அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அரிவாள், ரத்தம் இல்லாத மதுரைக் கதையில் சசிகுமார்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

புஷ்கர் & காயத்ரியின் ‘வால்வாட்சர்ஸ் பிலிம்ஸ்’ தயாரித்து வரும் 07ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகும் வெப் சீரிஸ் ‘வதந்தி சீசன் -2 மிஸ்ட்ரி ஆஃப் மணி.. எட்டு எபிசோடுகள் கொண்ட இதை ஆண்ரூ லூயிஸ் எழுதி இயக்கியுள்ளார். இதில் சசிகுமார் மூஸா ராசா என்கிற சப்-இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடிக்கிறார். இவரின் மனைவியாக அபர்ணா தாஸ், மற்ற கேரக்டர்களில் அனகா, விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, யஷ்வந்த், அர்ஜுன் நந்தகுமார் உட்பட பலர் நடிக்கின்றனர். இசை : சைமன் கே.கிங், பி.ஆர்.ஓ :யுவராஜ்.

07ஆம் தேதி ரிலீசாவதையொட்டி, ‘வதந்தி சீசன் -2 மிஸ்ட்ரி ஆஃப் மணி’யின் டிரெய்லர் & இரண்டு பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் ஆகஸ்ட்.01-ஆம் தேதி மதியம் நடந்தது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

நிகழ்ச்சியில் பேசிய சிலரின் பேச்சு…

புஷ்கர் காயத்ரி
புஷ்கர் காயத்ரி

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

புஷ்கர்-காயத்ரி, “நான்கு ஆண்டுகளுக்கு முன்பு  ‘வதந்தி சீசன் -1’ தயாராகிக் கொண்டிருக்கும் போதே இந்தக் கதையை எழுத ஆரம்பித்தார் ஆண்ட்ரூ. எழுதினார், எழுதினார்….எழுதிக் கொண்டே இருந்தார். அதன் பின் எங்களிடம் கதையைச் சொன்ன போது மதுரைக் கதையில் அரிவாள், ரத்தம் இல்லாமல் அதுவும் சசிகுமார் நடிப்பிலா என நாங்கள் ரொம்பவே ஆச்சர்யப்பட்டோம். ஏன்னா ஆண்ட்ரூ மதுரையைச் சேர்ந்தவர் இல்லை. ஆனால் இந்தக் கதைக்காக மதுரையிலேயே பல மாதங்கள் தங்கி, கதையை எழுதிவிட்டு, அதன் பிறகு மதுரையில் தான் சசிகுமாரைச் சந்தித்து கதையைச் சொல்லி ஓகே வாங்கினார்.

அபர்ணா தாஸ்
அபர்ணா தாஸ்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்ற நேர்மையான எண்ணத்துடன் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மூஸா ராசா கேரக்டருக்கு சசிகுமாரைவிட்டால் வேறு சாய்ஸே இல்லை. இந்த வதந்தி சீசன் -2 மிகவும் சிறப்பாக வந்துள்ளது. இதற்குமேல் இதை பெருமையாக நாங்களே பேசக்கூடாது. ரசிகர்களும் மீடியாக்களும் தான் பேச வேண்டும்”.

ஆண்ரூ லூயிஸ்
ஆண்ரூ லூயிஸ்

டைரக்டர் ஆண்ரூ லூயிஸ், “யாருமே பார்க்காத போது தலைக்கு மேல் கல்லைத் தூக்குவது பெருமையல்ல. எல்லோரும் பார்க்கும் போது தூக்குவது தான் பெருமை. அதைப் போலத்தான் வதந்தி சீசன்-2 வை எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் போது சிறப்பாக உருவாக்குவது தான் பெருமை. அதற்காகத் தான் இந்தக் கதையை எழுத நான்காண்டுகளானது. புஷ்கரும் காயத்ரியும் ஊக்கமளித்துக் கொண்டே இருந்தார்கள். அதை செயல்வடிவமாக்க அமேசான் பிரைமும் சசிகுமார் சாரும் துணை நின்றார்கள். மதுரை, இராம்நாட், காரைக்குடி, திருச்சி ஏரியாக்களில் 48 நாட்கள் தொடர்ந்து ஷூட்டிங் நடத்தினோம். அனைத்து நடிகர்-நடிகைகளும் தினமும் 18 மணி நேரம் உழைத்தார்கள். அவர்களுக்கும் மியூசிக் டைரக்டர் சைமன் கிங், கேமராமேன் உட்பட அனைத்து டெக்னீஷியன்களுக்கும் மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ளேன்”.

sasikumarசசிகுமார், “ஆண்ட்ரூ இக்கதையைச் சொல்லி முடித்ததும் அதில் வரும் கைதி மணி கேரக்டரில் நான் நடிக்கிறேனா என அவரிடம் கேட்டப்ப…இல்ல சார் சப்-இன்ஸ்பெக்டர் மூஸா ராசா கேரக்டர்னு சொன்னார்.போலீஸ்கேரக்டர்னா எப்பவுமே விறைப்பா நடக்கணுமா? முறைப்பா பார்க்கணுமான்னு கேட்டதும், அதெல்லாம் வேண்டாம் நீங்க கேஸுவலா நடந்தா போதும் நார்மலா பார்த்தா போதும்னு சொல்லிட்டார். மதுரைன்னாலே நம்மள ரவுடியாத்தான் காமிச்சிருக்காங்க. இதுல சப்-இன்ஸ்பெக்டர்னு சொன்னதும் உடனே ஓகேசொல்லிட்டேன். இந்த வெப் சீரிஸ் ரிலீசுக்குப் பிறகு நிறைய போலீஸ் கேரக்டர்களில் நடிப்பேன்னு நினைக்கிறேன். இந்த ‘வதந்தி சீசன் -2’வை சிறப்பாக கொண்டு வந்த புஷ்கர்-காயத்ரி, ஸ்ட்ரீமிங் பண்ணும் அமேசான் பிரைம் டீமுக்கு நன்றி”.

படத்தில் நடித்த மற்ற கலைஞர்கள் தங்களின் அனுபவங்களையும் வெப் சீரிஸின் சிறப்பையும் சுருக்கமாகப் பேசினார்கள்.

—   ஆண்டவர்

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.