செயின்ட் ஜோசப் கல்லூரியில் சமூக மேம்பாட்டுச் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கல்வி பணியின் வழியாக சமூக மேம்பாட்டுச் செயல்பாடுகள் குறித்த மாணவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக கல்வி பணியின் வழியாக சமூக மேம்பாட்டுச் செயல்பாடுகள் குறித்த மாணவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் கல்லூரி வளாகத்தில் உள்ள சமூதாய கூடத்தில் நடைபெற்றது.

இனிய ரமலான் வாழ்த்துகள்

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலர் அருள்முனைவர் அமல் சே ச மற்றும் துணை முதல்வர் அருள்முனைவர் கில்பர்ட் கமெலஸ் சே ச ஆகியோர் தலைமை தாங்கி இந்நிகழ்ச்சியில் பங்கேடுக்கும் கல்வி குழுக்கள் செப்பர்டு பணி செய்ய கூடிய கிராமத்தில் உள்ள குழந்தைகளை கல்வியில் வளர்ச்சி அடைய செய்து முழு கல்வி அறிவு பெற்ற கிராமமாக மாற்ற வேண்டும் என்று கூறினார்கள்.

விழிப்புணர்வு கூட்டம்
விழிப்புணர்வு கூட்டம்

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே ச மற்றும் முதுநிலை ஒருங்கிணைப்பாளர் ஜெயசந்திரன் இந்நிகழ்ச்சியில் நிடித்த நிலைத்த இலக்கு பற்றி தொடக்கவுரையாற்றினார்கள்.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணி நிறைவு பெற்ற முதல்வர் சிவக்குமார் அவர்கள் கல்வி மேம்பாட்டில் சமூகத்தின் பங்களிப்பு பற்றியும் மாணவர்கள் சமூக முன்னேற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தனது கருத்துரையில் கூறினார்.

விழிப்புணர்வு கூட்டம்
விழிப்புணர்வு கூட்டம்

கதை சொல்லி மற்றும் எழுத்தாளாரான பேராசிரியர் கார்த்திகா கவின் குமார் அவர்கள் தனது கருத்துரையில் கதைகள் சார் கல்வி  சூழலுக்கு ஏற்ப கற்பித்தல் முறை கதைகள் வழியே மொழி ஆற்றலை வளர்த்தல் குரல் வேறுபாடு கல்வி கதைகள் இவற்றின் வழியாக கிராமத்தில் உள்ள குழந்தைகளை எவ்வாறு படிப்பில் ஈடுப்பட்டுடனும் கவனமுடனும் புரிந்;து கொள்ளும் ஆர்வத்தை கொண்டு வருவது பற்றி  விளக்கி கூறினார்  மேலும் மாணவர்களின் கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளித்தார்கள்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வந்தவர்களை  ஒருங்கிணைப்பாளர்கள் யசோதை வரவேற்றார். முடிவில்  ஒருங்கிணைப்பாளர் ஜோசப் கிறிஸ்து ராஜா நன்றி கூறினார். ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பணிமுறை ஒன்று மற்றும் இரண்டின் கல்வி குழுகளின் மாணாக்கர்கள் 401 பேர் கலந்து கொண்டார்கள் தொழில் நுட்ப உதவிகளை அமலேஸ்வரன் செய்திருந்தார்.

 

—  அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.