அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அமைச்சர் பெயரில் ஆட்டம் போட்டவரை பொட்டலம் கட்டிய போலீஸ் !

திருச்சியில் அடகு நகையை விற்க

அமைச்சர் பெயரில் ஆட்டம் போட்டவரை பொட்டலம் கட்டிய போலீஸ் !

மலைக்கோட்டை மாவட்டத்தில் முறுக்கான ஊரில் விவகாரமான ஆசாமி, அந்த ஐந்தெழுத்து சாமி. மூன்றெழுத்து கட்சியின் முக்கியப்புள்ளி. இப்போதும் ஒன்றிய பொறுப்பில் இருக்கும் அந்த ஆசாமியை, அலேக்காக தட்டித் தூக்கியிருக்கிறது பாம்பையும் பவளத்தையும் பெயரில் வைத்திருக்கும் மாவட்டத்தின் மிடுக்கான அதிகாரி டீம்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

பாரில் நடந்த பஞ்சாயத்து பிரச்சினையில்தான் தூக்கியிருப்பதாக சொன்னாலும், பின்னணி படு சுவாரஸ்யம் என்கிறார்கள். மணல் மணலாய் பிசினஸில் படு பிஸியான பேர்வழியாம் அந்த ஐந்தெழுத்து சாமி. மாவட்டம் விட்டு மாவட்டம் என்றாலும், மொத்த டீமாக சென்று பதம் பார்த்து வருவதில் படு கில்லாடி என்கிறார்கள். சமீபத்தில்கூட, சாய்பாபா கோயில் அமைந்திருக்கும் ஊரின் ஒதுக்குப்புறத்தில் மானாவாரியாக மணலை வாரி குவித்திருக்கிறார்கள்.

ஊருவிட்டு ஊரு வந்து எப்படி அள்ளலாம் என லோக்கலில் தகராறு ஆனபோதுகூட, மீசைக்கார அமைச்சரின் பெயரை சொல்லி கெத்தாக தூக்கிவிட்டுதான் வந்திருக்கிறார்கள். எங்கே போனாலும் இதே பஞ்சாயத்துதான் என்கிறார்கள். இதையெல்லாம், அந்த கோபக்கார அமைச்சருக்கு ஃபோன் போட்டா கேட்க முடியும்? அப்படி யாரும் கேட்டுவிட மாட்டார்கள் என்ற தைரியத்தில்தான், நானும் அமைச்சரும் ஒரு ஜாதி ஆளுங்க. அவரு சொல்லிதான் செய்றேன் என்கிற ரேஞ்சுக்கு போகிற இடமெல்லாம் அமைச்சரின் பெயரை வைத்தே பக்கா பிசினஸ் நடத்தியிருக்கிறார் அந்த ஐந்தெழுத்து சாமி.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

மாவட்டத்து அதிகாரி யார் வந்தாலும், ஒரு விதமாக பேசி அனுசரித்து பிழைப்பில் மண் விழாமல் பார்த்துக் கொள்வதிலும் கவனமாகவே இருந்திருக்கிறார்.

தற்போது, தலைநகரிலிருந்து மாறுதலாகி வந்த அந்த மாவட்ட மிடுக்கான அதிகாரியிடம் இவரது பாட்சா பலிக்கவில்லை என்கிறார்கள். அடுத்தடுத்து டிப்பர் லாரிகள் மணலுடன் சிக்கியிருக்கிறது. காலையில் சிக்கினால் மாலை; மாலையில் சிக்கினால் காலை என வழக்கமாக ஒரு போன் காலில் வண்டியை எடுத்துபோனவருக்கு, இப்போதெல்லாம் மணலோடு வண்டியும் போனதுதான் மிச்சம் என்றானது. அடுத்தடுத்து கேசு கணக்கும் கூடியது. அமைச்சர் பெயரை சொல்லியும் எதுவும் எடுபடாமல் போகவே, கோபத்தின் உச்சிக்கே போன அந்த ஐந்தெழுத்து சாமி, நடிகர் விக்ரம் நடித்த சாமி படம் போலவே மிடுக்கான போலீஸ் அதிகாரிக்கு “செக்” வைக்க நினைத்திருக்கிறார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அதற்கான வாய்ப்பும் வந்தது. முறுக்கான ஊரில் பட்டி என்று முடியும் ஊரில் தேர்தல் விதிமுறைகளை மீறி மூன்றெழுத்து கட்சியின் சார்பில் பிரச்சாரமும் பண விநியோகமும் நடந்ததாக சொல்லப்படும் நிலையில், ரோந்து சென்ற மாவட்ட மிடுக்கான அதிகாரி தலைமையிலான போலீசார் சொல்லியும் கேட்காத நிலையில் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்திருக்கிறார்கள்.

சாமி பட ரேஞ்சுக்கு, ”அதெப்படி எங்க ஆளுகள, எங்க கட்சி காரவுகளை அந்த அதிகாரி அடிக்கலாம்” என எகிறிய அந்த ஐந்தெழுத்து சாமி லோக்கல் ஆளுகளை தூண்டி விட்டதாகவும் சொல்கிறார்கள். சாமி படத்தை, அந்த போலீசு அதிகாரியும் பார்த்திருப்பார்தானே, ”நீ ஐந்தெழுத்து சாமினா … நான் ஆறுச்சாமிடா-னு” அவரும் ஆட்டத்தை காட்ட, இப்போ ஜெயிலுக்கு போகாக நெஞ்சு வலிக்குதுன்னு ஹாஸ்பிடல்ல படுத்திருக்காராம் ஐந்தெழுத்து சாமி.

போலீசு நடத்துன தடியடியில பாதிக்கப்பட்டவர பார்க்க போனப்போ, சாமி பட ஸ்டைலில், மாவட்ட மிடுக்கான அதிகாரியை பத்தியும் அவரது குடும்பத்தையும் அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு அர்ச்சித்திருக்கிறாராம் ஐந்தெழுத்து சாமி. சாமி படத்துல கைய தூக்கின உடனே, போட்டோவும் பிடிச்சி கையில காப்பையும் மாட்டி விடுவது போல, ஐந்தெழுத்து சாமி பேசினதெல்லாம் காக்கி ஒருவரின் செல்போனில் எவிடன்சாக மாட்டிக்கிட்டதாம்.

முடிஞ்சதும் முடியாததும் தண்டனை வாங்குனதுனும் வாங்காததும்னு பத்துக்கும் மேல கேச வச்சிக்கிட்டு; வரைமுறையில்லாம கண்ட இடத்துல மணல அள்ளி அமைச்சர் பெயரில் அடாவடி செஞ்சதும் மட்டுமில்லாமல்; தன்னோட ரெண்டாம் நெம்பர் பிசினஸ்க்கு போலீஸ் ஒத்துப்போகலைன்னு கடுப்பாகிதான்; அதுவும் இப்போ சமீபமா அடுத்தடுத்து 20 லாரிகள், டிப்பர் வண்டிகள், ஜேசிபி எந்திரம் வரையில் வழக்குல சிக்குன அந்த கடுப்பையெல்லாம் அந்த மிடுக்கான அதிகாரி மேல காட்டமுடியாமத்தான் இப்படி மக்கள தூண்டிவிட்டு கலவரம் பன்ன பார்த்தாருனு சொல்றாங்க. அவரு போன்ல இருந்தே அதையும் எவிடன்ஸாக்கியிருக்காரு அந்த ”ஆறுச்சாமி”யான அதிகாரி.

அமைச்சரோட ஆதரவும் இல்லாமல், வாய கொடுத்து மாட்டிக்கிட்டோமே-னு நெஞ்ச புடுச்சிகிட்டே விட்டத்த பார்த்து யோசிச்சிட்டிருக்காம் அந்த ஐந்தெழுத்து சாமி.

அங்குசம் ஸ்பை டீம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.