“கோயில் திருவிழா அழைப்பிதழ்களில் சாதி, சமூகப் பெயர்களைக் குறிப்பிடக்கூடாது” உயர்நீதிமன்றம் தீர்ப்பு !
“கோயில் திருவிழாக்களின் அழைப்பிதழ்களில் நிகழ்ச்சிகளை மட்டுமே அச்சிட வேண்டும், சாதி, சமூகப் பெயர்களைக் குறிப்பிடக்கூடாது”
பட்டுக்கோட்டை அருள்மிகு நாடியம்மன் திருக்கோயில் பெருந்திருவிழா ( W.P.(MD) No. 1697 of 2025 Dt 17.02.2025 ) வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு.
“ கோயில் திருவிழாக்கள் இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாகக் கொண்டாடப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம், இந்த வரையறையின்படி, பட்டியல் சாதியினரும் இதில் அடங்குவர். நிதி பங்களிப்புகளின் அடிப்படையில் கோயில் அழைப்பிதழில் குறிப்பிட்ட சாதிப் பெயர்களைப் பட்டியலிடும் நடைமுறை தேவையற்றது.
குறிப்பாக பட்டியல் சாதியினர் திருவிழாவுக்கு நிதி பங்களிப்புகளைச் செய்யவில்லை என்ற அடிப்படையில் அவர்கள் பெயரை அழைப்பிதழில் குறிப்பிடாமல் விலக்குவது நியாயப்படுத்தப்படுகிறது. எனவே, பெருந்திருவிழாவிற்கான அழைப்பிதழில் நன்கொடையாளர்கள் அல்லது ஆதரவாளர்களின் பெயர்களைக் குறிப்பிடுவது தேவையற்றது.” எனவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இந்தத் தீர்ப்பின் நகலை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் @PKSekarbabu அவர்கள் அந்தத் துறையைச் சேர்ந்த அனைத்து நிர்வாக அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும்.
உயர்திரு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் இந்தத் தீர்ப்பின் நகலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில விழிப்பு கண்காணிப்புக்குழு ( SVMC) உறுப்பினர் ரவிக்குமார் அவா்கள் தொிவித்துள்ளார்.