அங்குசம் சேனலில் இணைய

இது வேலைக்கே ஆகாது … பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகத்தான் மாறும் … கொந்தளிக்கும் டாஸ்மாக் பணியாளர்கள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

டாஸ்மாக் கடைகளில் காலிபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைய கோரி மதுரையில் டாஸ்மாக்  ஊழியர்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காலி பாட்டில்கள் சேதம் அடைந்தால், யார் பணம் கட்டுவது, பணியாளர்கள் இல்லாமல் பாட்டிலை சேமிப்பது பிரச்சனை உள்ளது  என சரமாரி குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள். மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்தில் காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டம் இன்று (செப்-01) முதல் டாஸ்மாக் நிர்வாகம் அமுல்படுத்தபட்டது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

Madurai collector officeஇந்நிலையில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்களின் கூட்டுக்குழு சார்பாக  காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தில் காலிபாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தில் உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமலும் கால அவகாசம் வழங்காமல் உடனடியாக செயல்படுத்துவதால், டாஸ்மாக் பணியாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும்; விற்பனை விலையை விட கூடுதலாக ரு10 வசூலிக்கும் போது டாஸ்மாக் பணியாளர்களுக்கும் மதுப்பிரியர்களுக்கும் பிரச்சனைகள் ஏற்படும் எனவும்; டாஸ்மாக் ஊழியர்கள் காலிபாட்டில்களை சேகரித்து வைத்து கையாளும் போது உடையும் பாட்டில்களுக்கு இழப்பீடு தொகை பற்றி கூற வேண்டும்; காலிபாட்டில்களை வைப்பதற்கான போதிய இடம் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்.

Madurai collector officeகாலி பாட்டில்களை திரும்பப்பெரும்  திட்டத்தால், டாஸ்மாக் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதோடு, சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படும் எனக் கூறி டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி  அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பாக மதுரை மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள ஏராளமான டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் மற்றும் மாநகர் பகுதியில் பூட்டிய மதுபான கடைகளுக்கு சென்ற மதுப்பிரியா்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். இதனால் மன மகிழ்  மன்றங்களுக்கு செல்லும் மதுப்பிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடையை அடைத்த பின்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த டாஸ்மாக் அனைத்து தொழிலாளர் கூட்டுக்குழு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சந்தித்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

டாஸ்மாக் அனைத்து தொழிலாளர்கள் கூட்டுக்குழு சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சந்தித்து பாட்டில்கள் திரும்பப்பெறும் சட்டத்தின் டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும் என மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து மதுரை மண்டல டாஸ்மாக் மேலாளரை சந்தித்து பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தினால், டாஸ்மார்க் ஊழியர்களுக்கு ஏற்படும் சிரமம் குறித்தும் டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் மனுஅளித்தனர்.

இது குறித்து பேசிய டாஸ்மாக் ஊழியர்கள் சங்க நிர்வாகிகள், “ காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தின் காரணமாக, மது பிரியர்களுக்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும்; இத்திட்டத்தில் நீதிமன்றம் அளித்த வழிகாட்டு முறைகளை முறையாக பின்பற்றப்படவில்லை எனவும்; டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களை வைப்பதற்கான போதிய இடம் இல்லை. ஏற்கனவே ஒப்பந்தம் எடுத்த நபர்களுக்கும் ஊழியர்களுக்கும்  இடையே சண்டை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும்; நிர்ணய விலையோடு சேர்த்து பாட்டிலை திரும்ப பெறுவதற்கான திட்டத்திற்கு 10 ரூபாய் எடுக்கப்படும் போது வாடிக்கையாளர்களுக்கும் மதுக்கடை ஊழியர்களுக்கும் இடையே சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும்;  இது போன்ற திட்டத்தால் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சல் ஏற்படும் நிலை உள்ளதால் காலி பாட்டில்களை வாங்கும் போது உடையும் பாட்டில்களுக்கு யார் பொறுப்பேற்பார்கள்?” என கேள்வி எழுப்புகிறார்கள்.

டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக, மாவட்ட ஆட்சியரையும், மதுரை மண்டல மேலாளரையும் சந்தித்து முறையிட்டுள்ளோம். அவர்கள் அளிக்கும் பதிலை பொறுத்து கடைகளை திறப்போம் இல்லை என்றால் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

 

    —    ஷாகுல், படங்கள் : ஆனந்தன்   

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.