ஈரோடு இடைத்தேர்தல்  – இபிஎஸ் – ஓபிஎஸ் எஸ்கேப் ! களம் இறங்கும் காயத்திரி !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

ஈரோடு இடைத்தேர்தல்  – இபிஎஸ் – ஓபிஎஸ் எஸ்கேப் ! களம் இறங்கும் காயத்திரி

 

அண்மையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஈ.வெ.ரா.திருமகன் காலமானார். அதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவி காலியாக உள்ளது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

சட்டமன்ற உறுப்பினர் மரணம் அடைந்து காலியாக உள்ள இடத்திற்கு 6 மாதத்திற்குள் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தியாக வேண்டும் என்ற அரசியல் சாசனத்தின்படி, ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கு எதிர்வரும் பிப்.27ஆம் நாள் வாக்குப் பதிவு நடைபெறும் என்றும், மார்ச்சு 2ஆம் நாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் 18.01.2023ஆம் நாள் அறிவித்துள்ளது.

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

திருமகன் ஈவெரா
திருமகன் ஈவெரா
3

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஓபிஎஸ், இபிஎஸ் அதிமுகவின் அணிகள் தனித்தனியாக ஆலோசனைகளை நடத்தின. அமமுக தினகரனும் ஆலோசனை நடத்தியுள்ளார். தன்னை அதிமுக அதிமுக பொதுச்செயலாளர் என்று சொல்லிக்கொள்ளும் சசிகலா இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, இந்தத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி தோற்கடிக்கப்பட வேண்டும். டிடிவி.தினகரன், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரைச் சந்திக்க இருக்கிறேன் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

வாசன் - இபிஎஸ்
வாசன் – இபிஎஸ்
4

பாஜக சட்டமன்ற மொடக்குறிச்சி உறுப்பினர் சரசுவதி தலைமையில் 14 பேர் கொண்ட குழு இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ளது என்ற அதன் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இடைத்தேர்தல் குறித்து திமுக எந்தக் கருத்தும் சொல்லாமல் அமைதியாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். திமுக தலைமையோடு பேசி முறைப்படி அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.

புகழேந்தி
புகழேந்தி

அதிமுகவின் ஓபிஎஸ் அணியின் பெங்களூர் புகழேந்தி பேசும்போது, “இந்த இடைத்தேர்தல் மரணத்தால் ஏற்பட்டது. ஈரோடு கிழக்கில் வெற்றிபெறவேண்டும் என்று உழைப்பது கட்சிகளின் நோக்கமாக இருக்கலாம். வெற்றிபெறுவது கடினம்தான். அதனால் நாங்கள் தேர்தலைப் புறக்கணிக்கவில்லை.

கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவின் கூட்டணி கட்சியான தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் யுவராஜ் போட்டியிட்டார். இடைத்தேர்தலில் அந்தக் கட்சி போட்டியிடுவதுதானே முறையாக இருக்கும். தமாக போட்டியிடவில்லை என்றால் நாங்கள் போட்டியிடுவது குறித்து முடிவு எடுப்போம். இதனால் சின்னம் முடங்கும் அபாயம்கூட ஏற்படலாம். இப்போதைக்குக் எங்கள் அணி கூட்டணிக் கட்சி போட்டியிடுவதையே ஆதரிக்கிறது” என்றார்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

அதிமுகவின் இபிஎஸ் அணியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது,“இடைத்தேர்தலில் போட்டியிடுவது என்ற எங்களின் முடிவின்படி நாங்கள் வாக்குச்சாவடி பிரதிநிதிகளின் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளோம். நாங்கள்தான் உண்மையான அதிமுக என்பதால் நாங்கள் போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் முடங்காது. நாங்கள் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. என்றாலும் கடந்த தேர்தலில் எங்கள் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமாக போட்டியிட்டது. தற்போது தமாக போட்டியிடுவது குறித்து ஜி.கே.வாசன் முடிவு அறிவித்தால், கூட்டணி தர்மத்தின்படி தமாகவை ஆதரிப்போம். தமாக போட்டியில்லை என்றால் நாங்கள் போட்டியிடுவோம்“ என்று கூறியுள்ளார்.

நித்தியானந்தம் - பிஜேபி
நித்தியானந்தம் – பிஜேபி

பாஜகவின் மூத்த தலைவர் நிந்தியானந்தம் தொலைக்காட்சியில் பேசும்போது,“எங்கள் கட்சியின் சார்பில் 14 பேர் கொண்ட குழு இடைத்தேர்தலில் போட்டியிடுவது அல்லது கூட்டணி கட்சியை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டை எடுத்து, திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியைப் படுதோல்வி அடைய செய்யவேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள். அதிமுக அணிகள் குறிப்பாக இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோர் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும். அல்லது கூட்டணிக் கட்சியான தமாக போட்டியிட்டால் ஆதரிக்கவேண்டும்.

admk
admk

ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாகப் போட்டியிட்டால் சின்னம் முடங்கும். சுயேட்சை சின்னங்களில் அதிமுக வெற்றிபெற முடியாது. அப்படி அதிமுக அணிகள் போட்டியிடவில்லை, தமாகவும் போட்டியிடவில்லை என்றால் பாஜக போட்டியிட அதிமுக கட்சிகள் ஆதரவு தெரிவிக்கவேண்டும். காரணம் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்கும் வல்லமையும் ஆற்றலும் பாஜகவுக்கே உண்டு என்பதால் பாஜக போட்டியிடும் வாய்ப்பும் உள்ளன” என்று கூறியுள்ளார்.

காயத்ரி
காயத்ரி

பாஜகவிலிருந்து அண்மையில் விலக்கப்பட்ட நடிகை காயத்திரி ரகுராம் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தமிழகம் என்று சொல்லும் அண்ணாமலை போட்டியிடட்டும், தமிழ்நாட்டைச் சார்ந்த நான் எதிர்த்துப் போட்டியிடுகிறேன். அண்ணாமலை என்னை வெற்றிக்கொள்ள தயாரா?“ என்று சவால் விடுத்துள்ளார். இந்த சவாலுக்கு இதுவரை அண்ணாமலையிடமிருந்து பதில்கள் எதுவும் வரவில்லை.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தமாக போட்டியிடும் என்று அறிவித்தால் ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோர் இதுதான் நல்ல வாய்ப்பு என்று தேர்தல் களத்தை விட்டு ஓடிவிடுவார்கள். வீரம்பேசும் பாஜகவும் களத்தை விட்டு ஓடிவிடும் என்பதே நிதர்சனமான உண்மை.

இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட திமுக வாய்ப்பை வழங்கும் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மரணத்தால் ஏற்படும் இடைத்தேர்தல்களில் வெற்றிபெற்ற கட்சியே பெரும்பாலும் வெற்றிபெறும் என்ற நிலையில் காங்கிரஸ் மீண்டும் வெற்றிபெறும் என்றே நம்பப்படுகின்றது. அதிமுக அணிகள் தோல்வியைத் தவிர்க்கவும், சின்னம் முடங்கும் அபாயத்தைத் தவிர்க்கவும் களத்தை விட்டு ஓடும் நிலையே தற்போது உள்ளது.

-ஆதவன்

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.