மனிதனாக முதலில் மாறுமய்யா, பின்னர் மக்களைப் பற்றி யோசிக்கலாம்.
நடிகர் கமலஹாசன் தன் மனைவி சரிகாவை பிரிந்து வாழ்கிறார் சட்டப்படி விவாகரத்து பெற்று விட்டார், ஆனால் மகள்கள் அக்ஷரா சுருதி இருவரையும் கண்ணிமைகளை போல காத்து வளர்த்து வருகிறார்.
நடிகர் பார்த்திபன் தன்னுடைய மனைவி சீதாவை, சட்டபூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கிறார், ஆனால் தன் மகள் கீர்த்தனாவை குழந்தை நட்சத்திரமாக கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் நடிக்க வைத்து தேசிய விருது பெற்றுக் கொடுத்தார், திருமணம் செய்வித்து நன்றாக வாழ்க்கையையும் அமைத்துக்கொடுத்து விட்டார்.
நடிகர் ராமராஜன் நடிகை நளினியிடம் இருந்து முறைப்படி விவாகரத்து பெற்ற பின்பு தன் மகள்கள் இருவருக்கும் அவ்வளவு சிறப்பாக திருமணம் செய்து வைத்து, உரிய முறையில் அவர்கள் வாழ்வை செட்டில் செய்து வைத்துள்ளார்.
நடிகர் தனுஷை எடுத்துக் கொள்ளுங்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுடன் முறையாக விவாகரத்து பெற்றார், தன் மகன்கள் யாத்ரா லிங்கா இருவரையும் எப்படி பார்த்துக் கொள்கிறார், எவ்வளவு சொத்துக்களை அவர்களுக்காக சம்பாதித்து வைத்துள்ளார், தன்னுடைய திரைப்பட விழா நிகழ்ச்சிகளில் அவர்களை மேடையில் ஏற்றி அழகு பார்க்கிறார், இதுதான் வாழ்க்கை இவர்கள் தான் மனிதர்கள்.
கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பாவம் பெற்ற பிள்ளைகள் என்ன செய்வார்கள்? நடிகர் விஜய் என்ன செய்துள்ளார் தன் மகன் ஜேசன் சஞ்ய்க்கு? தன் அருமை மகள் திய்வாவின் பள்ளி விழாவில் கூட கலந்து கொள்ளாதவர், அவருக்கான செலவுகளைக்கூட கடன்கணக்காக எழுதி வைத்ததாக கேள்வி.

மனசாட்சி இருக்கும், குடும்பத்தை மதிக்கும் பெண்ணோ, ஆணோ இவரை ஏற்றுக்கொள்வார்களா?
மனிதனாக முதலில் மாறுமய்யா, பின்னர் மக்களைப் பற்றி யோசிக்கலாம்.
— ச.செல்வக்கண்ணன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.