அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பிளாஸ்ட்

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

நாயகரின் நகர் வலம் !

மன்னரின் அரசவையில் கோலோச்சும் அந்த நாயகரின் அட்ராசிட்டி கொஞ்சம் நஞ்சமில்லை என்கிறார்கள். அரசனே நகரை வலம் வருவது போலத்தான், அந்த நாயகர் படை பரிவாரங்களோடு பவனி வருகிறாராம். சோம பான கடையைக்கூட விட்டுவைப்பதில்லையாம். சில நாளில், நகர்வலம் இரவு 11 மணி வரைக்கும்கூட நீளுதாம். கவுன்சிலர் ரேஞ்சுக்கும் கீழே இறங்கி, இடப்பிரச்சினை ஒன்றில், நின்ற இடத்திலிருந்தே அரசவை ஆட்களுக்கு உத்தரவு போட்டு வெளிச்சத்தை இருட்டாக்கிய சம்பவத்தில், நாயகரின் பவரை போட்டு பார்த்துவிட்டதாம். இவரு பேச்சை கேட்டா நம்ம உத்தியோகமும் போயிடுமோனு பதறிக்கிடக்கிறாங்களாம்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

பாக்கெட் ரகசியம் !

மன்னரின் பராக்கிரமங்களை பேசிப் பேசியே பிரபலமாகி, மன்னரின் மனசிலும் இடம்பிடிச்சவரு. மன்னர் நாட்டை பிடிச்ச கையோடு, மந்திரி சபையிலயும் இடம் பிடிச்சாரு. வழி செலவுக்குக்கூட காசில்லைனு காலி பாக்கெட்டை பிதுக்கிகாட்டி, வட்டிக்கு பணம் கிடைக்குமானு தூது விட்டாரு. இப்போ, அரண்மனைக்கும் வாக்கப்பட்ட ஊருக்கும் ப்ளைட்டுலதான் பறக்குறாராம். பாக்கெட்டில் வேற பேனா பளபளக்குதாம். அதோட விலையை கேட்டா தலை கிறுகிறுக்குதாம். அமைச்சர் போட்ட ஒரு கையெழுத்துக்காக அன்பாக கொடுத்த பேனாவோட விலை ரெண்டு இலட்சமாம்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

10 கோடிக்கு பறந்த நோட்டீஸ் !

மொட்டை போடும் சாமிக்கே மொட்டை போட்ட விவகாரத்தில் எல்லோரும் மூன்றெழுத்து அமைச்சருக்கு உள்ள என்ன தொடர்பு என்ற ஆராய்ச்சியில் இறங்க … புலனாய்வு பத்திரிகை ஒன்று முன்னாள் சக்கரை அமைச்சரை தொடர்புபடுத்தி செய்தி வெளியிட கடுப்பானவர், பத்து கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறாராம். அஞ்சு வருஷமும் விஷேசம் தவறாம கடைசிப் பக்கத்தை கலர் கலரா ரொப்புனவர்கிட்டயே, இந்த வேலையை காட்டினா எப்படினு வட்டியும் முதலுமா வசூலிக்கத்தான் நோட்டீஸ் பறந்திருக்காம்.

உருளப்போகும் 5 தலைகள் !

மூன்றெழுத்து நாட்டின் மன்னர் சபை கூடும் நேரத்தில், மந்திரி சபையிலிருந்து 5 பேரை கழட்டிவிட மன்னர் முடிவெடுத்திருக்கிறாராம். சர்ச்சைக்கு பெயர்போன பெண் அமைச்சர் உள்ளிட்டு, மன்னரின் விசுவாசத்தையும் ஆசியையும் பெற்ற மூன்று நட்சத்திர அமைச்சர்களும் இதில் அடக்கமாம். பள்ளிக்கூடமும், சட்டமும் கைமாற்றிவிடுவதென முடிவாம். கோட்டையை கலங்கடிக்கும் செய்தியை கண்டு பீதியில் உறைந்து கிடக்கிறார்களாம் மிஸ்டர் ஒயிட்ஸ்.

கடற்கரையோரம் !

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

காதும் காதும் வைத்தாற்போல, மன்னரின் அரண்மனை மாற்றம் விவாதப்பொருளாக மாறிவிட்டதில், படு அப்செட்டாம். கிங்மேக்கர் மன்னர் காலத்திலிருந்து எத்தனையோ மன்னர்கள் ஆட்சி செய்த அரண்மனை இது. இந்த நேரத்தில், இப்படி ஒரு அவசர மாற்றம் எதுக்கு? இருக்கிற கோப்புகளையெல்லாம் தூக்கிக்கொண்டு போவதில் உள்ள சிக்கல்களை சொல்லி கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்களாம் அரண்மனை ஊழியர்கள். மன்னரின் ராசிப்படி கடற்கரையோரம் அரண்மனை அமைய வேண்டும் என்பதற்காகவே, இந்த அதிரடி மாற்றமாம்.

அட, இவரா இப்படி?

மாற்றத்துக்கான மன்னரின் ஆட்சியில் சங்கத் தமிழ் மாவட்டத்தில் மாவட்ட அதிகாரி வந்த வேகத்தில் ஒரே வாரத்தில் பந்தாடப்பட்டதன் பின்னணியில் சங்கத் தமிழ் பெருமை கொண்ட தலைநகர் அரசியல்வாதியை கை காட்டுகிறார்கள். தன்னை மரியாதை திமித்தமாக சந்திக்க மறுத்துவிட்டதற்காகத்தான் இந்த தூக்கியடிப்பு என்கிறார்கள். செங்கோட்டை சிதறவிடும் அவர்் பேச்சக்கும், சங்க இலக்கிய தரத்திலான எழுத்துக்கும், புதிய மன்னருக்காக காட்டும் விசுவாசத்துக்கும் துளிகூட சம்பந்தம் இல்லையாம். புதிய மன்னரின் ரசிகராவே மாறிவிட்டாராம். அட, இவரா இப்படி? என்றுதான் இப்போது ஆச்சரியத்தோடு பார்க்கிறார்களாம்.!

வண்டி செல்ஃப் எடுக்கல …

விரைப்பான காக்கிச் சட்டையை உதறிவிட்டு, வெள்ளை சட்டைக்கு மாறியவர். கடைசியில் கட்சிப்பதவியைக்கூட வாங்க முடியாமல் போகவே, நானே தலைவன் என தனி ரூட்டில் பயணப்பட்டவர். 50 இலட்சம் பேரை திரட்டி காட்டி, தனிக்கட்சி காண்கிறேன் என்று சபதம் போட்டவர். 19 இலட்சத்தோடு முடங்கிய நிலையில், மாவட்டம் தோறும் மாநாடுகளை நடத்தப்போகிறாராம். ஏற்கெனவே, கூடுன கூட்டத்துக்கு கொட்டுன காசுக்கே வழி தெரியல. இதுல இதுவேறயானு ஜூட் விடுறாங்களாம் பால்கார தலைவரின் பாசக்கார தம்பிகள்! வார் ரூம் நடத்துனவரு இப்போ புரோமோஷன் வேலையை பார்ப்போம்னு இறங்கிட்டாராம்.

இரெண்டெழுத்து விங்குக்கு குறி !

மன்னருக்கு எதிராக புரளியை கிளப்பிவிட்ட தீய சக்திகளின் சதி திட்டங்களை முறியடிக்க, முன்னாள் மன்னரின் ஏற்பாட்டில் உருவானது அந்த புதிய பதவி. சரியா – தப்பான்னு சரிபார்த்து சொல்றதுக்கு இம்பூட்டு காசா?னு அந்த தலைவருக்கு கொடுத்த சம்பளத்துக்கே அப்போது வாயைப்பிளந்தார்கள். இப்போ, மன்னர் மாற்றத்தையடுத்து ஒதுங்கிவிட்ட அந்த தலைவர், முன்னாள் மன்னரின் கட்சியின் இரண்டெழுத்து விங்கை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறாராம். புதிய மன்னரோ துதிபாட புது டீமை செட்டப் செய்து வருகிறதாம்.

புளியை கரைக்கும் புதுவரவு !

புதிய மன்னர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பல்வேறு தேசத்திலிருந்தும் மன்னரை தேடி வந்து சரணடைந்து வருகிறார்களாம். வந்தவர்களுக்கு மாலை போட கூட நேரம் இல்லாமல், தனது சகாக்களை வைத்துதான் மாலை போடப்படுகிறதாம். மாலையை யார் போட்டால் என்ன? மன்னரிடம் தஞ்சமடைந்தால் சரியென்று, படையெடுத்து வருகிறதாம் பெருங்கூட்டம். நேற்று வரை சொந்த நாட்டில் கெத்தாக வலம் வந்தவர்களுக்கு, இந்த புது வரவு வயிற்றில் புளியைக் கறைத்திருக்கிறதாம். புதுசா வந்த அம்மணிக்கு பெரும் பதவியை கொடுத்ததையெல்லாம் கண்டு வயிறெரிஞ்சு கிடக்கிறாங்களாம் சிகப்பு மஞ்சள் தேசத்தில்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.