படிப்பு தந்த படிப்பினைகள் – ஆசிரியரும் வழிகாட்டுதலும். ஹோட்டல் துறை என்றொரு உலகம் பகுதி – 8

1

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஹோட்டல் துறையில் வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன என்ற தகவலுடன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை உலகத்தில் எங்கெல்லாம் படிக்கலாம்? முக்கியமாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் ஆகச்சிறந்தகல்லூரிகள் எவை என்றும் கடந்த இதழில் நாம் பார்த்தோம். இனிவரும் தொடர்களில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பில் உள்ள சுவாரஸ்யங்களையும் படித்து முடித்த பின் கிடைக்கும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளைப் பற்றியும் காண்போம்.

ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்கும்பொழுது நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சமையல் வகுப்பு வந்தது. 1996-இல் முதல் மெனு எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. Rice, Drum Stick Sambar, Rasam, Cabbage Poriyal, Semiya Payasam இதைச் செய்யவே கடினமாகத்தான் இருந்தது. ஆம், உலகில் சற்று அதிக நேரம் செய்யும் உணவுமுறை நமது தென்னிந்திய உணவு முறையாகும்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

நமது உணவு தயாரிக்கக் கற்றுக் கொண்டால் உலகின் மற்ற உணவின் முறையை எளிமையாக கற்றுக் கொள்ளலாம்.

ஹோட்டல் துறை -பகுதி – 8
ஹோட்டல் துறை -பகுதி – 8

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

எங்கள் இரண்டாவது சமையல் வகுப்பில் Rice, Pulikkolambu, Rasam, Kootu, Dal Payasam ஆகியவை இருந்தது. இதனைப் பற்றி நாங்கள் படிக்காமல் வகுப்புக்கு வந்ததால், வெளியே இருக்கச் சொல்லிவிட்டார் எங்கள் ஆசிரியர். மதியம் சாப்பிட மட்டும் வாங்க என கூறிவிட்டார். அதாவது, நாங்கள் செய்ய வேண்டிய செயலை எங்கள் ஆசிரியர் செய்து எங்களை சாப்பிட மட்டும் வரச் சொன்னார்.

இது எங்களுக்கு மிகப்பெரிய தண்டனை ஆகும். ஆம், வேலை செய்யாமல் சாப்பிடுவது என்பது எவ்வளவு கொடுமை என்பதை எங்கள் ஆசிரியர் புரிய வைத்தார். அன்று முதல் நாங்கள் ஒவ்வொரு வகுப்புக்கும் வருவதற்கு முன்பே படித்து விட்டுதான் சென்றோம்.

அடுத்தவர் உழைப்பில் சாப்பிடுவதும்; அதேபோல் நாம் சமைத்த உணவு பிடிக்காமலோ, நம் சேவை பிடிக்காமலோ நம் சாப்பாட்டை அடுத்தவர் சாப்பிடாமல் செல்வதும் மிகவும் வருத்தத்தை கொடுக்கும். இவ்வாறு மிகச் சிறந்த குணங்களை எங்கள் ஆசிரியர்கள் எங்களுக்கு அனுபவபூர்வமாக புரிய வைத்தார்கள்.

ஹோட்டல் துறை கடந்த கட்டுரையில் கல்லூரிகள் பற்றி எழுதி இருந்தேன். எப்போதும் அங்குசம் இதழ் தயாரிப்பின் போது, அந்த கட்டுரைக்குரிய பொருத்தமான படங்களை தேர்ந்தெடுத்து வடிவமைப்பார்கள். சென்ற இதழில் வெளியான எனது கட்டுரையில் இடம்பெற்றிருந்த அந்த புகைப்படம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. எனக்கு எப்படி உடை உடுத்த வேண்டும், டை கட்ட வேண்டும், இண்டர்வியூவில் பேச வேண்டும் என முதன் முதலில் கற்றுக் கொடுத்த, எனது கேட்டரிங்படிப்பின் முதல் ஆசான் கார்த்திகேயன் வகுப்பு மாணவர்களோடு அமர்ந்திருந்த அந்த படம்தான் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

ஒரு ஆசிரியர் தன் மாணவன் எப்பொழுதும் வளர வேண்டும் என நினைக்க வேண்டும் என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம் ஐயா கார்த்திகேயன்தான். நான் 1999-இல் என்ன செய்ய வேண்டும் என வழிகாட்டினார். பின் அவ்வப்போது காலத்திற்கேற்ப வழிகாட்டினார். இன்றும் 2025 லும் எனது நிறுவனமும் நானும் எவ்வாறு முன்னேற வேண்டும் என வழிகாட்டுகிறார். அவரை மரியாதையுடன் நினைவு கூறுகிறேன்.

இப்படி நமது வாழ்வை சிறக்க வைக்கும் படிப்பும் ஆசிரியர்களும் தந்தது ஹோட்டல் மேனேஜ்மெண்ட் & கேட்டரிங் படிப்புதான்.

ஒழுக்கத்தை முறையாகக் கற்றுத் தந்த படிப்பு இது. முதல் ஆண்டில் எங்களுக்கு ஒரு நட்சத்திர ஹோட்டலில் என்னென்ன துறைகள் இருக்கும் என கற்றுத் தந்தார்கள். அதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு துறையிலும் என்னென்ன பதவிகள் உள்ளன எனவும் சொல்லிக் கொடுத்தார்கள். அதன் மூலம் நாங்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்தால் எப்படி வளர்ச்சி அடைய முடியும் என்பதை நன்கு அறிய முடிந்தது. இந்த பாடத்திட்டம் இன்றளவும் இக்கல்வியில் உள்ளது.

ஹோட்டல் துறை ஒரு படிப்பு படித்தால் அதில் எங்கு வேலைக்கு சேர்வது, எப்படி வளர்வது என்பதைச் சொல்லித் தரும் சிறந்த படிப்பு இதுவாகும்.

நாம் ஆறாவது பகுதியில் குறிப்பிட்டிருந்தது போல Food Production (Basic, Quantity & Advanced – theory & practical), F&B Service (Food, Beverage & Advanced – theory & practical), Front Office – theory & practical, Housekeeping – theory & practical, Hotel Engineering, Hotel Accounts, Food Science & Microbiology, Computer Applications, Food & Beverage Management, Communicative English, Tourism, Marketing, Human Resources, Facility Planning and six months training,என பல பாடங்கள் வாழ்க்கைக்கும் வேலைக்கும் உதவியாக ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பில் உள்ளன. இவற்றின் மூலம் என்ன துறைக்கு வேலைக்கு செல்லலாம் என்பதை அடுத்த தொடரில் காணலாம். அதிலும், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் செஃப் (சமையல் கலைஞர்) வேலைக்கான வேலை வாய்ப்புகளை அடுத்த தொடரில் காணலாம்.

 

தொடரும் …

— கபிலன்.

NCHM JEE என்று குறிப்பிடப்படும் இந்தியா முழுவதிலுமுள்ள மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் கேட்டரிங் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தேர்வு நடைபெறும் நாள் : 27.04.2025

நேரம் : பகல் 11.00 முதல் மதியம் 2.00 வரை

ஆன்லைனில் விண்ணப்பிக்க : 16.12.2024 முதல் 15.02.2025 மாலை 5.00 மணி வரை.

ஆன்லைனில் கட்டணம் செலுத்த கடைசி தேதி : 15.02.2025 இரவு 11.50 வரை

ஆன்லைன் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள : 17.02.2025 முதல் 20.02.2025 வரை.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு : https://exams.nta.ac.in/NCHM/ என்ற தளத்தை அணுகவும்.

 

ஹோட்டல் துறை என்றொரு உலகம் தொடா்-  7 ஜ படிக்க

ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பிற்கு சிறந்த கல்லூரிகள் ! ஹோட்டல் துறை என்றொரு உலகம் பகுதி –7

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.