சாமி ஊர்வலத்தில் குத்தாட்டம் போட்ட கோயில் குருக்கள் !
கோவில் திருவிழாவின் போது அர்ச்சகர்கள் ஆர்வமிகுதியில் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று வைரலாகி இணையவாசிகள் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், மந்தாசா என்ற கிராமத்தில் ஸ்ரீ வாசுதேவ பெருமாள் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 23-ஆம் தேதி பிரம்மோற்சவ விழாவின் போது சாமி ஊர்வலம் நடைபெற்றது அப்போது பக்தி இசை முழங்க தேர் பவனி சென்றது.
அந்த ஊர்வலத்தின் போது, பக்தி பாடல்களை ஒலிபெருக்கியில் அலறவிட்டபடி சென்கிறது அப்போது பெருமாள் சிலை முன்பு அர்ச்சகர்கள் திடீரென பக்தி பரவசமடைந்து . அலறிய இசைக்கு ஏற்றவாறு நடனமாடுகிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அதில் காவி உடை அணிந்த ஒரு அர்ச்சகர் தரையில் தாண்டால் எடுத்தும் . கையை முறுக்கி பம்பரம் போல் சுழன்று பல வித்தைகளை காட்டி “பிரபுதேவா போல் பிரேக் டான்ஸ் ஆடினார் . இதனை கண்ட வெள்ளை உடை அணிந்த மற்றொரு அர்ச்சகர் அவருக்கு போட்டியாக நின்றபடியே கைகளை அங்குமிங்கும் அசைத்து இடுப்பை ஆட்டி வளைத்து நெளிதது அவருக்கு டப் கொடுக்கிறார்.

திருவிழாவில் திரண்ட பக்தர்களும் அவர்களை உற்சாகப்படுத்தி ஆரவாரம் செய்து ரசித்து தாளம் போட்டபடி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாகக்கி விட்டுள்ளனர்.
இந்த வீடியோவை பார்த்த சிலர் ” இது பிரபுதேவாவின் பிரேக் டான்ஸ் என்றும்” இல்லை இது ரம்பா ஆடும் சம்பா அல்லது சல்சா நடன வகையைச் சேர்ந்தது என்றும், பலர் இதெல்லாம் “இவாளுக்கு தேவைதானா ? என பலவிதமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.
— மணிகண்டன்.