கூகுள்பே-யில் கிராக்கி !
மலைக்கோட்டை மாவட்டத்தில் அம்மனுக்கு பெயர் போன திருத்தலத்தில், உள்ளூரை சேர்ந்தவர்கள் கிராக்கி அடிப்பது வழக்கம். வெளியூரிலிருந்து காரிலிருந்து குடும்பமாக இறங்கினால் போதும், அலேக்காக தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள். மணிக்கணக்காக வரிசையில் நிற்க அவசியமில்லை என்று சொல்லி, ஷார்ட்-கட் அம்மன் தரிசனத்துக்கு தலைக்கு ஆயிரம் குறையில்லாமல் மொட்டையும் அடித்துவிடுவார்கள். இப்போது இந்த கிராக்கி அடிக்கும் வேலையில் கோயில் பணியாளர்களே இறங்கிவிட்டதாக தகவல். இதனை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும் இதில் அடக்கம் என்பதாக பேச்சு. பணப்பட்டுவாடா எல்லாம், ஜிபே வழியாக கைமாறுகிறதாம்.
விழுப்புரத்தில் மிஸ்டர் ஒயிட் !
சர்ச்சைக்குரிய நிலம் பதிவான நாள் அன்று, துறைக்குப் பொறுப்பான துடிப்பான மிஸ்டர் ஒயிட் எங்கே இருந்தாருங்கிறதுதான் இப்போதைய ஹாட் டாபிக். மூனுநாள் விஷேசமாக வாக்கப்பட்ட ஊருக்கு வந்தவரு, முதல் நாளே கோட்டைக்கு அவசரமா போகனும், கருட வாகனம் இருக்கானு கேட்டவரு அது கிடைக்கலைனு, வண்டி கட்டி கிளம்பியிருக்காரு. பாதி தூரம் போனவரு, பாதுகாப்புக்கு வந்தவங்கள மட்டும் கோட்டைக்கு போக சொல்லிட்டு, விழுப்புரத்தோட டேக் டைவர்சன் போட்டவரு மறுநாள்தான் கோட்டைக்கு போய் சேர்ந்திருக்காரு. அந்த ஒரு நாளும் மிஸ்டர் ஒயிட்ட காணோனு கோட்டையே கலங்கித்தான் கிடங்கிச்சாம்.
ஓவரா கூவிட்டமோ?
எதிர்நாட்டு அரசனின் ஆலயத்தில் முக்கியப் புள்ளியா வலம் வந்தவருக்கு ஒத்தாசியா இருந்தாரு தேசப்பிதாவை தனது பெயரில் பாதியாகக் கொண்டவரு. போர்க்களம் வரைக்கும் கூட பயணிச்சவரு, வெற்றி வாகை சூடிய மன்னரோடு சென்றுவிட்டார். போன இடத்தில், பழைய மன்னரின் பராக்கிரமங்களையெல்லாம் நாடெங்கும் சேனல் முரசு கொட்டியிருக்கிறார். முரசுக்கு சொந்தமான கம்பெனியே இப்போ சேனலை முடக்கி வச்சிருக்காம். இதுவும் எதிரிநாட்டு சதினு உருட்டிட்டு இருக்காராம்.
கோட்டு சூட்டுக்கு வேட்டு !
மலையை கோட்டையாக கொண்ட மாவட்டத்தில், பசையாய் உள்ள தொழில் பார்ட்டிகள் அவ்வப்போது மண்டபத்தில் ஒன்றுகூடி பார்ட்டி வைப்பது வழக்கமானதுதான். முன்னாடியெல்லாம், தொழிலை எப்படி விருத்தி பன்னலானு பேசிட்டு இருந்தாங்க. இப்போலாம், ஆள போட்டு, கம்பெனி நடத்தி, பிசினஸ் பன்னி சம்பாதிக்கிறதுக்குள்ள உசுரு போயிட்டு உசுரு வந்துடுது. பேசாம, ரிஸ்க்கே இல்லாம ரஸ்க் சாப்டுற ஐடியானு லம்பா முதலீடுத்திட்டம்னு கபளீகரம் பன்ற வேலைதான் நடக்குதாம். ஆல்ரெடி ரெண்டு கேசாயிடுச்சு. ஆனாலும், கோட்டு சூட்டுக்குள்ள வச்ச கைய வெளிய எடுக்காமதான் கடந்து போறாங்களாம்.
வெள்ளையை கண்டால் பயம் !
கோட்டை மாநகருக்கு பொறுப்பான பெண் காக்கி அதிகாரி தனது சகாக்களையெல்லாம் கூட்டி கூட்டம் ஒன்ன நடத்தியிருக்காரு. ”சொல்றத நல்லா கேட்டுக்கோங்க… நிலமை முன்னமாதிரி இல்ல… எல்லாரும் கையில காமிரோவோடதான் வர்றாங்க … போறாங்க … எசகுபிசகா சிக்கிட்டு, என்கிட்ட கைய கட்டிகிட்டு நின்னா, ஒன்னும் செய்ய முடியாது … பாத்து சூதானமா இருந்துக்கோங்க”னு அட்வைஸ் செஞ்சி அனுப்பியிருக்காராம். முன்னெல்லாம் பேனா காரனுக்கு மட்டும்தான் பயந்தோம். இப்போ வெள்ளையும் சொள்ளையுமா வந்தாலே டர்ராகுதேனு ஒரே புலம்பலாம்.
குப்பைக்குள் கஜானா !
இரு துருவமா இருந்த மாவட்டத்தில், ஒரு துருவத்தை சாய்ச்ச சர்ச்சை பேச்சுக்கு பெயர்போன ஆளும்கட்சி எம்.எல்.ஏ. இவரு. மாவட்டத்துல மலையா தேங்கிக்கிடக்கிற குப்பைகளை குவாரி பள்ளத்துல கொட்டலாமேனு இவரு சொன்ன ஆலோசனையை வச்சி செஞ்சிட்டாங்களாம். ஆனால், க்ளீன் பன்றதுக்குனு இத்தனை கோடி துட்டை கொடுத்தா, அவன் அதை அத்தனை கோடிக்கு விலை பேசிட்டு திரியுறானு மக்கள்ட்ட வெள்ளந்தியா பேசின வீடியோ வைரலாகியிருச்சு. கூர்க்கா மாதிரி குனிஞ்சி நிமிந்து சலாம் போட்டாலே, கட்டுக் கட்டா எடுத்து வீசுதாம் குப்பை அள்ள வந்த குரூப். அப்படி அந்த குப்பைக்குள்ள என்னதான் இருக்கும்?னு வாயைப் பிளந்து கிடக்கிறதாம் மொத்த மாவட்டமும்.
தென்பாண்டி ”சீமை” யிலே…!
ஐந்து எழுத்து சீமை மாவட்டத்தில் சரித்திரப்பதிவேடு குற்றவாளியான 20 வயது இளைஞர், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாவட்டத்துக்கு பக்கத்துல ஆக்சிடெண்ட்ல இறந்துபோனதா கேசு போட்ருக்கு பக்கத்து மாவட்ட காக்கி. உடம்புல ஒரு காயம் இல்ல. சாவுல மர்மம் இருக்கு. கஞ்சா கேசுனு கூட்டிட்டு போயிட்டு காக்கிகாரங்கதான் அடிச்சு கொன்னுட்டாங்கனு குடும்பமே கொதிச்சிக்கிடக்காம். ஜெயில்ல இருந்த திரும்புற அண்ணன், தம்பியின் சாவுக்கு நீதி கேட்டு இன்ஸ்டாவில் தலை சிதறும்னு போஸ்ட் போட்டு தெறிக்க விட கதிகலங்கி கிடக்காம் சீமை மாவட்டம்.
முடிஞ்சா தொட்டுப்பாரு !
முன்னாள் பெண் முதல்வரின் உதவியாளர் என்று சொல்லிக்கொண்டு, ஊர் ஊராக நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறான் தலைநகரைச் சேர்ந்த அந்த மூன்றெழுத்து ஆசாமி. கோட்டையில் அவரைத் தெரியும், இவரைத் தெரியும். இத்தனை எல். கொடுத்தா, இந்த போஸ்டிங். அட்வான்ஸ் கொடுத்தா இப்பவே பேசி முடிச்சிடுறேனு … போதை தெளிய தெளிய பேசி கறந்திருக்காரானாம். பைசா வாங்கி அஞ்சு வருஷம் ஆனாலும், கலங்காமல் பதில் சொல்லி வர்றானாம். வேலையும் கிடைக்கல கொடுத்த பணமும் திரும்ப வரலைனு போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்பிட்டிருக்காம் பாதிக்கப்பட்ட குரூப்.
சாமி “யாரு”?
கோயில் அமைச்சரா வலம் வர கை கொடுத்த மாவட்டத்துலேயே, கோயில் நிலத்தை ஆட்டையபோட துடிச்சிட்டு இருக்காம் ஒரு குரூப். நாங்களும் ஆன்மீக சேவைதான் செய்றோம். காலம் காலமா எங்க அனுபோவத்துலதான் இருக்கு. குறுக்க வந்தா அவ்வளவுதான்னு தண்டத்த தூக்குதாம் அந்த குரூப். ஆயிரம்கால் மண்டபத்தை ஆக்கிரமிச்சி நர்சரி ஸ்கூல்னு நாளுக்குநாள் அட்ராசிட்டி தாங்கலையாம். கோயில் அதிகாரியா யார் வந்தாலும், இவங்கள மீறி எதுவும் பன்ன முடியாதுங்கிறதுதான் எழுதப்படாத விதியாம். இப்போதைக்கு புதுசா வந்திருக்கிற, மூன்றெழுத்து படிப்பு அதிகாரிதான் நம்பிக்கை ஒளியா தெரியுறாங்களாம்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.